தரரந்தன் தந்தந்தன்...
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா...
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே
வண்ணப் பூங்கா...பூங்கா...வண்ணப் பூங்கா
வெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோ வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ (2)
விண்மீங்களைக் கேட்டால் அண்ணன்கள் எல்லாம் பறித்துப் பறித்துத் தருவார்கள்
நான் வானவில் கேட்டால் ஏணியிலேறி ஒடித்து ஒடித்துத் தருவார்கள்
ஒற்றைத் தங்கை எனக்காக ஊரைத் தருவார்கள்
ஓ இன்னுயிர் போலென்னைக் காப்பதும் ஏனோ
ஓஓ...இன்னொருவன் கையில் என்னை ஒப்படைக்கத் தானோ
பெண்கள் வாழ்வே ரெட்டை வாழ்வோ ரெட்டை வாழ்வோ
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள்
பூங்கா பூங்கா வண்ணப் பூங்கா
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
வெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோ வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ
அன்னையின் மடியினில் ஓரிடம் தேடி தந்தையின் தோள்களில் சில பொழுதாடி
அண்ணன்கள் மார்பினில் கவிதைகள் பாடி...வாழ்வே கனவா
பெண்ணினம் ஒருவகை பூச்செடியாகும் வேருடன் பெயர்ந்தொரு வேறிடம் போகும்
நிறமற்ற ஒரு இடம் நிரந்தரம் ஆகும்...கனவே வாழ்வா
நானுமென்ன ஒரு பூச்செடியா இந்தப் பூச்செடிக்கு இதயம் இல்லையா
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே
அண்ணன்களோ எந்தன் உயிர்தானே
வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா
எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா
வெண்ணிலா வெண்ணிலா தங்கையானதோ வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ (2)
Jodi - Vanna Poongaavaippoal