தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா
திரு திரு திருன்னு முழிப்பது ஏன்?
தஞ்சாவூரு ராணி தஞ்சாவூரு ராணி
குரு குரு குருன்னு பார்ப்பது ஏன்?
பூவா தலையா போட்டு பார்த்தால்
பூவொன்னு விழுந்தது தலையிலே
காயா பழமா கேட்டுப் பார்த்தால்
காயொன்னு கனிஞ்சது கனவிலே
இனி ஒண்ணும் ஒண்ணும் ஒண்ணா
சேர்ந்து மூணா ஆயிடும்
தேசிங்கு ராஜா ...
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே ஓ ஓ
நெனப்புக்கு அளவில்லே
கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே ஓ ஓ
கனவுக்கு விலையில்லே
என் மனதில் பாய் மரங்கள் விரியும்
இந்த கப்பல் எந்த திசை அடையும்
என் இதயம் மும்மடங்கு துடிக்கும்
உன் மனதின் பாரம் எண்ணி கரக்கும்
வினா கேட்டேன் விடை வருமே தானா
ஆடும் புலி ஆட்டத்திலே ஓ ஓ
ஓடும் புலி பக்கத்திலே
ஓட்டைப்பானை திட்டத்திலே ஓ ஓ
வழியுதே கூட்டத்திலே
என் இதயம் ரயிலும் செய்யும் கலகம்
அது இருப்பு பாதை விட்டு விலகும்
தளைகளை திரும்பியிடும் சரியா
திரிசிங்கு சொர்க்க நிலை இதுதானா
வினா கேட்டேன் விடை வருமே தானா
தேசிங்கு ராஜா ...
ஹேய்.. சின்ன பொண்ணு
சிரிச்சா நட்சத்திரம் பரிச்சா
நிச்சயத்தை முடிச்சா மேளம் கொட்டட்டும்
சண்டைக்காயே எட்டணா சுமைகூலி பத்தணா
பொண்ண நாங்க கட்டுனா நகை தரணும்
சும்மா ஆடாதே சோழியன் குடுமி
எத்தன பவுன் வேணும் வாங்கிக்க
குல்லா போடாதே மாப்பிள்ளை முறுக்கு
ஜில்லாவுல பாதி தானிப்பிரிக்கணும்
இனி ஒண்ணும் ஒண்ணும் ஒண்ணா சேர்ந்து
மூணா ஆயிடும்
தேசிங்கு ராஜா ...
Dumm Dumm Dumm - Desingu Raja