ரங்கோலா ஹோலா ஹோலா
பெண்ணே நீ தானோ
உனை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட
வண்ணம் நான் தானோ
ரங்கோலா ...
கோமள வள்ளி வள்ளி
கண்களால் கொல்லும் வில்லி
திரும்பினால் நிக்க சொல்லி
வச்சு விடவா மல்லி
காத்தவ ராயா ராயா
மல்லிப்பூ வேணாம் போயா
மாலைய வாங்கித்தாயா
என்னை நீ தோளு மேலே தூக்கிப் போயா
ரங்கோலா ...
ஓ நிலா நிலா பறந்து வாயேன்
உலகினை மறந்து வாயேன்
அழகினால் நெருங்கி வாயேன்
அலை அலையாய்
தொடாமலே அணைக்குறாயே
தடால் என இழுக்கிறானே
விடாமலே துரத்துறானே
அடாவடியா
நான் ஒரு தல ராவணன் புள்ள
உனை மணந்திட உடைக்கவா வில்ல
குருங்கடல் போல கொதிக்குது ஆசை
குளிக்கலாம் வா மெல்ல
என் இடுப்புல குலுங்குது சாவி
அத வெடக்குன்னு எடுக்கிற பாவி
கைகளை தொட்டு கசமுசா செஞ்சா
கத்திடுவேன் கூவி
ஓ ரங்கோலா ...
இளமையை வருடுவானே
இதயத்தை திருடுறானே
உயிரினை நெருடுறானே சுகம் சுகமா
ஓ தளிர் என இருக்குறாளே
பளீர் என சிரிக்குறாளே
சுளீர் என முறைக்குறாளே
அழகழகா..
உன் மரக்கட வண்டி மீது
நான் மெனக்கெட்டு ஏறும் போது
கட கட என்று தட தட என்று
இழுத்தவன் நீதானே
நான் சடுகுடு ஆடும் போது
நீ தொடுகிற எல்லைக் கோடு
விடு விடு என்று பட பட என்று
பறந்தவள் நீ தானே
ஓ ரங்கோலா ...
Ghajini - Rangola