ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபட தடதட சடசடவென சிதறுது
சின்னச்சின்ன மத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியிழைல் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்
சக்கரவாகப் பறவை ஆவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ
(சின்னச்சின்ன )
சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதாநியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கண்ணிஎன் பாதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது
(சக்கரவாகமோ )
மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் (2-)
(சக்கரவாகமொபட்ட )
(சின்னச்சின்ன)
En Swasa Kaatre - Chinna Chinna Mazhai Thuligal