Pages

Search This Blog

Tuesday, October 15, 2013

சில்லுன்னு ஒரு காதல் - நியூயார்க் நகரம்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை

நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ.....

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது

நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா

சில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ
வா அன்பே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிகட்டி போல மாறும் ஏ....ஏ....

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

Sillunu Oru Kaadhal - New York

Followers