Pages

Search This Blog

Wednesday, October 16, 2013

பச்சைக்கிளி முத்துச்சரம் - கருகரு விழிகளால்

கருகரு விழிகளால்
ஒரு கண்மை என்னைக் கடத்துதே
ததும்பிடத் ததும்பிட
சிறு அமுதம் என்னைக் குடிக்குதே
இரவினில் உறங்கையில்
என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில்
ஒரு மின்னல் வந்து சாய்க்க

நீ ஒரு மல்லிச்சரமே
நீ இலைசிந்தும் மரமே
என் புது வெள்ளிக்குடமே
உன்னைத்தேடும் கண்கள்
ஏன் நீ தங்கச்சிலையா
வெண் நுரை பொங்கும் மலையா
மன் மதன் பின்னும் வலையா
உன்னைத்தேடும் கண்கள்

புதுப்புது வரிகளால் என் கவிதைத்தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா
(நீ ஒரு மல்லிச்சரமே)

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறுநாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும்போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகைபோலே கள்ளத்தனம் ஓடும்
நீரே இல்லா பாலையிலே
நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி
தொடர்ந்திடும் பிழை பிழை
(கருகரு விழிகளால்)

தாமரையிலை நீர் நீதானா
தனியொரு அன்றில் நீதானா
புயல்தரும் தென்றல் நீதானா
புதையல் நீதானா

தாமரையிலை நீர் நீதானா ஒரு மல்லிச்சரமே
தனியொரு அன்றில் நீதானா இலைசிந்தும் மரமே
புயல்தரும் தென்றல் நீதானா புது வெள்ளிக்குடமே
புதையல் நீதானா (மதன் பின்னும் வலையா
ஒரு மல்லிச்சரமே

Pachaikili Muthucharam - Karu Karu vizhikalal

Followers