Pages

Search This Blog

Friday, October 11, 2013

காக்க காக்க - உயிரின் உயிரே

உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
நகரும் நெருப்பாய்க் கொழுந்துவிட்டெரிந்தேன்
அணைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலைப்பனியாக என்னை வாரிக்கொண்டாய்
நேரம்கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அணைத்துக் கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின் உயிரே)

சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்திச்செல்ல
கனவு வந்து கண்ணைக்கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரைத் தேடும்
விலகிப்போகாதே தொலைந்து போவேனே
நான் நான் நான்
(உயிரின் உயிரே)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணைமுறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள் தாராயோ
நீ நீ நீ
(உயிரின் உயிரே)

Kaakha Kaakha - Uyirin Uyirae

Followers