பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
(பன்னீரில்)
வசந்தம் வரும் காலம்
விழியில் வண்ணக் கோலம்
கூ.கு....குக்குக்கூ.
கூ.கு....குக்குக்கூ.
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே..
(பன்னீரில்)
நானுமோர் தென்றல் தான்
ஊரெல்லாம் சோலை தான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்
மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்
தந்தனத் தான தன
தந்தனத் தானனா
இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது
(பன்னீரில்)
மாளிகைச் சிறையிலே
வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது
வாசலும் திறந்தது
பறந்ததே கிள்ளையே
தந்தனத் தான தன
தந்தனத் தானனா,
நிலவும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம்
(பன்னீரில்)
uyire unakkaga - Panneeril nanaindha pookkal