சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே துள்ளித்துள்ளிப் போகுதே
புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும் அள்ளி அள்ளிப் பருகுதே
என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா
இன்று காணும் நானும் நானா
உன் பேச்சில் என்னை வீழ்த்திச் செல்லாதே
ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
ஒண்ணே ஒண்ணு சொல்லணும்
உன் முகத்தைப் பார்த்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்கக் கூடாதா
நானும் மாறிப் போனதேன்
என் நளினம் கூடிப் போனதேன்
அது தெரிந்தால் நீயே சொல்லக் கூடாதா
ஓ வாஹா ஓ வாஹா யாரை நான் கேட்பேன்
நீ சொல்வாயா
(என்னைக் கொஞ்சம்)
வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு
ஒருமுறைகூட நின்று ரசித்ததில்லை
இன்றுமட்டும் கொஞ்சம் நின்று
ஒரு பூவைக் கிள்ளிக்கொண்டு
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை
நீ கிள்ளும் பூக்களே நான் சூடிக் கொள்ளவே
என்கின்ற எண்ணம் இன்று வந்தாச்சே
ஆனாலும் நேரிலே எப்போதும்போலவே
இயல்பாகப் பேசிப்போவது என்றாச்சே
(என்னைக் கொஞ்சம்)
என்னை இங்கே வரச்செய்தாய்
என்னெனவோ பேசச்செய்தாய்
புன்னகைகள் பூக்கச்செய்தாய் இன்னும் என்ன
அருகினில் அமர்ந்தென்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துருதுரு பார்வைக்குந்தான் அர்த்தம் என்ன என்ன
என் பார்வை புதுசுதான்
என் பேச்சும் புதுசுதான்
உன்னாலே நானும் மாறிப்போனேனே
கூட்டத்தில் என்னைத்தான்
உன் கண்கள் தேடணும்
என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே
(என்னைக் கொஞ்சம்)
Kaakha Kaakha - Ennai Konjam