Pages

Search This Blog

Tuesday, October 22, 2013

தாண்டவம் - யாரடி யாரடி மோகினி

யாரடி யாரடி மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்
நிலா போலவே உலா போகிறாய்
நிழல் வீசியே புயல் செய்கிறாய்
கருங்கூந்தலில் வலை செய்கிறாய்
குறும் பார்வையில் கொலை செய்கிறாய்

கண்ணாடி இவள் பார்த்தால் கவிதை என்று சொல்லும்
வேராரும் பார்க்கும் முன்னே கண்ணை மூடி கொள்ளும்
ஒரு கோடி பூக்கள் கொய்து
அதில் தேனை ஊற்றி செய்தாய்
இவள் தேவதை, இதழ் மாதுளை
இவள் பார்வையில், சுடும் வானிலை
சுடர் தாரகை, முகம் தாமரை
இரு கண்களில், இவள் நேரலை

யாரடி யாரடி மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்

in front of me ..
tracked in me
my breathe is little weak

I am feeling so good
its such a cool mood
come on baby make make a tweet of something
give me more of this thing
Sweet something, give me more of this thing

உடை போடும் விதம் பார்த்து ஊரே ஆடி போகும்
இடை ஆடும் நடம் பார்த்து இதயம் நின்று போகும்
அலை ஆடும் நுரையை சேர்த்து,
அதில் பாலை ஊற்றி செய்தால் உன்னை
மயில் போல் இவள் விருந்தாடினால்,
துயில் யாவுமே, தொலைந்தாடுமே
நடை பாதையில், இவள் போகையில்
மரம் யாவுமே, குடை ஆகுமே

யாரடி யாரடி மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும் பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்
நிலா போலவே உலா போகிறாய்
நிழல் வீசியே புயல் செய்கிறாய்
கருங்கூந்தலில் வலை செய்கிறாய்
குறும் பார்வையில் கொலை செய்கிறாய்

Thaandavam - Yaaradi Mohini

Followers