Pages

Search This Blog

Wednesday, October 16, 2013

அலைபாயுதே - சினேகிதனே சினேகிதனே

நேற்று முன்னிரவில் உன்னி
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு சினேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டுமே
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே

சின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய்
என் Cell எல்லாம் பூக்கள் பூக்கச்செய்வாய்
மலர்களில் மலர்வாய்
பூப்பரிக்கும் பக்தன்போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல்நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி
சேவைகள் செய்யவேன்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு சினேகிதனே
(நேற்று முன்னிரவில்)

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்புமூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெளிவரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்
(சினேகிதனே)

Alaipayuthey - Snehithane Snehithane

Followers