Pages

Search This Blog

Thursday, November 24, 2016

தளபதி - புத்தம் புது பூ பூத்ததோ

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

(இசை) சரணம் - 1

ஆண் : பால் நிலா தேய்கின்றதென்று
பகலிரவும் என் நெஞ்சம்
வழி விடுமோ என்றஞ்சும்

பெண் : ஆதவன் நீ தந்ததன்றோ
நிலவு மகள் என் வண்ணம்
நினைவுகளில் உன் எண்ணம்

ஆண் : கருணைக் கொண்டு நீ தான்
காயம் தன்னை ஆற்ற

பெண் : பார்வைக் கொண்டு நீ தான்
பாச தீபம் ஏற்ற

ஆண் : உயிரென நான் கலந்தேன்

பெண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

(இசை) சரணம் - 2

பெண் : வாழ்வெனும் கோலங்கள் இன்று
வரைந்தது உன் தொண்டுள்ளம்
நெகிழ்ந்தது என் பெண் உள்ளம்

ஆண் : ஈத்திசை பூபாளம் என்று
எழுந்தது பார் நம் தானம்
விடிந்தது நம் செவ்வானம்

பெண் : கூந்தல் மீது பூவாய்
நானும் உன்னை சூட

ஆண் : தோகை உன்னை நான்தான்
தோளில் இன்று வாங்க

பெண் : உனக்கென நான் பிறந்தேன்

ஆண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

பெண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

ஆண் : வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ

பெண் : கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

ஆண் : புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே 

Thalapathi - Putham Puthu

தளபதி - சுந்தரி கண்ணால் ஒரு சேதி

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண்குழு : ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...

{பெண்குழு : ஒவர்லாப் ஆ...ஆ...ஆ...ஆ....
ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...}

பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

ஆண் : ஆ...ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண் : தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

ஆண் : வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை

பெண் : எனைத்தான் அன்பே மறந்தாயோ

ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண்குழு : ஆ...ஆ...ஆ...ஆ...

{பெண்குழு: ஒவர்லாப் ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ..
ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...}

பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

Thalapathi - Sundari Kannal Oru

தளபதி - சின்னத் தாயவள் தந்த ராசாவே

ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ 

(சின்னத் தாயவள்) 

சரணம் -1
தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ.   (சின்னத் தாயவள் 

சரணம் -2 
பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..  

(சின்ன தாயவள்)

Thalapathi - Chinna Thayaval

அவதாரம் - தென்றல் வந்து தீண்டும்போது

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்ன கண்ணே

தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

பெண் : எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது

ஆண் : எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெண் : ஓடை நீரோடை இந்த உலகம் அது போல

ஆண் : ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல

பெண் : நிலையா இல்லாது நினைவில் வரும் நெறங்களே

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ஆண் : ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே ஒடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

பெண் : ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது

ஆண் : குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா

பெண் : கிளியே கிளியினமே அதை கதையாய் பேசுதம்மா

ஆண் : கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

பெண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

ஆண் : திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

பெண் :வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

ஆண் : எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

பெண் : உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன

ஆண் : தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல

பெண் : திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ நெனப்புல

Avatharam - Thendral Vanthu Theendumbothu

நினைவெல்லாம் நித்யா - பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் 
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் 

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் 
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் 
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் 
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
---
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை 
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை 
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் 
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும் 
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில் 
எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும் 
---
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் 
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் 
---
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் ஹ ஹா 
பரிகாசம் 
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம் 
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே 
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே 
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி 
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி 

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் 
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் 
பனிவிழும் மலர்வனம் 
பனிவிழும் மலர்வனம் 
பனிவிழும் மலர்வனம்



Ninaivellam Nithya -  Panivizhum Malar Vanam

இளமை ஊஞ்சாலடுகிறது - ஒரே நாள் உன்னை நான் நிலாவில்

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிறேண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் …….. 
உன்னை நான் ………. 
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா

Ilamai Oonjal Aadukirathu - Ore Naal Unnai Naan

இளமை ஊஞ்சாலடுகிறது - கிண்ணத்தில் தேன் வடித்து

கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர
எங்கெங்கோ நீந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்


ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம்
நாயகன் உந்தன் வசம்
தென்றல் போல் மன்றம் வரும்
தேவி நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும் சுகம்
கொண்டு போ அந்தப்புரம்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை
வெள்ளம் போல் ஓடி வரும்
கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்


ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
ஆனிப்பொன் கட்டில் உண்டு
கட்டில் மேல் மெத்தை உண்டு
மெத்தை மேல் வித்தை உண்டு
வித்தைக்கோர் தத்தை உண்டு
தத்தைக்கோர் முத்தம் உண்டு
முத்தங்கள் நித்தம் உண்டு
கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்


ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும்
ஏழிசை எந்தன் மொழி

விண்ணிலே வட்டமிடும்
வெண்ணிலா உந்தன் விழி

பள்ளியில் காலை வரை
பேசிடும் காதல் கதை

கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்

கன்னத்தில் தேன் குடித்தால்
கற்பனை கோடி வரும்

கிண்ணத்தில் தேன் வடித்து
கைகளில் ஏந்துகிறேன்

ஆ ஆ

கைகளில் ஏந்துகிறேன்

ஆ ஆ

கைகளில் ஏந்துகிறேன்

Ilamai Oonjal Aadukirathu - Kinnaththil Then

Followers