வாடி குட்டி லேடீ உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான் தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன் உன் முந்தானா சேலை பூவுல நான் முன்னூறு நாளா தூங்கலா அய்யோ கிறுக்கு புடிச்சி இருக்கு அதுக்கு மருந்தா உன மந்திரிச்சி மாட்ட போறேன் வாடி குட்டி லேடீ உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான் தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன் தூண்டில் நான் போட்டு கெண்ட மீன புடிச்சி சுள்ளி தீ மூட்டி சுட்டு தாரேன் உனக்கு பட்டம் பூச்சிக்கு போடுறீங்க எதுக்கு சும்மா அய்சு வச்சி பண்ணூறியே கணக்கு வளையல் குலுங்க கொலுசு சிணுங்க மனசா தீ மூட்டி கொளுத்துறியே கட்டி கரும்ப குட்டி எரும்ப முழுசா முழுங்க தான் பாக்குறியே புல்லு மொளாச்ச பூமி கெடக்கு பசிச ஆடு நீ என்ன கொஞ்சம் மேய வீடு வாடி குட்டி லேடீ உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான் தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன் பச்சரிசி பொங்கலித்து மாவிலக்கு ஏத்தி வச்சி அம்மனுக்கு வேண்டிக் கிட்ட அருள் தருவா அத்தை பொண்ணு மாமன் பொண்ணு அத்தனையும் ஊர சுத்த மாமன் காரன் மறஞ்சி நின்னு பார்த்து ரசிப்பான் அவன் ஓரக் கண்ணு ஏதோ ஒண்னு சொல்ல இவ நெஞ்சுக் குள் சந்தோசம் கல்யாண கச்சேரி தான் மஞ்ச பழம் பழுத்த வெள்ளரிக்கா தோட்டம் மங்கி கோரங்கெல்லம் போடு தடா ஆட்டம் தாடி நரச்சாலும் தீரலையே ஆசை டை ஆ பூசிக்கிட்டு துள்ளு தடி மீசை தார தப்பட்டம் கச்சேரி இருக்கும் என்ன பாக்க தான் கூட்டம் வரும் ஆட்ட காரி நீ மேக் அப்ப கலச்சா ஐயோ பேயின்னு ஊரே ஓடும் முன்ட கண்ணி மொளகா மூக்கி போடி சிறுக்கி சும்மா வெட்டி பந்தா க்காட்டாதடி வாடி குட்டி லேடீ உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான் தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன
இந்தியா நான் பாகிஸ்தான் நீ மோதி பாரு என் கிட்ட நீ மோத வந்த டாரு டாரு ஆறு பால் இல் ஏழு ஸிக்ஸர் எட்டு பாலில் பத்து விக்கெட் ஃபர்ஸ்ட் பால் ஆ க்லீந் போல்ட் ஆகி உன்ன ஊர விட்டு ஓட வைப்பேன் கேட்டு பாரு என்ன பத்தி ஊருக்குள்ள ஒன்னும் இல்ல அது ஸ்பைடர் மண் எந்த விதத்திலையும் கொறஞ்சாவன் இல்ல அந்த ஸூபர் மண் டேய் வெட்டி பேச்சு தேவை இல்ல நான் எதுலயும் தோத்ததில்ல வாய மூடி ஓடி போட கட்ட பொம்மன் பேரன் சட்டம் பேசும் வீரன் உள்ள தள்ளி உன்ன கழிய திங்க வைக்குறேன் ஊசி போன சாம்பர் பத்து நாலு வச்சு உன்ன திங்க விட்டு ஓட வைப்பேன் கிழிஞ்சி போன கோட்ட ஓட்டு போட்டு தச்சு உன்ன வேல இல்லாம பிச்ச காரி ஆக்குவேன் வண்டலூர் ஸூ வில் உன்ன புடிச்சி அடச்சீ புதிய மிருகமுன்னு போர்ட வைப்பேன் ஸார் கு போட்டி போட்டு யாரும் இங்க ஜெய்ச்சதே இல்லையே கூறு கெட்ட வாத்து மூட்ட உன்ன மாறி மொள்ள மாறி பாத்தது இல்லையே இந்தியா நான் பாகிஸ்தான் நீ மோதி பாரு என் கிட்ட நீ மோத வந்த டாரு டாரு ஆறு பால் இல் ஏழு ஸிக்ஸர் எட்டு பாலில் பத்து விகெட் ஃபர்ஸ்ட் பால் ஆ கிளீன் போல்ட் ஆக்கி உன்ன ஊர விட்டு ஓட வைப்பேன்
மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள் தானா இவள் தானா இவள் தானா மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர் தானா இவர் தானா இவர் தானா வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா கண்களிலே காதலர்கள் போர்க்களமா உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன் என் இரவினை நீளமாய் கேட்கிறேன் உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன் பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன் இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும் தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும் மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம் உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன் நான் மறுபடி மழலையாய் ஆகிறேன் வெண்சாமரம் இமைகளால் வீசுவேன் என் கண்களால் காதலை பேசுவேன் சந்தன சிலையா செய்தது மன்மத கலையா சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா காதலே காதலே புது கவிதையா தாய்மடி வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே
தென்றல் எந்தன் நடையை கேட்டது தத்தோம் தகதோம் தாழம்பூவின் வாசம் கேட்டேன் தித்தோம் திகிதோம் மூன்றாம் பிறை என் நகங்கள் கேட்டது தத்தோம் தகதோம் முகிலில் ஆட ஊஞ்சல் கேட்டேன் தித்தோம் திகிதோம் இரவுகள் என்னிடம் கண்மை கேட்டன தத்தோம் தகதோம் ரசிக்கும்படி ஒரு ரகசியம் கேட்டேன் தித்தோம் திகிதோம் அழைக்காத போதும் நிலவு வந்தது தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம் பகலில் வராத பால் நிலவே ஏன் என்னைத்தேடி வந்தாய் எதையோ கேட்க ஏங்கி நின்றாய் இரவில் வராத சூரியனே ஏன் என்னைத்தேடி வந்தாய் எதை இரவல் வாங்க நின்றாய் ஆஆ...சாரல் மழை பூவாகி சந்தமுடன் தானாடும் தங்க நிற நூலாகி தாவணியை தான் சேரும் வா வா இன்றுதான் ஒரு மாலை நேரம் வாய்ப்பிருக்கு வாசல் கோலம் வண்ணம் கேட்டது தத்தோம் தகதோம் காற்றில் கலையாதிருக்க சொன்னேன் தித்தோம் திகிதோம் மண்ணைத் தொடாத மழைத்துளியே நான் உன்னை ஏந்தி நின்றேன் முத்து மாலையாக்கிக் கொண்டேன் வண்ணம் கெடாத மேகங்களே ஏன் வானில் காய வேண்டும் எந்தன் சேலை ஆக வேண்டும் ஆஆ...துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட தள்ளிவிடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட ஆ...ஹா அன்புதான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு குயில்கள் எந்தன் தமிழை கேட்டன தத்தோம் தகதோம் உலகம் கேட்க கூவச்சொன்னேன் தித்தோம் திகிதோம் மயில்கள் எந்தன் சாயல் கேட்டன தத்தோம் தகதோம் மழையில் விரிக்க தோகை கேட்டேன் தித்தோம் திகிதோம் மாலை நேரம் மெல்ல மாறிப்போனது தத்தோம் திகிதோம் மயக்க போர்வையில் சாய்ந்து கொண்டது தித்தோம் திகிதோம் துணையாக தூங்க இரவும் வந்தது தித்தோம் திகிதோம் திகிதோம் திகிதோம் என்னையும் உன்னையும் ஏன் பிரித்தார் இடையினில் கோடுகள் ஏன் கிழித்தார் கனவுகள் புகையென ஆனதேன் காற்றில் சேர்ந்தே போனதேன்
ஆண்: உயிரே உயிரே நலம் தானா ? சம்மதம் தானா ? நிஜம் தானா? நிம்மதி தானா? அழகே நிலவின் முதுகில் கவிதை எழுதி ரசித்திடவா ... பெண்: உயிரே உயிரே எனை நானே தந்து விட்டேனே தொடுவானைத் தொட்டுவிட்டேனே அன்பே நிலவைப் பிடித்து உயிரை மடித்து கொடுத்திடவா... ஆண்: உயிரே உயிரே ... ஆண்: மூச்சுவிடும் தாஜ்மஹாலை நான் பார்க்க விட்டு விட்டு தாமரைகள் தான் பூக்க பெண்: மச்சம் மட்டும் தொட்டுக் கொள்ள நீ கேட்க மிச்சயிடம் கோபப்பட்டு தான் பார்க்க ஆண்: மின்மினியே இதோ இதோ தான் கண்களும் பேசும் காதல் விழா தான் சந்தனமே இதோ இதோ தான் குங்குமம் பூசும் காதல் விழா தான் பெண்: என் ஜீவனே ..... என் ஜீவனே.... உன் பார்வையின் போதையில் நான் அழவே ஆண்: உயிரே உயிரே குடை தேடி அலைந்தேனே உன்னை மூடி நனைந்தேனே அன்பே கனவை அழைத்துப் பரிசுக் கொடுத்து அனுப்பிடவா .... பெண்: உயிரே உயிரே பெண்: சின்ன சின்ன கன்னக்குழி தேனூட்ட உள்ளுக்குள்ளே உன்னைத் தள்ளி தாழ்பூட்ட ஆண்: அடிக்கடி தொட்டுக்கொள்ளும் இமைப் போலே சத்தமின்றி சந்திக்கணும் இனிமேலே பெண்: வண்டினமே இங்கே இங்கே தான் மொட்டுகள் கூசும் நெருங்கி வராதே செவ்விதழே இங்கே இங்கே தான் முத்தங்கள் வேணும் உறங்கிவிடாதே ஆண்: என் ஜீவனே... என் ஜீவனே... கிறங்கிய விழிகளில் இளம்பிறை பார்த்தேன் உயிரே உயிரே உனைத்தானே உணர்வேனே உடைப்போலே அணிந்தேனே அன்பே நீண்ட பகலில் கூந்தல் இரவில் மறைத்திடவா... ஆண்: உயிரே உயிரே ...
ஹையோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலே இந்நாள் வானிலை அடடா டாடடா… ஆஹா வானிலே பாதை ஏறுதே பனியாய் மாறுதே அடடா டாடடா… கண்ணும் கண்ணுமே பேசும் நேரமே வார்த்தை என்பதே இனிமேல் பாரமே ஒட்டிக்கொள்ளவே வா என் பக்கமே பக்கம் என்பதும் இங்கே தூரமே ஏழேழு பிறவிகள் உனை தொடர்ந்து வந்தேன் ஏனடி என் தேடலை அறியாமல் போனாய் வான் மீது எனை உனக்கென மினுக்கியவன் ஏனடி என் மின்மினியை பார்க்காமல் போனாய் ஓ… மாயா மேகம் நீயா… ஓஹோ மாயா மேகம் தீயா… கண்ணே காதலி காதல் மார்வலி காயம் ஆவதா கண்ணை தாழ்த்து நீ முத்தம் நீயடி சத்தம் நானடி நாணம் வந்ததால் அது ஒன்றானதே உன்னை எண்ணியே நாட்கள் போனதே ஊகம் செய்வதே உவகை ஆனதே காலம் கூடுதே கைகள் சேருதே கைகள் சேர்வதே கனவாய் தோன்றுதே உன்னாலே பல இரவுகள் உறக்கமில்லை பாதியிலே கண் விழித்து உன்னை தேடி பார்த்தேன் இன்றோடு என் தனிமைகள் முடிந்துவிடும் நான் விழித்தால் நீ இருப்பாய் உன்ன அள்ளி சேர்ப்பேன் ஓ மாயா மேகம் நீயா ஓ மாயா மோகம் தீயா வானின் நீளமே கடலின் ஆழமே காற்றின் சீழமே காதல் ஆகுமே நானும் நீயுமே வாழும் வாழ்விலே காலம் தாண்டியும் காதல் நீளுமே நானும் மாறினேன் நீதான் காரணம் கேட்பேன் என் வரம் விரலில் மோதிரம் என்னை உன்னிடம் தந்தேன் சீதனம் ஆடும் என் மனம் அடையும் ஆனந்தம் உன் வீட்டில் இனி எனக்கொரு அறை இருக்கும் நான் இருக்கும் நாள் வரைக்கும் அட நீயும் இருப்பாய் உன் தோளில் மலர் கொடி ஒன்று படர்ந்திருக்கும் நீ தெளிக்கும் நீர் இனிக்கும் தந்து அடைப்பாய் ஓ மாயா மேகம் நீயா ஓ மாயா மேகம் தீயா…
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் என் கண்ணீரே என் கண்ணீரே… வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய் என் கண்ணீரே என் கண்ணீரே… மழையாய் அன்று பிழையாய் இன்று நின்றாய் நின்றாய் பெண்ணே இசையாய் அன்று கசையாய் இன்று கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே உன் விழியோடு நான் புதைவேனா காதல்இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே உன் மனதோடு நான் நுழைப்பேனா செதிலாய் செதிலாய் இதயம் உதிர உள்ளே உள்ளே நீயே துகளாய் துகளாய் நினைவோ சிதற நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே தனி உலகினில் உனக்கென நானும் ஓர் உறவென உனக்கென நீயும் அழகாய் பூத்திடும் என் வானமாய் நீயே தெரிந்தாயே உன் விழி இனி எனதெனக் கண்டேன் என் உயிர் இனி நீ எனக் கொண்டேன் நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே பிணமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே கனவில் இனித்த நீ ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே யார் யாரோ போலே நாமும் இன்கே நம்முன் பூத்த காதல் எங்கே கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் என் கண்ணீரே என் கண்ணீரே… வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய் என் கண்ணீரே என் கண்ணீரே… மழையாய் அன்று பிழையாய் இன்று நின்றாய் நின்றாய் பெண்ணே இசையாய் அன்று கசையாய் இன்று கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே (கண்ணை)