மேலே மேலே தன்னாலே என்னக் கொண்டுப் போனாளே அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிட்டாளே ஆளத் தின்னுப் போறாளே ஆட்டம் போட வெச்சாளே அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே அவ தூரம் நின்ன தூறலு என் பக்கம் வந்த சாரலு அவளாலே நான் ஆனேன் ஈசலு அவ மேலே ரொம்ப ஆவலு அதனாலே உள்ளே மோதலு அவ என்னோட காவல் ஏஞ்சலு வா ராசா ராசா வழி எல்லாம் ரோசா ரோசா ஹே லேசா லேசா ஆடாதே நீயும் லூசா லூசா சரணம் - 1 அவள் ஒரு அழகிய கொடும அத புலம்பிட பொலம்பிட அருவ நெதம் என்ன பாத்ததும் ஏறிப் போச்சு பெரும அவ ஒரு வகையில இனிமை அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும எனத் தொட்டுப் பேசிட கூடிப் போச்சு தெறம அவ நேருல வந்தா போதும் தெருவெல்லாம் தேரடி ஆகும் அவ கண்ணாலே பேசும் தீபம் (2) மேலே மேலே தான்னாலே என்னக் கண்டுப் போனாளே அந்தப் புள்ள தன்னாலே நெஞ்ச அள்ளிட்டாளே சரணம் - 2 கடவுள துதிப்பவன் இருப்பான் கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான் அட அவளப் பாத்திட எல்லாத்தையும் மறப்பான் ஒலகத்த ரசிப்பவன் இருப்பான் எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான் அவ கூட நின்னவன் கண்ணத் தானே இழப்பான் அவ ஒரு முற வெச்ச காரம் என் உசுருல நித்தம் ஊரும் அவ தீராத நீராகாரம் (2) பல்லவி மேலே மேலே தன்னாலே ....
வையம்பட்டி... வாழ குட்டி... தப்பட்டம் ஆடு வேசம் கட்டி பாட்டு கட்டி நீ ஆடுன மேகங்கள் போடும் ஆலங்கட்டி மல மேல ஒழப்பு பள்ளத்தில் பொழப்பு மல ஜாதி முன்னேறுமா முன்னேறுமா பணக்கார கரண்டி மழை எல்லாம் சொரண்டி வன காடு பழுதாச்சு அம்மா பலகாலமா மலைக்கு போய் மொட்ட போடு மலைக்கே மொட்ட பொட வேணா மலையும் மரமும் நம்ம சாமி கொண்டாடுங்க... கூத்தாடுங்க... தாய் மாமன் காத்து தாய்பால் ஊத்து உசுரு பொழைக்க இது போதும் மும்மாரி கூட மோசம் செஞ்சாலும் கையே எதிர்க்கலாம் தேகத்தில் வலுவுண்டு மானே இங்க தினையோடு சாப்பாடு தேனே மேகத்தின் போர்வைக்கு கீழே நாங்க காதல் செய்வோம் களவும் செய்வோம் புல்லோடு தூங்கும் பனி துளி சேர்த்து சூரிய ஒளியை கோர்போமே சந்தோசம் உண்டு சாதிகள் இல்ல சமத்துவம் காண்போமே தென் நாட்டு தாகம் தீர்க்கும் தெய்வம் மேற்க்கு தொடர்ச்சி மலை தானே... மனுசனும் கடவுளும் தோன்றும் முன்னாலே வாழ்ந்த மலை தானே பறவை எச்சம் தான் காடு எங்க பண்பாட்டில் காடே தான் வீடு மரமொன்று மல மேல சான்சா நாங்க தூக்கம் கெட்டு துக்கம் கேப்போம் தான் வீட்டு மேல தீ வைக்கும் மனுசா நம்மோட காட்ட அழிக்காதே பேராசா புடிச்ச பேய் மனக் காரா தாய் முலை அறுக்காதே வையம்பட்டி வாழ குட்டி தப்பட்டம் ஆடு வேசம் கட்டி பாட்டு கட்டி நீ ஆடுனா மேகங்கள் போடும் ஆலங்கட்டி மல மேல ஒளைப்பு பள்ளத்தில் பொழப்பு மல ஜாதி முன்னேறுமா முன்னேறுமா
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா பெருந்தொகை எப்போது ஈட்டுவாய் இன்பது பால் சொல்லும் இளய வேந்தே பொருட் பாலை எப்போது காட்டுவாய் ஈசன் எழுதிய ஓலை களில் அக்கால காதல் உருவாகும் ரேசன் எழுதிய அட்டைகளில் தற்கால காதல் உருவாகும் நல்ல வேலை செய்த பின்னே சிறு தாலி செய்து கொண்டுவா குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன் பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான் இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே பொருட் பாலை உன்னோடு யோசிப்பான் சரி மோகம் என்னும் மேகம் இரு கண்ணை மூடுமே பசி தாகம் வந்து காதை மூட உண்மை தோணுமே இது அவ்வை யாரின் கேள்வி என் அதையே சொல்கிறாய் நான் ஆசை அம்பு வீசும் போது அழகாய் வைக்கிறாய் இல்லறம் புல்லா வினைத்தொகையும் அளபேடயும் முதல் பாத்து சத்தியமடி தமிழ் நமக்கு உணவளிக்கும் தடை எத்து பொய்யோ நீ சொல்வது மெய்யோ நம்பவா நான் குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன் பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான் இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே பொருட் பாலை உன்னோடு யோசிப்பான் உன் மூளை கொண்டு பார்த்தால் அது கணிதம் ஆகுமே நீ நெஞ்சு கொண்டு காணும் போது நேசம் தோன்றுமே விழி மூடி கொண்டு காண என் நெஞ்சே போதுமே நீ மூடி வைத்த உண்மை காண மூளை வேணுமே கணித மேதை ராமானுஜம் பெத்த பொண்ணு நீ தானா கற்பனை பண்ணும் மஹா கவி கம்பன் மகன் நீ தானா அம்மெ தமிழில் எமை நம்பி வா வா குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா பெருந்தொகை எப்போது ஈட்டுவாய் இன்பத்து பால் சொல்லும் இளய வேந்தே பொருட் பாலை எப்போது காட்டுவாய்
கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே உன் கால்களின் கீழே நதி நடக்கும் உன் தாகத்தை கண்டு விதி சிரிக்கும் முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமெ துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே உன் கால்களின் கீழே நதி நடக்கும் உன் தாகத்தை கண்டு விதி சிரிக்கும் முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா துளி எல்லாம் கடல் ஆவது இல்லை துளி இன்றி கடல் எதும் இல்லை வேர்வை எல்லாம் வெற்றி பெற வில்லை வேர்வை இன்றி வெற்றி எதும் இல்லை நிலா மேலே கல்லை வீசிப்பார் விண்மீன் ரெண்டு வந்து வீளலாம் உன் கடவுள் கண் திறக்க உழைப்பே ஒற்றை வழி தன்னை வென்றோன் மண்ணை வென்றெடுப்பான் முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா ஹிந்தி தமிழ் எது சொன்ன போதும் எல்லா காதும் கேட்பதும் இல்லை காசு மட்டும் முணு முணுத்தாலோ காது கேழா மனிதர்கள் இல்லை கட்சி இல்லை நம்மை ஆள்வது காசு பணம் தானே ஆடுது உன் காதல் வெற்றி கொள்ள காந்தி நோட்டு வேணும் காசு போட்டால் லோகம் சுத்துமடா முன்னேறி வா என் தோழா முள் ளேறி வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ காத்துக்கு திசை இருக்கா எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ வாழ்வுக்கு கணக்கு இருக்கா கலூச்சான் குருவி முள்லுக்குல் உறங்கும் வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும் வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை தனியாக எதும் வாழாது எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ காத்துக்கு திசை இருக்கா எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ வாழ்வுக்கு கணக்கு இருக்கா வெளுத்தது பாலு கருத்தது காக்கா இது தான் இது தான் ஏழ மக்கா ஒரு சொத்து கண்ணீர் உள்ளன் கையில் விழுந்தா உசிர் தரும் பாவி மக்கா நேத்து வச கூளு மட்டும் சொத்து சுகம் ஆகுமே அந்த கூழ பாகுந்து கொள்ள ஆளும் பேரும் தேடுமே பாசக் கார சாதி எங்க கூட்டமே வேசம் காட்டுனா நெஞ்சுல ஒட்டுமே இது போன வாழ்க்க இஞ்சி போன உசிரு உனக்கு நீயே பாரம் அப்ப ஒததையில கடந்தா நெத்தி தொட்டு பாக்க தோதா உயிர் வேணுமப்பா ரத்த பந்தம் பாத்திருந்தா பத்து நூறு சொந்தம் தான் சித்த பந்தம் கூடி வந்தா சேந்த தெல்லாம் சொந்தம் தான் சேல கட்டும் கூட்டம் எல்லாம் தாயிதான் சோறு போட்டாவ யாருமே சாமிதான் எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ காதுக்கு திசை இருக்கா எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ வாழ்வுக்கு கணக்கு இருக்கா கலூச்சான் குருவி முள்ளுக்குள் உறங்கும் வெள்ளந்தி மனசு துன்பத்தில் மயங்கும் வேறுக்கு மண் துணை மண்ணுக்கு வேர் துணை தனியாக எதும் வாழாது
ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து மலங் காடு மயிலே மாசம் உள்ள முயலே முள்ளு மேல துணி காய போடுற தஞ்சம் வந்து கெடக்கேன் தப்பி வந்து பொழாக்கேன் துன்பத்துக்கு வாக்க பட பாக்குற பாசத்த உள்ள வச்சு ஒரு பாசாங்கு பண்ணா தீங்க மண்ணுக்குள் நூல் கோல் போல என்ன கண்ணுக்குள் மூடா தீங்க ஓ மாலயில் ஒதுங்க தானே நான் இரவில் பனியா வந்தேன் பனிய குடிக்க தானே நீ பகலில் வெயிலா வந்தே ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு கூடு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து செஞ்சு வச கல்லானேன் உன்னால சேல கட்டும் பொன்னானேன் என் சேல அழுக்காக வா உள் கூடு வேர்வை பூக்க வா நீ வா ஆம்பளக்கி சேல கட்டி வந்தாக்க பொம்பளான்னு நம்பனுமா சொல்லாம வேலை பார்த்து போ கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ அட உசிரே உள் வாங்கும் காத்து தான் என் கூந்தல் போர்வை ஆகுமே ஆடு தோலு என் போர்வை ஆகலாம் வெள்ளாடு போர்வை ஆகுமா செல்ல கருப்பா எந்த கொழுப்பா உண்ம சொல்லு உன்னை பூசி எப்போதும் காம்போட ஒட்டி கிட்ட போகாது என் உசிர உருஞ்சாதடி என் பொழப்பில் ஈரம் இல்ல பொதி சீக்கு பட்ட எல் போல சும்மா நீ நோக்கு பட்டு போகாத என் பேச்ச நீ கேளையா என் தோளில் தேமல் பாத்து போய்யா ஒரு தலையே இல்லாத பூச்சி நான் நீ கிரீடம் சூட பாக்குற தன் தலைய மண்னோட மூடுர தீ கோழி போல ஏய்க்கிற என்ன மடக்க மார்பில் ஈடுக்க பாக்குறியா ஈர காத்தே நீ வீசு ஏர் எடுத்து நீ பேசு கூடு குள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து
அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு தாய் மடி அமஞ்சதடா கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு உனக்கொன்னு வாய்த்த தடா ஊரோ உறவோ வறண்டே கெடக்கு உசுரா நெனைக்க மழையும் இருக்கு பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே இவ சாமி சொல்லி வந்தவா அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு தாய் மடி அமஞ்சதடா கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு உனக்கொன்னு வாய்த்த தடா அவ என்ன தாயா நீ என்ன மகனா அடட பாசம் துளிர் விடுமே கருங்கல் இடுக்கில் காக்கை இட்ட எச்சத்தில் ஆல மரமே வருமே தேசம் விட்டு போகும் போதும் வானம் என்ன நீளம் தான் பாசம் உள்ள சேலையில் எல்லாம் தாய் பாலின் வாசம் தான் பாச முழுகயில் பாசம் இனிக்குதே ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே இடம் பொருள் ஏவல் அமைவதை பொறுத்தே உறவும் பிரிவும் ஏற்படுமே யாரும் அற்ற காதில் பேசு துணை யாரு சிட்டு குருவி போதுமே ஒத்த மரமாகி போன இது பொண்ணா பொம்பள மகிழ்ந்து தான் பூத்து போனா மகன் வந்த தெம்புல நஞ்சு போன வாழ்க்கை சொந்தமே தேடுமே பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு தாய் மடி அமஞ்சதடா கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு உனக்கொன்னு வாய்த்த தடா