Pages

Search This Blog

Wednesday, January 30, 2019

கோரிப்பாளையம் - என்ன இந்த மாற்றமோ எம்மனசு வலிக்குதே

என்ன இந்த மாற்றமோ எம்மனசு வலிக்குதே 
கண்ணுரெண்டும் காந்தமோ 
என்னைக்கட்டி இழுக்குதே 
உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே 
உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை நான் சேர்ப்பேனே 
நீ வந்ததும் என்னானது  
என் வாழ்க்கையே வேறானதோ   (என்ன)

ச்சின்னச்சின்னப் புன்னகையில் என்னைப்பரித்தாய் 
வண்ண வண்ண கனவுகள் கண்ணில் கொடுத்தாய் 
சிறிய இதயத்தில் பெரிய காதலை தந்தாயடி என் அன்பே 

மெல்ல மெல்ல மனசுக்குள் இடம் பிடித்தாய் 
மின் மினிக்கும் மின்னலைப்போல் ஒளிக்கொடுத்தாய் 
உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில்  
வந்தாயடா என் அன்பே  

ஒரு பார்வைப் பார்க்கும்போதிலே 
எந்தன் தாகம் வானம் ஏறுதே 
மறு பாதிப்பார்க்கும் போதிலே 
எந்தன் ஜென்ம சாபம் தீருமோ 

என் கால் கொலுசில் உன் பேரைச்சொல்ல  
நான் கேட்டேனே 
நீ வந்ததும் என்னானது  
என் வாழ்க்கையே வேறானதோ   (என்ன)

சுற்றி உந்தன் முகம் அன்றி ஏதும் இல்லையே 
மற்றபடி வேற ஒன்னும் தொல்லை இல்லையே 
உயிரை எடுக்கிறாய் திரும்பக்கொடுக்கிறாய் 
திண்டாடுதே என் நெஞ்சம் 

நெற்றிப்பொட்டில் நேற்றுவரைக் காய்ச்சல் இல்லையே 
நட்சத்திரம் பார்த்து நான் பேசவில்லையே 
உயிரைக்குடிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய் 
கொண்டாடுதே என் நெஞ்சம் 

உனைப்பார்த்துக் கொஞ்சிப்பேசத்தான் 
எந்தன் ஆசைத்தாவி ஓடுதே 
உனைப்பார்த்துப் பேசும் நேரத்தில் 
எந்தன் வார்த்தை ஊமையாகுதே 

கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா 
உன் இதழ்கள் சொல்லும்   (நீ வந்ததும்



Goripalayam - Enna indha maatramo

கோரிப்பாளையம் - ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே

ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே 
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே 
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே   (ஆரிராரோ)

தலையெழுத்தை தவறுதலாய் எழுதிவைத்தான் இறைவனடா 
தவறு எனக்குண்டோ ஓ... ஓ.... 
குடும்ப சுகமில்லை குழந்தை அருகில் இல்லை 
வாடிய சுதந்திரம் கதறும் பசுவாய் அழைக்கிறேனே 
ஓ.... அழுவதேன் நெஞ்சே   (ஆரிராரோ)

மழையினிலே நனைந்திருந்தேன் 
வெயிலிலே உலந்து வந்தேன் 
கரைந்த சிலைப்போலே ஓ.... ஓ.... 
வெய்யிலும் அறியாத ஓ... பறவை எச்சம்போட 
முளைத்த விதை நான் துயரக்கதை நான் 
என் பிள்ளை நன்றாக ஒ... இறைவனே அருள்செய்க   (ஆரிராரோ)


Goripalayam - AariraarO kaettadhillai

கோரிப்பாளையம் - அழகு காட்டேரி அழகு காட்டேரி அடிக்கப் பார்க்கின்றதே

அழகு காட்டேரி அழகு காட்டேரி அடிக்கப் பார்க்கின்றதே 

அரும்பு மீசைக்கும் குறும்புப் பார்வைக்கும் 
ஆசை அலைப்பாயுதே 

யாரது.... போரது.... 
நெனைச்சதும்... மணக்குது... 

பஞ்சாரத்து கோனிப்போல  
பார்வையால மெய்மூடப் பார்க்குற 
வா வா மனமே வா   (அழகு)

இவளோட கண்ணு உன் மேல பட 
பார்த்தவளின் கண்கள் கண்ணுண்டு விழுந்த 
கொலைக்காரி பார்க்காதே எனக்கு நீ தேவைடா 

வேறு எந்த ஆள நீப்பார்த்துப்புட்டா 
வெட்டிடுவேன் உன்ன நான் ரெண்டு துண்டா 
பொய்யில்ல பொய்யில்ல 
நான் செய்வேன் காட்டட்டா 

உன்னை அள்ளி முடிஞ்சிக்கிட்டா 
கொசுவத்துல சொருகிக்கிட்டா 

சுடும்வரைக்கும் அனைச்சிக்கிட்டா 
விடும் வரைக்கும் அறிந்துக்கிட்டா 

ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்  
ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்   (அழகு)

நான் போட்ட கோட்ட நீத்தாண்டிப்புட்ட 
உன்னோட கால நான் வெட்டுவேன்டா 
என்னோட இஷ்டத்துக்கு நீயும் வந்து வாழடா 

என் சொல்ல கொஞ்சம் நீ முடிப்போட்டா 
உன்னோட சங்க நான் அறுத்திடத்தான் 
கஷ்ட்டத்த தாங்கணும் என்னை நீ தேத்திட்டா 

உன்னை நானும் சேரத்தான் 
வழிப்பார்த்து வாழவா 

உசுரோடு கூடத்தான் நேசத்தால ஆளட்டா 

ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்  
ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்ச்செம் ச்செம்




Goripalayam - Azhagu kaatteri

கோரிப்பாளையம் - ஆப்பக்காரி ஆப்பக்காரி

ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி 
அஜால் குஜால் ஆப்பக்காரி 
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி 

சொய் சொய் சொய்  
ஆ சொல் சொய் சொய் 
ஆ சொல் சொய் சொய் 
ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி 
அஜால் குஜால் ஆப்பக்காரி 
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி 
மந்திரிச்ச பாக்கெட்டுப் பொண்ணு 
வச்சிருக்கா பக்கா பக்கா 
தந்திரமா அதுல கொஞ்சம் மை தடவி பாரு மக்கா 
ஜான் புள்ள ஆனாலும் ஆண்புள்ள நாமடா 
ஏணி வச்சி எறித்தான் ஒட்டகத்த ஓட்டுடா 
அந்துரிக்கிது எந்திருக்குது வீராப்பு 
சங்கதி அது ஜோராப்பு வா மாப்பு 

கொக்கொகொ கோ கோ கோ  
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே   (ஆப்பக்காரி)

பின்னிப் பின்னிப் பெடலெடுத்து பிரிச்சி மேஞ்சிடவா 
கண்ணில் உன்னைக் கடைஞ்செடுத்து 
தண்ணி வதைக்காட்டிடவா 

கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே  

தப்பே இல்லா தப்பு எது 
தத்துவம் பேசிடவா 
தத்துவத்தப் பேசிக்கிட்டே தப்புத்தண்டா செய்திடவா 
லந்து லந்து லந்து நீ பண்ணிக்கடா லந்து 
சந்துக்குள்ளப் பூந்து ஆடிக்கடா சூது 
கட்டாந்தரை நீச்சலு கையாம்முய்யாக் கூச்சலு 

சொய் சொய் சொய்  
ஆ சொய் சொய் சொய் 
ஆ சொய் சொய் சொய் 

காத்தடிக்கும் பம்ப்பு என உச்சி ஏறி எறங்குதடா 
பூசுப்போன பம்புக்கூட பிரகாசமா எரியுதடா 

கொக்கொகொ கோ கோ கோ  
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே  

அட்டகாச அழகு எல்லாம் ஆட்டையப் போடுங்கடா 
அத்துமீறிப் போயிக்கூட அலப்பரப் பண்ணுங்கடா 
பள்ளத்தாக்குக்குள்ள ஹேப்பூத்திருக்கு முல்லை 
பாயவேணும் மெல்ல சுகமிருக்கு அள்ள 
வில்லங்கத்தப் பார்த்துத்தான் விலாவரித் தெரிஞ்சிக்க 
எடுத்துஊத்தும் நேரந்தான் பாடானாத்தான் புரிஞ்சிக்க   (ஆப்பக்காரி)



Goripalayam - Aappakkaari aappakkaari

Tuesday, January 29, 2019

குணா - பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒழி நிறைக வாழ்விலே
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..

இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இளகி, முத்து வடன் கொண்ட கொங்கை மலை கொண்ட
இறைவர் வலிய நெஞ்சை நடன் கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி,
நல்ல அரவின் படம் கொண்ட அன்பு பணிமொழி
வேதப் பரிபுரையே!! வேதப் பரிபுரையே!!

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க!!



Guna - Paartha Vizhi Parthatpadi

குணா - அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே போகும் கரும்பு
பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன் என்றும் அம்மை என்றும் ...

குத்தம் குறை ஏதும் அற்ற சஜீவன் இங்க யார் அடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தான் அடா
சிவன்-ஐக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப் பார்வை ஏதடா
ஆதி முதல் அந்தம உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரை தான்
வந்து வந்து கூடும் கூட்டம் தான்
விட்டோடும் ஓர் சந்தை கடை தான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா
தட்டு கேட்டு ஓடும தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
நீ போடு மெய்ஞான விலங்கு
மானம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்

அப்பன் என்றும் ...



Guna - Appan Endrum

குணா - கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

(கண்மணி)

உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது

அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி லாலி லாலி
அபிராமி லாலி லாலி லாலி



Guna - Kanmani Anpodu

Followers