Pages

Search This Blog

Wednesday, January 30, 2019

கோரிப்பாளையம் - ஆப்பக்காரி ஆப்பக்காரி

ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி 
அஜால் குஜால் ஆப்பக்காரி 
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி 

சொய் சொய் சொய்  
ஆ சொல் சொய் சொய் 
ஆ சொல் சொய் சொய் 
ஹேய் ஆப்பக்காரி ஆப்பக்காரி 
அஜால் குஜால் ஆப்பக்காரி 
மாட்டிக்கிட்டா மஜாக்கச்சேரி 
மந்திரிச்ச பாக்கெட்டுப் பொண்ணு 
வச்சிருக்கா பக்கா பக்கா 
தந்திரமா அதுல கொஞ்சம் மை தடவி பாரு மக்கா 
ஜான் புள்ள ஆனாலும் ஆண்புள்ள நாமடா 
ஏணி வச்சி எறித்தான் ஒட்டகத்த ஓட்டுடா 
அந்துரிக்கிது எந்திருக்குது வீராப்பு 
சங்கதி அது ஜோராப்பு வா மாப்பு 

கொக்கொகொ கோ கோ கோ  
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே   (ஆப்பக்காரி)

பின்னிப் பின்னிப் பெடலெடுத்து பிரிச்சி மேஞ்சிடவா 
கண்ணில் உன்னைக் கடைஞ்செடுத்து 
தண்ணி வதைக்காட்டிடவா 

கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே  

தப்பே இல்லா தப்பு எது 
தத்துவம் பேசிடவா 
தத்துவத்தப் பேசிக்கிட்டே தப்புத்தண்டா செய்திடவா 
லந்து லந்து லந்து நீ பண்ணிக்கடா லந்து 
சந்துக்குள்ளப் பூந்து ஆடிக்கடா சூது 
கட்டாந்தரை நீச்சலு கையாம்முய்யாக் கூச்சலு 

சொய் சொய் சொய்  
ஆ சொய் சொய் சொய் 
ஆ சொய் சொய் சொய் 

காத்தடிக்கும் பம்ப்பு என உச்சி ஏறி எறங்குதடா 
பூசுப்போன பம்புக்கூட பிரகாசமா எரியுதடா 

கொக்கொகொ கோ கோ கோ  
கொக்கொகொ கோ கோ கோ 
கொக்கொகொ கோ கோ கோ கோ கோ கே  

அட்டகாச அழகு எல்லாம் ஆட்டையப் போடுங்கடா 
அத்துமீறிப் போயிக்கூட அலப்பரப் பண்ணுங்கடா 
பள்ளத்தாக்குக்குள்ள ஹேப்பூத்திருக்கு முல்லை 
பாயவேணும் மெல்ல சுகமிருக்கு அள்ள 
வில்லங்கத்தப் பார்த்துத்தான் விலாவரித் தெரிஞ்சிக்க 
எடுத்துஊத்தும் நேரந்தான் பாடானாத்தான் புரிஞ்சிக்க   (ஆப்பக்காரி)



Goripalayam - Aappakkaari aappakkaari

Tuesday, January 29, 2019

குணா - பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒழி நிறைக வாழ்விலே
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க..

இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இடன் கொண்டு விம்மி.. இணை கொண்டு இறுகி..
இளகி, முத்து வடன் கொண்ட கொங்கை மலை கொண்ட
இறைவர் வலிய நெஞ்சை நடன் கொண்ட
கொள்கை நலம் கொண்ட நாயகி,
நல்ல அரவின் படம் கொண்ட அன்பு பணிமொழி
வேதப் பரிபுரையே!! வேதப் பரிபுரையே!!

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க!!



Guna - Paartha Vizhi Parthatpadi

குணா - அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே போகும் கரும்பு
பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன் என்றும் அம்மை என்றும் ...

குத்தம் குறை ஏதும் அற்ற சஜீவன் இங்க யார் அடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தான் அடா
சிவன்-ஐக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப் பார்வை ஏதடா
ஆதி முதல் அந்தம உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரை தான்
வந்து வந்து கூடும் கூட்டம் தான்
விட்டோடும் ஓர் சந்தை கடை தான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா
தட்டு கேட்டு ஓடும தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
நீ போடு மெய்ஞான விலங்கு
மானம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்

அப்பன் என்றும் ...



Guna - Appan Endrum

குணா - கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

(கண்மணி)

உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது

அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி லாலி லாலி
அபிராமி லாலி லாலி லாலி



Guna - Kanmani Anpodu

குணா - உன்னை, நான் அறிவேன்

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாறரிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?
யார் இவர்கள் மாயும் மானிடர்கள்!
ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

தேவன் என்றால், தேவனல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்!
ஜீவன் என்றால், ஜீவனல்ல என்னைப்போல் இல்லை சரணம்!
நீயோ, வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை!
நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை! 
ஏன் தான் பிறந்தாயோ?
இங்கே வளர்ந்தயோ?
காற்றே நீயே சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

தாய்ப்பறவை, மிதித்தால் சேய்ப்பறவை, நோவதில்லை, காயம் ஆவதில்லை!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்



Guna - Unnai Naan

குரு - தம்தர தம்தர கண்கள் சொந்தம் சொல்ல

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மங்கையே

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்
ஏன் குறுந்தொகை மொழியை தேடுகிறாய்
என் பாமர மொழியில் பாடாயோ

கண்கள் பார்தேன் கவி ஆனேன்
இன்னும் பார்த்தால் எங்கே போவேன்
உன்னாலே கம்பன் தாண்டு ஆவேன்
உன் இதழ் மேலே எழுதுவேன்

ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்தையில்
சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மன்னவா

நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர
நம்தர நம்தர நம்தர

உன் வாடடங்கள் என்னை வாட்டுதடி
உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி
என் வாழ்கையின் தேவை தீர்ப்பாய் வா

உந்தன் சேவை இவள்
செய்யும் போது
உந்தன் சேவை இவள் செய்யும் போது
என் தேவை அது தீருமே
என் வாழ்வே மாறுமே

ஏய்
ஏய் மான்புரு மங்கையே
நில்லாயோ
செம்மாதுழை வாய் மொழி
சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
நில்லாயோ
என் பாமர வார்த்தையில் சொல்லாயோ

ஏய் மான்புரு மன்னவா
ஏய் மான்புரு மங்கையே
ஏய் மான்புரு மன்னவா

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை

தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
தம்தர தம்தர
கண்கள் சொந்தம் சொல்ல
இதயத்தின் மொழியால்
இப்போது எழுதுங்கள் பல்லவியை



Guru - Aye Manpuru Maange

குரு - ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..

ஓ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..

ஆருயிரே என்னை
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லு
சகியே..

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆஹ்…ஒஹ்…ஆஹ்..

ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
உன் கோபக் குயிலே
பித்து பித்து கொண்டு
தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலங்களின் அழகியே

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாய சொல்லடி
என் சகியே..
ஓ…

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆஹ்…ஆஹ்…
ரோஜாப்பூவை…..
ரோஜாப்பூவை முள்காயம் செய்தால்
நியாயமா
பேசி பேசி என் ஊடல் என்ன
தீருமா
உன்னால் இங்கு வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அஹிம்சை முறையில் நீ கொல்லாதே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே
மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா
என் உயிரே..

ஆருயிரே
மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே..

ஹோ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாட இரவாய் ஆகாதோ

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே



Guru - Aaruyire Mannipaya

Followers