குழு: Yeh Maca maca nada vida murai maca We guna give a give a man you wana bang that Take a take a another murai maca We guna kala kala do you wana dung that ஆண்: புதுப்புது வழி அது திறந்தது தமிழா உனக்கென விதிமுறை தாக்க அடிக்கடி விழிகளும் அசருது மனிதா உனக்கென எனக்கென நோக்க மண்ணில் பிறப்பது ஒரு முறைதான் தினம் ஆடிக் கலைப்பதோ பலமுறைதான் நெஞ்சில் காண்பது நிலவொளி தான் மனக்கண்ணில் காண்பது அதிரடி அதிரடி தான் ஆண்: I like the way you do it daisy பெண்: சரி சரி சரி சரி ஆண்: You make me wanna go all crazy பெண்: அட அதுசரி அதுசரி ஆண்: I like the way you do it daisy பெண்: சரி சரி சரி சரி ஆண்: You make me wanna go all crazy (புதுப்புது வழி...) (இசை...) குழு: Ah ha ha aha aha ha ha bang that Ah ha ha aha aha ha ha dung that ஆண்: பகல் பொழுது வந்தாச்சின்னா பதருது கன்னி நடு இரவு வந்தாச்சுன்னா நகர்வலம் முன்னே இதழ் இதழாய் என்னோடுதான் அனுதினம் பேச்சு விரல் விரல்கள் எல்லாமுமே சிறகுகள் ஆச்சு மொத்த பூமியும் தட்டிப்பார்த்து போடு தாளம் போடு வானம் எங்குமே வட்டம் போட்டு கூடைப் பந்து நீ போட்டுக் காட்டு (புதுப்புது வழி...) குழு: கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு பெற்றது பெற்றது புனித பெற்ற தாயின் பெருநீர் சோம்பேறியாக நீ தூங்கிக்கிடந்தால் உனக்கேது சோறு ஆண்: பர்முடா குழு: நீ சோம்பேறியா தூங்கிக்கிடந்தால் உனக்கேது சோறு ஏதும் சூழ்ச்சி இல்லாமல் சுகம் தரும் புத்தம் புதிய பயிற்சி ஆண்: பயிப்போம் குழு: என்னாச்சி ஆண்: என்னென்னா குழு: மென்னாச்சி ஆண்: புரோட்டா குழு: வந்தாச்சி ஆண்: ஹலோ ஹலோ மாங்கா... குழு: போயாச்சி ஆண்: Yo shortie shortie என் எண்ணத்தை தட்டி தட்டி எழுப்பும் அவளது கண்களைப் பாரு நாக்குல மூக்குல தொட்டு கௌப்புற பொண்ணு ஒண்ணு பேரு என்ன கேளு வடப்பக்கம் சென்னை வந்துப்பாரு Yo lakka lakka Me want a chicka chicka Giva me a looka looka Me want a shocka shocka Lakka lakka Me want a chicka chicka Giva me a looka looka Me want a shocka shocka (இசை...) ஆண்: ரெடி ரெடி ஸோ ரொமாண்ட்டிக் கோ உலகமே டேஸ்ட்டு நொடி நொடி தான் போனாலுமே அடடட வேஸ்ட்டு ஒரு ஒருநாள் சென்றாலுமே அது இழப்பாச்சு இசை முழுதும் கொண்டாடினால் வெகு சிறப்பாச்சு மோட்சம் என்பது எங்கும் இல்லை உந்தன் கைகளைப் பார் எந்த நேரமும் உச்சம் தானே அச்சம் என்பதே துச்சம் துச்சம் குழு: Maca maca nada vida murai maca We guna give a give a man you wana bang that Take a take a another murai maca We guna kala kala do you wana dung that (புதுப்புது வழி...) ஆண்: I like the way you do it daisy பெண்: சரி சரி சரி சரி ஆண்: You make me wanna go all crazy பெண்: அட அதுசரி அதுசரி ஆண்: I like the way you do it daisy பெண்: ஓகே ஓகே சரி சரி ஆண்: You make me wanna go all crazy
ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன்... கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன்... கண்ணில் சுடும் வெயில் காலம் உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் அன்பில் அடை மழைக்காலம் இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் (இசை...) ஆண்: நீ நீ ஒரு நதி அலை ஆனாய் நான் நான் அதில் விழும் இலை ஆனேன் உந்தன் மடியினில் மிதந்திட வேண்டும் உந்தன் கரை தொட பிழைத்திட வேண்டும் அலையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்... மனதினிலே இருப்பதெல்லாம் மவுனத்திலே கலக்கும்... (அன்பே என் அன்பே...) (இசை...) ஆண்: நீ நீ புது கட்டளைகள் விதிக்க நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க இந்த உலகத்தை ஜெயித்துடுவேன் அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன் எதைக் கொடுத்தோம்... எதை எடுத்தோம்... தெரியவில்லை கணக்கு... எங்கு தொலைந்தோம்... எங்கு கிடைத்தோம்... புரியவில்லை நமக்கு... (அன்பே என் அன்பே...)
ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி எந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா... (இசை...) ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் திம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா மவுனத்தை குடி வைக்கவா (இசை...) ஆண்: அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி மறைத்தாலும் மறக்காது அழகே... அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும் உனைப் போல இருக்காது அழகே... அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும் உனைப் போல இருக்காது அழகே... அழகே... அழகே... வியக்கும் அழகே.... அழகே... அழகே... வியக்கும் அழகே....
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ.. வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆ திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள் சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் சிற்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள் பால் கவடி பழக் காவடி புஷ்பக் காவடி சேவற்காவடி மச்சக் காவடி கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார் வடிவேல் முருகனுக்கு அரோகரா வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை திருத்தணி முருகனுக்கு அரோகரா வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே கந்தனாருள் கூட வருமே குமரன் அருள் கூட வருமே