Pages

Search This Blog

Tuesday, January 15, 2019

டிசம்பர் பூக்கள் - மாலைகள் இடம் மாறுது மாறுது

மாலைகள் இடம் மாறுது மாறுது 
மங்கள நாளிலே
மங்கையென் தோள்களைக் 
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்.. மங்களம்.. மங்களம்..

மாலைகள் இடம் மாறுது மாறுது 
மங்கள நாளிலே
மங்கையின் தோள்களைக் 
கூடுது கூடுது ஆனந்தமாகவே

நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை
நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை

தொட்டுவிட்டுப் போகாமல் தொடரும் காதல்
பட்டுவிழி மூடாமல் தோளோடு மோதல்

தாகங்கள்.. வரும் மோகங்கள்.. 
இனி தத்தளிக்கும்

ம்ம் ம்ம்.. தேகங்கள்.. தரும் வேகங்கள்.. 
வெள்ளி முத்தெடுக்கும்

ம்ம் ம்ம்.. தந்த சுகம்.. கண்ட மனம்
கண்கள் படித்திடும்.. சொந்தம் இனித்திடும்

மாலைகள் இடம் மாறுது மாறுது 
மங்கள நாளிலே

மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது 
ஆனந்தமாகவே

தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தன தந்தன னா தந்தனானா
தந்தனான தந்தன தந்தன
தந்தனான தந்தன தந்தன னா

கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்
கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்

கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும்
விட்டுவிடக் கூடாமல் விடிகாலை கூடும்

ஆரங்கள்.. பரிவாரங்கள்.. 
பல அற்புதங்கள்

ம்ம் ம்ம்.. எண்ணங்கள்.. பல வண்ணங்கள்.. 
எழில் சித்திரங்கள்

ம்ம் ம்ம்.. இன்று முதல்.. இன்னிசைகள்
இங்கு பிறந்திடும்.. எங்கு பறந்திடும்

மாலைகள் இடம் மாறுது மாறுது 
மங்கள நாளிலே
மங்கையின் தோள்களைக் 
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்.. மங்களம்.. மங்களம்..

மாலைகள் இடம் மாறுது மாறுது 
மங்கள நாளிலே
மங்கையென் தோள்களைக் 
கூடுது கூடுது ஆனந்தமாகவே



December Pookal - Maalaigal Idam

தாஸ் - ஷாஹீபா ஷாஹீபா பாகமே

ஷாஹீபா ஷாஹீபா பாகமே ஷாஹீபா
உமையோ அதனையோ தருவானே
உயிரே தரவா

ஷாஹீபா ஷாஹீபா பாகமே ஷாஹீபா
உமையோ அதனையோ தருவானே
உயிரே தரவா

அது அது ஒரு சூரியனே
அதில் அதில் ஒரு வெண்ணிலவே
ஒன்றை கண்ணில் கண்டேனே
ஷாஹீபா ஷாஹீபா
ஷாஹீபா ஷாஹீபா
(ஷாஹீபா..)

தடைகள் தொலையட்டும் உன்னால் இன்றே
அதரங்கள் நூறாகட்டும் காதல் கூறுவே
மதை மெயில் தீ பற்ற வருவாஇ தண்ணீரும் உதிரும்
நாம் நடுவில் சென்றலை தாசை பூங்காற்றும்
தாகம் என்னும் தேசத்தை நீ இன்று கைப்பற்று
ஆயுள் ரேகை அழியாமல் ஏன் என் அங்கத்தை இரு கண் முற்று

காதலா காதலா
பருகினான் காதலா
காதலா காதலா
வாழ்க்கையின் காதலா
உன் நுரையின் ஒரு நாள் வாழ்வில் வருமா?

காதலா காதலா
வாழ்க்கையின் காதலா
உன் நுரையின் ஒரு நாள் வாழ்வில் வருமா?
(அது அது..)
(ஷாஹீபா..)




Daas - Shaheeba Shaheeba

Monday, January 14, 2019

சித்திரையில் நிலாச்சோறு - உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி

உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்
பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான்
பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு
அந்த புள்ள கொடு செல்லக்கிளியே

உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா

ஏ முத்து போல புள்ள ஒன்னு
ஏ பெத்து போடு பெத்து போடு
ஏ ஆசையோட கேட்கறத
அட அள்ளிக் கொடு அள்ளிக் கொடு

முன்னவங்க செஞ்ச தவம் செய்கையில் விளங்கும்
நல்லதெது கெட்டதெது போகப் போகத் தெரியும்
பாட்டன் பூட்டன் பண்ணி வெச்ச வேலையெல்லாம்
கொட்டம் போட்டு அட்டகாசம் தான் நடத்தும்
அப்பன் போல புள்ள வந்தா
அப்பனுக்கும் கூட பல புத்திமதி சொல்லிக்கொடுக்கும்

உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்
பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான்
பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு
அந்த புள்ள கொடு செல்லக்கிளியே
உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா

சொல்லித் தந்த விதியெல்லாம் அவனுக்குப் பிறகும்
அப்படியே புள்ளவழி அற்புதமா தொடரும்
நல்ல விதை கெட்டுப்போய் முளைக்காது
நம்பு கண்ணு வானம் வத்திப் போகாது
செல்வம் என்றால் பிள்ளைச் செல்வம்
சேர்ந்த செல்வம் எப்போதுமே உன்னைவிட்டு விலகாது

உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா
பையன் பொறந்தா எங்கப்பன் பேருதான்
பொண்ணு பொறந்தா எங்கம்மா பேருதான்
பேரு வைக்க புள்ள வேணும் எனக்கு
அந்த புள்ள கொடு செல்லக்கிளியே
உங்கப்பன் பேரை சொல்லிச் சொல்லி
திட்ட ஒரு புள்ள பெத்து தா
திட்டுகிற அப்பனையும் திட்டுகிற புள்ள பெத்து தா




Chithirayil Nilachoru - Ungappan Pera

சித்திரையில் நிலாச்சோறு - கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ

கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ 
எனக்காக மண்ணில் வந்த 
எனக்காக இந்த மண்ணில் வந்த 
என் தங்கமே வைரமே செல்லமே...
கல்லாலே செஞ்சு வெச்ச சாமி இல்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வம் இல்லை நீ 

கன்னுகுட்டி நீ துள்ளி ஓடுனா 
கண்ணு பட்டிடும் சொன்ன சொல்ல கேளும்மா 
தேரு வந்து நின்னா கூட நீ அழகு 
மின்னல் வந்து போனா கூட நீ தான் அழகு 
அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் 
எங்க அம்மாவ அப்போ அப்போ நெனச்சுக்குவேன் 
அம்மான்னு உன்ன நானும் கூப்பிடுவேன் 
எங்க அம்மாவை அப்போ அப்போ நெனச்சுக்குவேன் 
நீ செய்கூலி சேதாரம் இல்லாத 
என் தங்கமே வைரமே செல்லமே....

கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ 

மண்ணில் விழுந்த மழை துளி நீ 
என் கண்ணில் இருக்கும் கருவிழி நீ 
பொட்டு வெச்ச சித்திரமே நீ எனக்கு போதும் 
வட்ட நிலா நீ தான் என்று உன் அழக பாடும் 
யானை மேல நீ அமர்ந்து வலம் வரணும் 
நான் எப்ப எப்ப கேட்டாலும் நீ வரம் தரனும் 
நீ வேணும் நிழலாக 
வாழோணும் தங்கமே வைரமே செல்லமே...

கல்லாலே செஞ்சு வெச்ச சாமியில்ல நீ
கற்பூர தீபம் காட்டும் தெய்வமில்ல நீ 
எனக்காக மண்ணில் வந்த 
எனக்காக இந்த மண்ணில் வந்த 
என் தங்கமே வைரமே செல்லமே...
ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ..
ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ..
ஆராரோ ஆரிராரோ ஆரிராரிரோ..



Chithirayil Nilachoru - Kallale Senju Vecha

சித்திரையில் நிலாச்சோறு - காலையிலே மாலை வந்தது

காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது
இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர
உன் காலடிதான் இனி சரணமென
இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல

காலையிலே மாலை வந்தது
நான் காத்திருந்த வேளை வந்தது

கண்களை நான் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தேன்
கண் திறந்தேன் என்ன அழகு
எண்ணத்தை நான் எப்படியோ ஓடவிட்டேன்
இன்று அதில் நல்ல தெளிவு
மூங்கில் காடு முழுசா பாடும்
புல்லாங்குழலாய் மாறும் போது
சித்திரம் எழுதும் கண்மணி அழகு
நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு
உனது இரு விழிகளில் கதை எழுது

காலையிலே மாலை ….

இன்று முதல் வாழும் வரை நான் உனக்கு
இந்த வரம் வேண்டும் எனக்கு
சிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு
சிற்றிடையில் வேலை இருக்கு
எனது உனது மனது நமதாக
விருந்து கலந்து விருப்பம் உனதாக
இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு
என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு

காலையிலே மாலை ….



Chithirayil Nilachoru - Kaalaiyile Maalai

Friday, January 11, 2019

கோயமுத்தூர் மாப்ளே - அண்ணாமலை தீபம்

அண்ணாமலை தீபம் ஹே
அண்ணாமலை தீபம் ஏன் என் மேலதான் கோபம்
உன்ன பார்க்கதானே ரூட்ட மத்தினேன்
ஒண்ணாம் நம்பர் பியூட்டி உன் கண்ணு ரெண்டும் ஊட்டி
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்

ஹ காள மாடு நீங்க
நல்ல கரவ மாடு நாங்க
ஹ வம்பிழுக்காதீங்க
வந்த வழிய பாத்து போங்க

அண்ணாமலை தீபம் ஹே
அண்ணாமலை தீபம் ஏன் என் மேலதான் கோபம்
உன்ன பார்க்கதானே ரூட்ட மத்தினேன்
ஒண்ணாம் நம்பர் பியூட்டி உன் கண்ணு ரெண்டும் ஊட்டி
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்

ஹீரோ எனக்காக மாச கணக்காக
ஹீரோயின் ஏராளம் இருக்கையிலே
ஹாஸ்டல் படி ஏரி காதல் சுதி ஏரி
நானாக வந்தேனே இளமையிலே

ரொம்ப ஒட்டாதே இங்கு கொம்புல முட்டாதே
பொம்பள காத்தோடு நைசா பூவும் சுத்தாதே

என்னடி அம்மாளு நீதான் எப்பவும் நம்மாளு
இன்னமும் கித்தாப்பு ஏம்மா நமுத்த மத்தாப்பு

ராங் ராங் படு ராங் ராங்
எங்க எல்லையில் நிக்குர தொல்லையில் சிக்குர

அண்ணாமலை தீபம் ஹே
அண்ணாமலை தீபம் ஏன் என் மேலதான் கோபம்
உன்ன பார்க்கதானே ரூட்ட மத்தினேன்
ஒண்ணாம் நம்பர் பியூட்டி உன் கண்ணு ரெண்டும் ஊட்டி
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்

மேக்சி அணிஞ்சாலும் டாக்சி இதுதானே
மீட்டர் நீ போடத்தான் நினைக்காதே
காக்கா புடிக்காதே கப்சா அடிக்காதே
நீட்டான ஆளுன்னு வெறுக்காதே

டிங்கிரி டிங்காலே அழகு சுந்தரி வந்தாளே
வந்ததும் முன்னாலே மப்பு ஏறுது தன்னாலே

உச்சி கிக் ஏறி ஏன்யா வெக்கிர கச்சேரி
மெட்டுகள் பாடாதே டப்பான் குத்துகள் போடாதே

வா வா கிட்ட வாமா
உன்ன கண்டதும் சொக்குரேன் தள்ளி ஏன் நிக்குர

அண்ணாமலை தீபம் ஹே
அண்ணாமலை தீபம் ஏன் என் மேலதான் கோபம்
உன்ன பார்க்கதானே ரூட்ட மத்தினேன்
ஒண்ணாம் நம்பர் பியூட்டி உன் கண்ணு ரெண்டும் ஊட்டி
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்

ஹ காள மாடு நீங்க
நல்ல கரவ மாடு நாங்க
ஹ வம்பிழுக்காதீங்க
வந்த வழிய பாத்து போங்க

அண்ணாமலை தீபம் ஹே
அண்ணாமலை தீபம் ஏன் என் மேலதான் கோபம்
உன்ன பார்க்கதானே ரூட்ட மத்தினேன்
ஒண்ணாம் நம்பர் பியூட்டி உன் கண்ணு ரெண்டும் ஊட்டி
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்



Coimbatore Mappillai - Annamalai Deepam

கோயமுத்தூர் மாப்ளே - கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா

கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா

சிறுவானி தண்னி போலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ

ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா
ஆசைல என்ன நெய்ய வந்தியா

ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ

கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா

சிறுவானி தண்னி போலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

 செந்தூரப்பூவே சின்ன வெண்ணிலாவே
என்ன என்ன வேணும் கேளு

 கிள்ளாமல் கிள்ளு பக்குவமாய் அள்ளு
நான் தானே உன் ஆளு

 உன் இடுப்பு மடிப்பிலும்
அடியே இனிப்பு இருக்குது

 உன் உதடு உரசி தான்
இந்த உசிரும் உருகுது

 ஏ சொன்னாக்கா போதும் லூட்டி அடிப்பேன்
வச்சாக்கா குறியை பார்த்து அடிப்பேன்

 அச்சங்கள் போதும் அப்புறம் குடு
தொப்புலுக்கு கீழே பம்பரம் விடு

 ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ

 கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா

 சிறுவானி தண்னி போலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

 அச்சாரம் போடு அப்புறம் தான் கேளு
உன் ஆசை என்ன தாறேன்

 முத்தாக வேணும் உன் உதட்டு காத்து
மந்தார பூந்தேனு

 ரொம்ப உரசி எடுத்துட்டா என் உதடு வலிக்குமே

 அடி வலிக்கும் பொறுத்துக்கோ
பின்னே மனசு இனிக்குமோ

 ஏ சிங்கார பொண்ணு சின்னஞ்சிறிசு
தாங்காது சாமி ரொம்ப இளசு

 விட்டாக்கா வருமா இந்த வயசு
வேண்டான்டி வெட்கம் ரொம்ப பழைசு

 ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ

 கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா
கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா

 சிறுவானி தண்னி போலே துள்ளி குதிச்சா
சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

 சேலம் வந்த சென்னிமலையா
பேரூரில் உள்ள கோயில் சிலையோ

 ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா
ஆசைல என்ன நெய்ய வந்தியா

 ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ
ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹொஹொஹொ ஹோ



Coimbatore Mappilla - Coimbatore Mappillaikku

Followers