ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் உறவினிலாட.. புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் உறவினிலாட.. புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் ஒரு நாள்.... மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி உன்னால் பொன் நாள் கண்டேனே கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே உன் முகம் பார்த்து மலர்ந்தேனே உன் நிழல் தேடி வளர்ந்தேனே ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் உறவினிலாட.. புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு கோபம்.. வேகம்.. மாறாதோ மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ புன்னகையாலே எனை மாற்று பொன்னழகே நீ பூங்காற்று ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் உறவினிலாட.. புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள் மங்கல நான் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும் என்றும் காவல் நீயாக உந்தன் வாழ்வின் தீபம் நானாக மங்கல நான் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும் என்றும் காவல் நீயாக உந்தன் வாழ்வின் தீபம் நானாக காவியம் போலே வாழ்ந்திருப்போம் ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம் ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள் உறவினிலாட.. புதுமைகள் காண காண்போமே எந்நாளும் திருநாள்
மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா.. தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம் ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும் மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. ... ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம் தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம் ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம் தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம் பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள் பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள் நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள் மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா.. ... ஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ.. லலலலலல லலலலலல லா லா லா லா.. ... அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும் எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும் வானம் எங்கும் பறந்து நாம் தேடும் இளம் வயது சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது சேர்ந்ததென்று பாடுதம்மா.. ஆனந்தம் எனது மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா.. தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம் ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும் மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு காதல் கீதம் நீ பாடு ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும் முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும் முத்தங்கள் சங்கீதம் பாடாதோ உன் கூந்தல் பாயின்று போடாதோ கண்ணா கண்ணா உன்பாடு என்னைத் தந்தேன் வேறோடு உன் தேகம் என் மீது... ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை பூவொன்று தள்ளாடும் தேனோடு மஞ்சத்தில் எப்போது மாநாடு பூவின் உள்ளே தேரோட்டம் நாளை தானே வெள்ளோட்டம் என்னோடு பண்பாடு ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு காதல் கீதம் நீ பாடு ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான் உண்டான ஆசைகளை உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே
பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து பெண்குழு : மாமனுக்கு காத்திருந்தேன் காணலே பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும் பெண்குழு : வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே (இசை) பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணலே அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான் உண்டான ஆசைகள உள்ளாற பூட்டி வச்சே திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து ஆண்குழு : ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் ஆண்குழு : சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே *** ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப் பறந்து வரும் மேகந்தான் உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ பெண் : உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது பெண் : நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணலே ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணலே *** பெண் : மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான் மாசக் கணக்கில் கொண்ட நோயிதான் மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணா மாறதோ மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணலே பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும் வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே