மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா.. தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம் ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும் மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. ... ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம் தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம் ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம் தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம் பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள் பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள் நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள் மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா.. ... ஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ.. லலலலலல லலலலலல லா லா லா லா.. ... அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும் எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும் வானம் எங்கும் பறந்து நாம் தேடும் இளம் வயது சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது சேர்ந்ததென்று பாடுதம்மா.. ஆனந்தம் எனது மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா.. மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா.. தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம் ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும் மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு காதல் கீதம் நீ பாடு ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும் முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும் முத்தங்கள் சங்கீதம் பாடாதோ உன் கூந்தல் பாயின்று போடாதோ கண்ணா கண்ணா உன்பாடு என்னைத் தந்தேன் வேறோடு உன் தேகம் என் மீது... ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை பூவொன்று தள்ளாடும் தேனோடு மஞ்சத்தில் எப்போது மாநாடு பூவின் உள்ளே தேரோட்டம் நாளை தானே வெள்ளோட்டம் என்னோடு பண்பாடு ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு காதல் கீதம் நீ பாடு ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான் உண்டான ஆசைகளை உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே
பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து பெண்குழு : மாமனுக்கு காத்திருந்தேன் காணலே பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும் பெண்குழு : வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே (இசை) பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணலே அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான் உண்டான ஆசைகள உள்ளாற பூட்டி வச்சே திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து ஆண்குழு : ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் ஆண்குழு : சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே *** ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப் பறந்து வரும் மேகந்தான் உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ பெண் : உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது பெண் : நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணலே ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணலே *** பெண் : மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான் மாசக் கணக்கில் கொண்ட நோயிதான் மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணா மாறதோ மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணலே பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும் வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே
வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம் அந்த நாடு கடலில் நடக்குதைய திருமணம் அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம் ஒ ஒ ஒ ….ஒ ஒ ஒ …….. கல்யாணமா கல்யாணம் கல்யாணமா கல்யாணம் கல்யாணமா கல்யாணம் கல்யாணமா கல்யாணம் வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம் ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம் ஐயம் மேளம் தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டுதானே நாட்டியம் ஐயம் மேளம் தாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம் நம்ம பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம் அங்கு தேர் போல போகுதைய ஊர்போல காட்சியம் ஊர்போல காட்சியம் வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம் கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதைய வத்திங்கோ கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில இத பார்த்து விட்ட உழுவ மீனு வச்சதைய வத்திங்கோ பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ பஞ்சாயத்து தலைவரான சுறா மீனு தானுங்கோ அவன் சொன்ன படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ கல்யாணம் நடந்து வருது பாருங்கோ வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம் மாப்பிள்ளை சொந்த பந்தம் மீச கார ஈரான்கோ அந்த நெத்திலி பொடிய கார போதிய கலகலன்னு இருக்குது மாப்பிள்ளை சொந்த பந்தம் மீச கார ஈரான்கோ அந்த நெத்திலி பொடிய கார போதிய கலகலன்னு இருக்குது பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா ….. பெண்ணுக்கு சொந்த பந்தம் மீச கார கடுமா ….. அந்த சந்தன மீனு வாவர் மீனு வரவழைப்பு தருகுது … வரவழைப்பு தருகுது … வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம் மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ …… மாப்பிள்ளை வாழ மீனு பழவர் காடு தானுங்கோ அந்த மணப்பொண்ணு விலங்கு மீனு மீஞ்சுறு தானுங்கோ இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ இந்த திருமணத்த நடத்திவைக்கும் திருகமாலு அண்ணங்கோ இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ …? தலைவரு திமீன்கலம் தானுங்கோ !!!! வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த தேனகுனி கூட்டமெல்லாம் ஊர்வோலம் அந்த நாடு கடலில் நடக்குதைய திருமணம் அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம் ஒ ..ஒ …ஒ ..ஒ வாழ மீனுக்கும் …..அந்த தேனகுனி நடு கடலில் …அந்த அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன் காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே ஹா..ஆ..ஆ..ஆ. ஆனந்த ராகங்களில்... நான் ஆலாபனை செய்கிறேன்.. வா..ஆ..ஆ..ஆ.ஆ... நான் உந்தன் கீதம் தன்னை ஆராதனை செய்கிறேன் கன்னங்களில் ஒரு வான் வண்ணமே கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே கண்ணா உந்தன் குழல் ராகங்களால் என் நாவிலும் இன்று குளிர்கின்றதே ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ பொன்மாலை வேளைகளில்... உன் வாசல் நான் தேடினேன் ஹா..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ கண்ணென்னும் ஓடங்களில் கரை தேடி நான் ஓடினேன் கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே காணும் முகம் இன்று எனை வாட்டுதே கண் மைகளில் சுகம் வளர்கின்றதே உன்னில் தினம் உடல் கரைகின்றதே இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன் காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே
கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை கானல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை கானல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை பன்னீர் வழியும் பால் நிலவை பாறைகள் மூடுதே இரவினில் உருகும் கனவுகளே காற்றினில் ஓடுதே ஒரு மன தேகமா இது உலகத்தின் சாபமா ஒரு மன தேகமா இது உலகத்தின் சாபமா விழிநீரில் விதியானதே முடிவான கதையானதே கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை காணல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை ஆதிக்கமே உந்தன் பாதிப்புதான் அவள் தலை ஏறியதோ வேதனை மீறிடும் சோதனைகள் வேடிக்கை காட்டுதோ நான் நானில்லை வின்னில் நிலவில்லை நான் நானில்லை வின்னில் நிலவில்லை அவனில் அவளில்லை உயிரில் ஒலியில்லை கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை காணல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை
உன்னை உன்னிடம் தந்து விட்டேன் நீ என்னை என்னிடம் தந்து விடு போதும் போதும் எனை போக விடு கண்மணி எனை போக விடு கண்மணி கண்மணி தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய் எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே உயிரே உயிரே உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் காதல் உண்டானதே எனை போக விடு கண்மணி விழிகள் என்கின்ற வாசல் வழியாக காதல் உள்சென்றதே இனியும் உன் பேரை என் நெஞ்சோடு ஒட்டி வைப்பதா எனது பொருள் அல்ல நீதான் என்று எட்டி வைப்பதா விடைகள் இல்ல வினாக்கள் தானடி தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூர சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீயே நிற்கிறாய் எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய் தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே