Pages

Search This Blog

Friday, December 21, 2018

மங்கை மான்விழி அம்புகள் - நிஜம் தானா பெண்ணே அருகினில்

நிஜம் தானா
பெண்ணே அருகினில்
வந்தாய் நானும் சிலிர்த்து
கொண்டேன் நெஞ்சம்
எல்லாம் நீதான்
பெண்ணே

இது போல என்றும்
வருவாயா பெண்ணே எதிர்
பார்த்து நின்றேன் நாட்கள்
எல்லாம் அன்பே

உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான்
பெண்ணே
நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன் நானே

இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன் பெண்ணே
உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன் நானே

ஏனோ உன்னை
நானும் கண்டேன் ஏனோ
ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்

உரையாடும்
நொடிகளில் உறைந்து
போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக
பேசாத நொடிகளில்
லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன்
அனலாலே

உன்னோடு
நடக்கையில் விண்ணில்
பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக

வெண்ணிலவு
என்னை நீ மேகமாக
சூழ்ந்தாய் பெண் இவளை
நீதான் உன் கண்ணியத்தால்
வென்றாய்

சாலை ரயிலாய்
தினமும் நீ என்னில்
தொடர்ந்தாய்
காலை வெயிலாய்
முழுதும் நீ என்னில்
படர்ந்தாய்

மாலை மயிலே
தோகை நீ விரித்தாய் எனக்காய்
நானும் உனதே
இதில் என்ன கேள்வி

சிறு பூவில்
தேனை தேடும் வண்டாய்
நானே என் பாலை வனத்தில்
பூத்த முதல் ரோஜாவே என்
தேவை நீதான் அன்பே
உனக்காய் நானே உனக்குள்ளும்
நானும் வந்தால் சொல்லேன்
பெண்ணே

உரையாடும் நொடிகளில்
உறைந்து போகிறேன் உந்தன்
வார்த்தைகள் பனியாக பேசாத
நொடிகளில் லேசான உரசலில்
சாம்பல் ஆகிறேன் அனலாலே
உன்னோடு நடக்கையில்
விண்ணில் பறக்கிறேன் எந்தன்
வானத்தில் விண்மீனாக

உந்தன் கண்கள்
காணவே காத்திருக்கிறேன்
நாளும் நான் தான் பெண்ணே
நகராத நொடிகளில்
போரும் தொடுக்கிறேன்
கடிகாரத்துடன் நானே

இந்த மாலை
நேரத்தில் சாலை
ஓரத்தில் மரமாய்
நின்றேன் பெண்ணே
உன்னை கண்கள்
கண்டதும் குழந்தை
போலவே துள்ளி
குதிக்கிறேன் நானே

ஏனோ ஹோஹோ
உன்னை நானும் கண்டேன்
ஏனோ ஹோ எந்தன் உள்ளே
நீயும் முதல் தூரலாய்

நிஜம் தானா பெண்ணே
அருகினில் வந்தாய்
நானும் சிலிர்த்து கொண்டேன்
நெஞ்சம் எல்லாம்
நீதான் பெண்ணே



Mangai Maanvizhi Ambugal - Nijam Thaana Penne Aruginil

Wednesday, December 19, 2018

எட்டுபட்டி ராசா - அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய... புள்ள

தும்ப பூவு மல்லு வெட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுகளே
வழி விடுங்க நேரமாச்சு..

ஏழ புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு யாஹ்ஹ்ஹ
இடுப்பு கொசுவத்துல சூட்சுமம் இருக்கு
நீ நெளிஞ்சு போகையில நெஞ்சுல சூழலுக்கு

வாட கத்தடிச்சு வாட்டுது மாமா
என் கூட வந்து குச்சிக்குள்ள ஒத்திக மாமா
உன் கூடலுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா

உன் கண்ணு ரெண்டும் நாவற்பழம்
காச்சிருக்கு கொய்யாப்பழம் மூடி வைக்காத
திங்காம வீணடிக்காத

அட புல்லறுக்க போகையில
புள்ள வரம் கேட்க வந்தேன்
தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய புள்ள

ஓரஞ்சாரம் பார்த்து ஒதுங்கனும் பதமா
பின்ன ஓட தண்ணிக்குள்ள
முங்கி குளிக்கணும் சுகமா
மெல்ல லாவகம் உன்முதுகை தேய்கனும் இதமா

மாமா பம்முறியே பொழுதுக்கு மேல
நீ கம்மன்காட்டு மூலையில்லே கள்ளன போல
நான் ஒத்தையில தான் வருவேன் உன் நெனைப்பால

அட மஞ்ச காட்டு ஓரதில்லே
மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா

அட வெள்ளைச்சோள சோறு வெச்சு
காரப்பூவ ஏழரைச்சு
ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா

ஏஹ் புள்ள...பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய

தும்ப பூவு மல்லு வெட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுகளே
வழி விடுங்க நேரமாச்சு.. யாஹ்ஹ்ஹ...



Ettupatti Rasa - Panju Mittai

மறுமலர்ச்சி - நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்

நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….

ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்

செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்

இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குரா ?

வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே!
எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மாகலங்குரா ?
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தால நீ கிடைச்சே
திருக்கோவில் வீடுயென்று
வெளக்கேத்த நீயும்வந்த
நேரில் வந்த ஆண்டவனே..



Marumalarchi - Nandri Solla Unakku

கிழக்கு சீமையிலே - எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு

ஐயம் பொண்ணு கம்மாயில
அயிர மீனு புடிக்கையில கெண்டு தல கெண்டு என்ன புடிச்சி

மஞ்சு தண்ணி கெடைக்கையில மாராப்பு தான் ஒதுக்கையில
மல்லியப் பூ வாங்கி என்ன புடிச்ச

ஹை ஒத்தை அடி பாதையில ஒத்தையில போகயில
சுத்தி வந்து என் கொசுவம் முடிச்ச

கருசப்பட்டு மந்தையில கரகாட்டம் ஆடையில
காரக் கத்து கன்று என்ன புடிச்சா

ஹே தொட்டு தொட்டு தோள் புடிக்க தூக்கம் வந்தா கால் அமுக்க
நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு

வாரத்துக்கு ஏழு நாளு மன்னார் குல
நாளு பேரு மூணு பேரு கொரையுதடி கணக்கு

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு

கண்ணுக்காட்டு தேன் ருசியா கன்னி பொண்ணு வாய் ருசியா
பந்தையத்த கெட்டு மச்சான் தோக்கட்டும்

வெள்ளரி பூ அழகா வெடல புள்ள தோள் அழகா
விவகாரம் பேசி முடி வெளுப்போம்

பசு மாட்டு நெய் ருசியா பந்தி மாட்டு நீ ருசியா
வாய் போட்டு பேசி பேசி முடிப்போம்

சுண்டக்கானி பால் இனிப்பா சுண்டுவிரல் நா இனிப்பா
சூடத்த அணாச்சி முடி வேடுப்போம்

வயித்துல புள்ள இல்ல வாழ்க்கையில தொள்ளை இல்லை
வாழ்க்கையில இன்பம் கண்டு ஜெய்ப்போம்

சக்காலத்தி சண்ட இல்ல தாலி கட்டும் வம்பு இல்லே
இப்படியே எல்லா நாளும் இருப்போம்

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு



Kizhakku Cheemayile - Edhukku Pondatti

சீவலப்பேரி பாண்டி - ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு

ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு,

குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு,

கரிச காட்டு காடைய

காடு கொடுத்த ஓடையே

ஆட்டுக்கு வேலி தேவையும் இல்லை,
என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை .

ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு,

குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு

அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு,

ஏய் மலையே மலையே மேகத்தை எடுத்து தாவணி நீ போடு,

அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு,

ஏய் மலையே மலையே மேகத்தை எடுத்து தாவணி நீ போடு .

இந்த காடே என் வீடு
என் உறவே எ ஆடு

அட கண்ணீர் சந்தோசம்
அது ரெண்டும் என் பாடு,

மழை வந்தால் என்ன,.
இடி வந்தால் என்ன,

நீ துணிஞ்சு விளையாடு
நீ துணிஞ்சு விளையாடு

ஒயிலா பாடும் பாட்டுலே ஆடுது ஆடு

குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு

நான் முப்போது முழிச்சுருகேன்
நான் எப்போதும் தனிசுருக்கேன்,

அட ஆஸ்தியும் இல்லை
அவஸ்தையும் இல்லை

ஆன்னாடம் சிரிச்சுருக்கேன்,

ஒரு குருவிக்கு கூடு இருக்கு,
இந்த குமரிக்கு வீடுருக்கா,

அந்த ஆத்துக்கு கிளை இருக்கு
ஒரு அடிக்கலாம் எனக்கிருக்க,

வெயில் வந்தாலென்ன
இருள் வந்தாலென்ன

என் சந்தோசம் கொரைஞ்சுருக்க
சந்தோசம் கொரைஞ்சுருக்க...

ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு,

குயிலே நீ என் பாட்டுல சங்கதி போடு,

கரிச காட்டு காடையே
காடு கொடுத்த ஓடையே

ஆட்டுக்கு வேலி தேவையும் இல்லை,

என் பாட்டுக்கு தாளம் தேவையும் இல்லை .

ஒ ஒ ...



Seevalaperi Pandi - Oyila Paadum Paattula

Tuesday, December 18, 2018

பேட்ட - தட்டலாட்டம் தாங்க தர்லாங்க சாங்க

பாக்க தான போற
இந்த காளியோட ஆட்டத்த

தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க

தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க

திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க

கெத்தா நடந்து வரான்
கேட் எல்லாம் கடந்து வரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால

ஸ்லீவ்வ சுருட்டி வரான்
காலரதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார

மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்

மாஸ் மரணம்
டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்

தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க

திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க

ஏய் ஏய் ஏய்(4)

எவன்டா மேல
எவன்டா கீழ
எல்லா உயிரையும்
ஒன்னாவே பாரு

முடிஞ்ச வரைக்கும்
அன்ப சேரு
தலையில் ஏத்தி வெச்சு
கொண்டாடும் ஊரு

நியாயம் இருந்து
எதிர்த்து வரியா
உன்ன மதிப்பேன்
அது என் பழக்கம்

கால இழுத்து
உயர நினைச்சா
கெட்ட பையன் சார்
இடியா இடிக்கும்

கெத்தா நடந்து வரான்
கேட் எல்லாம் கடந்து வரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால

ஸ்லீவ்வ சுருட்டி வரான்
காலரதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார

மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்

மாஸ் மரணம்
டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்

தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க

திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க

இட்டால் பத்திரி
சொல்லு புத்திரி
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி
சல்பிலோ
ஏய் ஏய் ஏய்(2)

இட்டால் பத்திரி
சொல்லு புத்திரி
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி
சல்பிலோ
ஏய் ஏய் ஏய்(2)

மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்

மாஸ் மரணம்
டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்



Petta - Marana Mass

பேட்ட - இளமை திரும்புதே புரியாத புதிராச்சே

இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே

ஏ துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்

கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே

கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே

ஏ இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே

ம்ஹ்ம்ம் வாழ்க்கையே
வாழ தானே
வா என் கண்ணே
வாழ்ந்துதான் பார்போமா
வானவில் கோர்ப்போமா

சாய்கையில் தாங்கதேவை
ஒரு தோள் தானே
தனி மரம் நானடி
தோட்டமாய் நீயடி

வாலிபத்தின் எல்லையில்
வாசல் வந்த முல்லையே
போகும் வரை போகலாம்
என்ன பிழையே

ஊரே நம்மை பார்ப்பது போலே
ஏதோ பிம்பம் தோன்றுது மானே
கால்கள் தரையில் கோலம் போட
மெல்ல தொடுதே காதலே

இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே

ஏ துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்

{கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே} (2)

இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே



Petta - Ilamai Thirumbudhe

Followers