Pages

Search This Blog

Wednesday, December 5, 2018

ஜருகண்டி - யாரடி நீ நானாக அடி காலம் கையில்

யாரடி நீ நானாக
அடி காலம் கையில் வருமே தானாக

போகும் வழி பூவாக
இனி காற்றில் மிதப்பேன் நானும் நூலாக

யாரோவாக நினைத்தேன்
பூவே உனக்காய் கனிந்தேன்
தீவில் நடுவில் மரமாய் நான் இருப்பேன்

ஓய்வாய் பறவை இருக்க
உறவாய் சிறகை விரிக்க
ஆழக்கடலில் படகாய் இரவின் நிலவு நீ

புது புது மலைகளை அள்ளி 
மலைகளும் குளித்திடுமே
உறவின்றி வளர்கின்ற வேம்பில்
பனை வந்து முளைத்திடுமே

சுட சுட சூரியன் கண்டு
உலகமும் துளிர்த்திடுமே
நகர்கின்ற மேகங்கள் போலே
துயரங்கள் நகர்ந்திடுமே

ஓ ஓ
வானத்தின் தாரகை 
வாசல் தேடி வந்ததே
வாதைகள் தூரமாய்
ஓடி போகுதே

அடி தாகங்கள்
தீர்ந்து நீ
சாய்ந்து கொள்ளும் வேளையில்
தூதனை போலவே வந்தேன்
தாங்கி கொள்ளவே

கண்ணுக்குள் அச்சங்கள்
நீங்கட்டுமே
காற்றினில் தென்றலும் நீந்தட்டுமே
நம்மோடு காலங்கள் சேரட்டுமே
ஒன்றோடு ஒன்றாக மாறட்டுமே

ஒரு வழி
திறக்கின்ற போது
மறு வழி அடைக்கின்றதேனோ
மறு வழி அடைக்கின்ற பொது
ஒரு வழி திறந்திடும் தானே
திறந்திடும்

யாரடி நீ யாரடி நீ
யாரடி நீ யாரடி நீ
நீ நீ நீ நீ நீநீ

புது புது
மலைகளை அள்ளி
மலைகளும் குளித்திடுமே
உறவின்றி வளர்கின்ற வேம்பில்
பனை வந்து முளைத்திடுமே

சுட சுட சூரியன் கண்டு
உலகமும் துளிர்த்திடுமே
நகர்கின்ற மேகங்கள் போலே
துயரங்கள் நகர்ந்திடுமே

யாரடி நீ



Jarugandi - Yaaradi Nee Naanaaga Adi kaalam kaiyil 

அழகன் - மழையும் நீயே வெயிலும் நீயே

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா…உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா…உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அது தானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தானே
அது தானா மோன நிலை
இதுதான்…சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா…உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

கலையெல்லாம் கற்றுக்கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலைபோல் இதயம் அலையும்
கருநீலக்கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யார் அறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யார் அறிவார்
முதலாய்…முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா…உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா



Azhagan - Mazhaiyum Neeye 

கடவுள் அமைத்த மேடை - மயிலே மயிலே உன் தோகை இங்கே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலம் அல்லவோ
தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ
மயிலே மயிலே மயிலே மயிலே

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தம் இல்லையோ
உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே மயிலே மயிலே

தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேன் அளக்க
பனி வாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா நான் தொடவா

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தம் இல்லையோ
உறவுகள் வளராதோ நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே மயிலே மயிலே

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டிமேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டிமேளம் முழங்க
பூங்குழலி தேனருவி தோளிரண்டும் நான் தழுவி
வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலம் அல்லவோ
தனிமையில் விடலாமோ தளிருடல் தொடலாமோ
மயிலே மயிலே மயிலே மயிலே



Kadavul Amaitha Medai - Mayile Mayile Un Thogai Enge

நினைவெல்லாம் நித்யா - ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ஆ
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை எழுதும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை எழுதும் ஓர் கவிதை
மௌனமே சம்மதம் என்று…தீண்டுதே மன்மத வண்டு
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்

வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன்…கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கும் நூலாவேன் ஹா ஹா

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல்



Ninaivellam Nithya - Rojavai Thalattum Thendral

உயிரே உனக்காக - பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

மேலாடையில் நூலாக வா
மேலாடையே நானாகவா
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
கேளாத ராகம் எந்தன் காதில் பாடு
ஆனந்த மாறன் அம்பானது
நெஞ்சுக்குள் பாய்ந்து வம்பானது
உறங்கும் போது…னன னன னன னன
னன னன …னா னா னா னா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

ஆசை மனம் மூடாதடி
வாய் பேசுமோ உன் பூங்கொடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசை கோடி
மௌனங்கள் காவல் காக்கும் ஆசை கோடி
புண்ணாகச் செய்யும் ஆலிங்கனம்
தாங்காது கண்ணா பிருந்தாவனம்
தழுவும் போது…லல லல லல லல
லல லல…லா லா லா லா

பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா

வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா



Uyire Unakkaga - Poo Enbatha Pon Enbatha

உனக்காகவே வாழ்கிறேன் - இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்

இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

எந்த சொந்தங்கள் யாரோடு என்று காலம்தான் சொல்லுமா
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம் தேதிதான் சொல்லுமா
சோலை எங்கும் சுகந்தம் மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏன்தான் மயங்கும் கண்கள் சொன்னால் விளங்கும்
ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல
மாயம் அல்ல மந்திரம் அல்ல

இளஞ்சோலை பூத்ததா இளஞ்சோலை பூத்ததா

ஊமையாய் போன சாங்கீதம் ஒன்று இன்றுதான் பேசுதோ
மேடை இல்லாமல் ஆடாத கால்கள் இன்றுதான் ஆடுதோ
கண்ணில் என்ன கனவோ நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார்தான் கேட்பது விதிதானே சேர்ப்பது
இந்த பாசம் பாவம் இல்லை நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை

இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்



Unakkagave Vazhkiren _ Ilam Solai POothatha Enna Jaalam

Saturday, December 1, 2018

24 - காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ

என் ஆற்றல் அரசே வா
என் ஆற்றல் அழகே வா
(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அரசே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை
(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அழகே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொெளியோ
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே
வெற்றி எல்லாம் விரல் நுனியிலே
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே
காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள்
கனவு வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
ஆகாயத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப் பிள்ளை நான் தானோ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

காலத்தின் கையில் நான் பிள்ளை போல ஆவேன்
காதலின் கையைப் பற்றி முன்னும் பின்னும் பாேவேன்
சந்திர சூரியனை கோலியாக கேட்பேன்
உலகத்தின் வாழ்வையெல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்
யார் அட முன்னே சென்றாலும் விட்டு சென்றாரா

ஆற்றல் அரசே அரசே வா வா
ஆற்றல் அழகே அழகே வா வா
ஆக்கும் அறிவே அறிவே வா வா
காக்கும் கரமே கரமே வா வா
நோக்கும் பொருளே வா
ஆக்கும் திறமே வா
நோக்கும் பொருளே வா
ஆக்கு திறமே வா

(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அரசே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை

(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அழகே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொெளியோ
காலம் என் காதலியோ

கண் காணா மோகினியோ



24 - Kaalam Yen Kadhal

Followers