Pages

Search This Blog

Wednesday, December 5, 2018

உனக்காகவே வாழ்கிறேன் - இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்

இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

எந்த சொந்தங்கள் யாரோடு என்று காலம்தான் சொல்லுமா
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம் தேதிதான் சொல்லுமா
சோலை எங்கும் சுகந்தம் மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏன்தான் மயங்கும் கண்கள் சொன்னால் விளங்கும்
ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல சந்தம் பொங்கும் மெல்ல
மாயம் அல்ல மந்திரம் அல்ல

இளஞ்சோலை பூத்ததா இளஞ்சோலை பூத்ததா

ஊமையாய் போன சாங்கீதம் ஒன்று இன்றுதான் பேசுதோ
மேடை இல்லாமல் ஆடாத கால்கள் இன்றுதான் ஆடுதோ
கண்ணில் என்ன கனவோ நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார்தான் கேட்பது விதிதானே சேர்ப்பது
இந்த பாசம் பாவம் இல்லை நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை

இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ணக்கோலம்



Unakkagave Vazhkiren _ Ilam Solai POothatha Enna Jaalam

Saturday, December 1, 2018

24 - காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ

என் ஆற்றல் அரசே வா
என் ஆற்றல் அழகே வா
(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அரசே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை
(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அழகே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொெளியோ
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே
வெற்றி எல்லாம் விரல் நுனியிலே
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே
காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள்
கனவு வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
ஆகாயத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப் பிள்ளை நான் தானோ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

காலத்தின் கையில் நான் பிள்ளை போல ஆவேன்
காதலின் கையைப் பற்றி முன்னும் பின்னும் பாேவேன்
சந்திர சூரியனை கோலியாக கேட்பேன்
உலகத்தின் வாழ்வையெல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்
யார் அட முன்னே சென்றாலும் விட்டு சென்றாரா

ஆற்றல் அரசே அரசே வா வா
ஆற்றல் அழகே அழகே வா வா
ஆக்கும் அறிவே அறிவே வா வா
காக்கும் கரமே கரமே வா வா
நோக்கும் பொருளே வா
ஆக்கும் திறமே வா
நோக்கும் பொருளே வா
ஆக்கு திறமே வா

(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அரசே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை

(என்)மாயம் இல்லை
(ஆற்றல்)மந்திரம் இல்லை
(அழகே)ஜாலம் இல்லை
(வா)தந்திரம் இல்லை
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொெளியோ
காலம் என் காதலியோ

கண் காணா மோகினியோ



24 - Kaalam Yen Kadhal

அன்பே ஓடிவா - அழகான பூக்கள் மலர்ந்தாடுமே

அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே
பொன்மானே செந்தேனே வந்தேனே
உன் கண்ணில் கண்டேனே என்னை நானே
அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே

காலங்களே சொல்லுங்களே காதல் ஒரு வேதம்
வேதங்களின் சாரங்களை நான் பாடுவேன் நாளும்
ஓடைக்கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்
ஓடைக்கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும்
நீ சூடும் பூவெல்லாம் மோட்சம் போகுமா
ஜீவன் தொடும் தேவன் மகள் யார் அது நீயா

அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே

லாலா லலா லலா லலா
லாலா லலா லலா லலால
லால லா லா லா லா ஹா

மேகங்களில் ஊஞ்சல் கட்டி ஆடிவிடு தோழி
ஆகாயத்தில் பூப்பூக்கட்டும் ஆணையிடு தேவி
மௌனங்களே உன் பாஷையா தாங்காதடி ஆவி
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
நான் பாடும் கானங்கள் காதில் கேட்குமா
காதல் தரும் காமன் மகள் யார் அது நீயா

அழகான பூக்கள் மலர்ந்தாடுமே
நீ வந்து நின்றால் வாய் மூடுமே



Anbe Odivaa - Azhagana Pookal Malarthadume

கோ - கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு..
கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்ல வேடன் தங்கள்

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

இது ஒரு வாலிப கோட்டை, மறந்திடு நீ வந்து வீட்டை
நீ என்னக்கு நான் உன்னக்கு.. சேர்ந்திருந்தால் நாம் நமக்கு..
இமைகளில் ஈரமே இல்லை
இதயத்தில் பாரமும் இல்லை
பல் முளைத்த மின்னலை போல்
நாள் முழுதும் நாம் சிரிபோம்

இது போன்ற நாட்கள்தான்
உதிராத பூகல்தான்
நங்கள் நிலவும் கதிரும்
இணைந்த போழுதாவோம்

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாது தொட்டு விட ஓடு..
போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாது தொட்டு விட ஓடு ஓடு ஓடு..

நதிகளும் தேங்குவதில்லை, அலை கடல் தூங்குவதில்லை
வாழும் வரை விழித்திருந்தால் உன் கனவை யார் பறிப்பார்..
ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்.. விதிகளை வேர்வையில் வெல்வோம்

வேற்றுமையின் வேரறுத்து, வானவில்லை சேர்ந்திருப்போம்.
ஒன்று கூடி யோசித்தோம்.. நம்மை நாமே நேசித்தோம்..
எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும்..

கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு
நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு

கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்.. வெப்பத்துக்கு காற்று நாங்கள்..
மரமுக்கு மாற்று நாங்கள்.. வேடன் இல்ல வேடன் தங்கள்..

கள கள.. காது வந்து கிட்ஸ்..
பல பல.. Yeah Bala Bala..
கள கள.. Drop You Say..
பல பல.. Boombastha..



Ko - Gala Gala Kaala Gangu

கோ - அகா நாகா நாகா சிரிப்புகள் அழகா

பஞ்ச, போய்ஸ் அண்ட் கேள்ஸ்
யு பிபுல் லுக் சோ குட் டுநைட்
லெட்ஸ் பார்ட்டி அண்ட் ஹிட் திஸ் பா
அஸ் வி டேக் இட் ஹயர்
வி கொன்ன சேட் தி சாங் ஆன் பயர்..
அண்ட் எ சிறகுகளின் வணக்கம் சவகத நமஸ்காரம் வந்தனம்
விண்ணிலும் மண்ணிலும் உள்ளா நட்சத்திரங்களோடு
ஒண்ணா சேர்ந்து இணைந்து பிணைந்து நினைந்து
பிச்சு பின்னி பேர்தேடுகலம் எ..

அகா நாகா நாகா சிரிப்புகள் அழகா
திகு தக தக நிழவுகள் அழகா
வெரி வெரி சமதுகள் அழகா
கொலு கொழுப்புகள் அழகா

அகா நாகா நாகா சிரிப்புகள் அழகா
திகு தக தக நிழவுகள் அழகா
வெரி வெரி சமதுகள் அழகா
கொலு கொழுப்புகள் அழகா

லம்போகினி லவ் ஒ மனி வெள்ளி சனி.. இரவெல்லாம் இதழ் பணி..
நீ பத்தினி தீபதினி உன்மேல் இனி.. யாரடி தேனி..

தொழ் சாய்த்தால் அணைப்பு அவன் தோழன் என்ற நினைப்பு
ஏன் இந்த படைப்பு இங்கு இல்லை களைப்பு..
தொழ் சாய்த்தால் அணைப்பு அவன் தோழன் என்ற நினைப்பு
ஏன் இந்த படைப்பு இங்கு இல்லை களைப்பு..



Ko - Aga Naga Naga Siripugal Azhaga

கோ - நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்

நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்!

ஏன் பிறந்தோம்
என்றே இருந்தோம்
கண் திறந்தோம்
அவ்வான் பறந்தோம்

மாற்றம் தேடியே - தினமொரு
நேற்றைத் தோற்கிறோம்
வேற்றுப் பாதையில் - பூமி
சுற்றப் பார்க்கிறோம்

விளக்கேற்றும்
சுழற்காற்றாய்
செல்வோமே!

Cafe beach இலும் - கனவிலே
கோட்டைக் கட்டினோம்
facebook wall இலும் - எங்கள்
கொள்கை தீட்டினோம்

இணைந்தோமே
முனைந்தோமே
பார்ப்போமே !!!



Ko - Netri Pottil Patriya Ennam

கோ - என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்

என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
அண்டி அகலுது வழியில்..
சிந்திச் சிதறுது விழியில்!!

என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில் ..
றெக்கை விரிக்குது கனவில்..
விட்டுப் பறக்குது தொலைவில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!

நீயும் நானும் யந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே..

முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்..
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்..

நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்..
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்!

ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

நீயும் நானும் யந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே..

எங்களின் தமிழச்சி
என்னமோ ஏதோ you're lookin so fine,
மறக்க முடியலையே என் மனமின்று ..
உன் மனசோ lovely இப்படியே இப்ப,
உன்னருகில் நான் வந்து சேரவா என்று..

Lady lookin like a cindrella cindrella..
Naughty looku விட்ட தென்றலா?
Lady lookin like a cindrella cindrella..
என்னை வட்டமிடும் வெண்ணிலா..

சுத்தி சுத்தி உன்னைத் தேடி..
விழிகள் அலையும் அவசரம் ஏனோ?
சத்த சத்த நெரிசலில் உன் சொல்..
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?

கனாக்கானத் தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ?
வினாக்கான விடையும் காணக் கண்ணீரும் கொண்டேனோ?
நிழலைத் திருடும் மழலை நானோ?

ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

ஓஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!!



Ko - Ennamo Yeatho 

Followers