Pages

Search This Blog

Friday, November 30, 2018

வேலையில்லா பட்டதாரி - அம்மா அம்மா நீ எங்க அம்மா

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

தேடிப்பாத்தேனே
காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன்
வா நீ வெளியே

தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என்மேல்
உனக்கென்ன கோபம்

கண்ணான கண்ணே
என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்

ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்

பகலும் இரவாகி மாயமானதே அம்மா
விளக்குன் துணையின்றி இருளானதே

உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை இலையானதே

ஓ...
அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு

வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு

நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை

ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே

காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

அம்மா அம்மா
நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா
எனக்காரு அம்மா

எங்க போனாலும்
நானும் வருவேன்
கண்ணாடி பாரு
நானும் தெரிவேன்

தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே

இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்



Velaiyilla Pattathari - Amma Amma Nee Enga Amma

வாழ்வே மாயம் - தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு

தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி
கிடைத்திட வரம் கொடம்மா (2)

கையில் மணியை தினமும் பிடித்தே 
ஆட்டும் பக்தன் அம்மா
சூடம் ஏத்தி மேலும் கீழும்
காட்டும் பித்தன் அம்மா

தேவி ஸ்ரீ தேவி ....

மாலை மரியாதை மணியோசை எதற்கு
தேவி அவதாரம் நான் தானா உனக்கு
போலி பூசாரியே ..
பட்ட போடாத பூசாரி நான் 
பண்ண கூடாதோ பூஜைகள் தான் 
அம்மன் உன் மேனி ஆணி பொன் மேனி
அன்பன் தொட வேண்டுமே
எடத்த கொடுத்தா மடத்த புடிப்பே
எனக்கா தெரியாது ஹே ஹே ஹே
வரத்த கொடுத்த சிவனே தவிச்சான் 
எனக்கா தெரியாது 

தேவி ஸ்ரீ தேவி ....

பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி
அண்ட முடியாது ஆங்கார சக்தி
ஆசை அடங்காதையா
கண்ணில் நடமாடும் சிவகாமியே
அன்பின் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி
எனக்கு நீ தான் அம்மா
செக்கு மாடு சுத்தி வரலாம் 
ஊர் போய் சேராது
ததரினா தனா தனா
இந்த மோகம் ஒரு தலை ராகம் 
மயக்கம் தீராது 

தேவி ஸ்ரீ தேவி ....



Vazhve Maayam - Devi Sridevi Un Thiruvaai

வாழ்வே மாயம் - வாழ்வே மாயம்! இந்த வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!
வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

தரை மீது காணும்
யாவும், தண்ணீரில்
போடும் கோலம்!
நிலைக்காதம்மா...!
யாரோடு யார் வந்தது?
நாம் போகும்போது,
யாரோடு யார் செல்வது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

யாரார்க்கு என்ன வேஷமோ?
இங்கே
யாரார்க்கு எந்த
மேடையோ?
ஆடும் வரைக் கூட்டம்
வரும்,
ஆட்டம் நின்றால்
ஓட்டம் விடும்!
தாயாலே வந்தது தீயாலே
வெந்தது!
தாயாலே வந்தது தீயாலே
வெந்தது!
மெய் என்று மேனியை யார்
சொன்னது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

பிறந்தாலும் பாலை
ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை
ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்!
ஊர்போவது நாலாலதான்!
கருவோடு வந்தது,
தெருவோடு போவது!
கருவோடு வந்தது,
தெருவோடு போவது!
மெய் என்று மேனியை யார்
சொன்னது?

வாழ்வே மாயம்! இந்த
வாழ்வே மாயம்!

நாடகம் விடும்
நேரம்தான் உச்சக்
காட்சி நடக்குதம்மா!
வேஷம் கலைக்கவும்
ஒய்வு எடுக்கவும் வேலை
நெருங்குதம்மா!
பாதைகள் பல மாறியே வந்த
பயணம் முடியுதம்மா!
தாய் கொண்டு வந்ததை,
தாலாட்டி வைத்ததை,
நோய் கொண்டு போகும்
நேரமம்மா!



Vazhvey Maayam - Vazhve Maayam Intha Vazhve

வாழ்வே மாயம் - நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான்
மேகதூதமே
தேவிதாசன் பாடுவான்
காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல்
நானில்லையே ஊடல் ஏன்
கூடும் நேரம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நானும் நீயும்
நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே
வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ
விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே
நான்தான்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா



Vaazhve maayam - Neela Vaana Odayil

வாழ்வே மாயம் - மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது (2)

இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது

சரணம் - 1

மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம் (2)
விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது
தலைமுதல் கால்வரை சிலிர்த்திடத்தான்
பூவை நானும் பூவல்ல பூப்போல நீ கிள்ள
எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

சரணம் - 2

ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய (2)
கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்
காமன் பாடும் சங்கீதம் காலத்தின் சந்தோஷம்
தொடத் தொடத் தொடர்ந்தது
கொடியெனப் படர்ந்தது

மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது

இத்தனை காலம் சித்திரப் பெண்ணை
பார்வை தேடியது
ஆ...ஒரு பாடல் பாடியது
அதில் ஊடல் கூடியது



Vaazhve maayam - Mazhai kaala megam Ondru

Thursday, November 29, 2018

கிழக்கே போகும் ரயில் - கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ பாஞ்சாலி…பாஞ்சாலி

கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ பரஞ்சோதி…பரஞ்சோதி

கோவில் மணி ஓசைதன்னை
கேட்டதாரோ இங்கு வந்ததாரோ
கன்னிப்பூவோ பிஞ்சுப்பூவோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ

கோவில் மணி ஓசைதன்னை
செய்ததாரோ அவர் என்ன பேரோ
பாட்டுப்பாடும் கூட்டத்தாரோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசைக்கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்னச்சின்ன முல்லை கிளிப்பிள்ளை
என்னை வென்றாளம்மா

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ

ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்லக்கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா
பாடும்வரை பாடு தாளம் போடு
அதை நீயே கேளு

கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ

என் மனது தாமரைப்பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக

ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடிப்பாரு
நல்ல பெண்ணைக் கண்டால் கொஞ்சம் சொல்லு
அது நீதானம்மா

கோவில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ…பாடுப்பாடும் கூட்டத்தாரோ
ஏழைக்குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு
கோவில் மணி ஓசைதன்னை செய்ததாரோ



Kizhakke Poghum Rail - Koil Mani Osai

செம்பருத்தி - நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
தென்றல் தேரில் நாம் தான் போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும்
நினைத்தால் இது போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது
நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்
நடக்கும் தினமும் ஆனந்த யாகம்
சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம்
அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம்

அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்



Sembaruthi - Nila Kaayum Neram Saranam Ula Poga Neeyum Varanum

Followers