Pages

Search This Blog

Tuesday, October 30, 2018

கேளடி கண்மணி - தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான்  காதல் சந்தம்
ஆடும் காற்று  நெஞ்சில் தாளம் போட ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட

காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்
தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்
பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற
தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர
தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை
தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில்  பாய்ந்திடும் என் எண்ணங்கள்
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)

பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது
பூவாடை மூடும் ஜாலத்தால் பூபாளம் தானாய் தோன்றாது
நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும்
தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும்
தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை
கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில்
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)



Keladi Kanmani - Thenral Thaan 

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ

பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ...
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ...
வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்

ரெண்டு தாய்க்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முல்லை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீ அறிவாயோ (2)

உன்னை நினைத்து உருகிடும் மாது
உன்னை பிரிய மனம் துணியாது
பூவே பனிப்பூவே நீதான் இல்லாது
பார்வை எங்கள் பார்வை தூக்கம் கொள்ளாது
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

(பொம்முக்குட்டி)

பெற்ற தாய்படும் பாடு
பிள்ளை தானறி யாது
இது காக்கையின் கூடு
இங்கே பூங்குயில் பேடு  (2)

வந்த உறவை இவள் விடுவாளோ
சொந்த உறவை அவள் தருவாளோ
பாசம் உயிர்நேசம் வாழும் நெஞ்சோடு
பாடும் உறவாடும் ஜீவன் உன்னோடு
ஆராரோ ஆராரோ ஆரோ ஆரோ ஆராரோ...

(பொம்முக்குட்டி)



En Bommukutty Ammavukku - En Bommu Kutti Ammavukku Aararo

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - குயிலே குயிலே குயிலக்கா

குயிலே குயிலே குயிலக்கா – குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா – கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும்
ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும்
கண்மணி பெண்ணே வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ?

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே

ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன்
பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது?
நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது
குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே என் மனம் சொர்க்கத்திலே

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே

குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே



En Bommukutty Ammavukku - Kuyile Kuyile

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை - சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர்க் கொடியே.. நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

ஆ: உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
பெ: ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
ஆ: சிற்றன்னவாசலின் ஓவியமே.. சிந்தைக்குள் ஊறிய காவியமே
பெ: எங்கே நீ.. அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்
ஆ: மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு.. வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

பெ: உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
ஆ: கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
பெ: மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்.. மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்
ஆ: கண்ணே.. உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால்.. மெய் தொட்டால் மீட்டிடுமோ
பெ: கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன்.. நீயென்னை ஆளுகிறாய்

ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
ஆ: பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
பெ: சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
ஆ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெ: சொர்க்கத்தின் வாசற்படி…



Unnai Solli Kutramillai - Sorkathin Vasapadi

Monday, October 29, 2018

முதல் மரியாதை(1985) - ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா

பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பெரு
அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு



Muthal Mariyathai(1985) - Raasave Unna Nambi Intha Rosa Poo

முதல் மரியாதை(1985) - பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா

பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல

இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்லா

ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சொகத்த சொன்னேனடி

சோக ராகம் சொகந்தானே
சோக ராகம் சொகந்தானே

யாரது போறது

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்

உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே

எசப் பாட்டு படிச்சேன் நானே

பூங்குயில் யாரது

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நான்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா



Muthal Mariyathai(1985) - Poongatru Thirumbuma

முதல் மரியாதை(1985) - வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்

வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்

பச்ச கிளியோ ஒட்டுகிருச்சு இச்ச கிளியோ ஒதுகிருச்சு
பஞ்ச நெருப்பு ஒதிகிருச்சு பச்ச மனச பதுகிருச்சு
கைய கட்டி நிக்க சொன்ன காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா பூமி இங்கு சுத்தாது
சாமி கிட்ட கேளு யாரு போட்ட கொடு
பஞ்சுக்குள்ள தீய வெச்சு சுத்தி வச்சவக யாரு

வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்

உன்ன கண்டு நான் சொக்கி நிக்குறேன்
கண்ணுக்குள்ள நான் கண்ணி வெக்கிறேன்
சொல்லாம தான் தத்தளிக்கிறேன்
தாளாம தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள பந்தம் இத பாவமுன்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வெக்க கூடாது
புத்தி கேட்ட தேசம் போடி வெச்சு பேசும்
சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம்

வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வெட்டி வேறு வாசம் வெடல புள்ள நேசம்



Muthal Mariyathai(1985) - Vetti Veru Vasam

Followers