Pages

Search This Blog

Wednesday, August 15, 2018

வேட்டை - தய்யத் தக்கா தக்கா

தய்யத் தக்கா தக்கா
நீ எங்கிருக்க மக்கா
சோளக் காட்டுச் சொக்கா
அட காத்திருக்கா அக்கா
தய்யத் தக்கா தக்கா
நீ எங்கிருக்க மக்கா
சோளக் காட்டுச் சொக்கா
அட காத்திருக்கா அக்கா

எக்கா எக்கா தவளக்கா
ஏரிக் கர மீனக்கா
எப்படி வேணும் மாப்பிள்ள
எடுத்து விடுறேன் கேளக்கா

பட்டாம்பூச்சி கேட்டுக்கோ
தொட்டாச் சிணுங்கி கேட்டுக்கோ
அக்கா குருவி கேட்டுக்கோ
பக்கா லிஸ்ட கேட்டுக்கோ

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...


அய்யனாரத் தான் போல
ரொம்ப பெரிய மீசியும் வேணா

அம்பிப் பைய்யலப் போல
அட கம்பி மீசையும் வேணா

ரொம்ப படிச்சவன் வேணா
ஸ்கூல் பெஞ்ச தேச்சவன் வேணா

பென்சில் பாடியும் வேணா
மைக் டைசன் போலவும் வேணா

காதுச் சூட்டில் வேர்வை வழிய
செல்லில் பேசி கெஞ்சணும்

மேரேஜான பிறகும் கூட
சார்ஜரோடு கொஞ்சணும்
ஆஃபீஸ் போனா என்ன மறக்கக் கூடாது
வீட்டில் ஆஃபீஸ் பத்தி அவன் பேசக் கூடாது

தோளில் நான் சாயும் போது
தோழன் போல் மாற வேண்டும்
தாய் போல் எனை தாங்கும் தான் வேண்டும்

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...


கட்டம் கட்டமா தானே
ஒரு சட்டம் போட்டவன் வேணா

கட்டம் ஒண்ணு நான் போட்டா
அத தாண்டிப் போறவன் வேணா

ஷாப்பிங் பண்ண நான் போனா
பில்ல பாத்து மொறைப்பவன் வேணா

தூண்டில் மாட்டின மீனா
அவன் அன்பில் சிக்கணும் தானா

சின்ன வயசு போட்டோ பாத்து
என்னக் கண்டு பிடிக்கணும்

எனக்கு வந்த காதல் கடிதம்
சேந்து படிச்சு கிழிக்கணும்
சந்தேகப் பார்வ அவன் பார்கக் கூடாது
நான் சந்தேகமா பாத்தா
அவன் மெரளக் கூடாது
என்ன பாராட்ட வேணா
ரொம்ப சீராட்ட வேணா
ஒரு பார்வ அது போதும் எப்போதும்

அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள
அக்காக்கேத்த மாப்பிள்ள
எங்கிருக்கான் பய புள்ள...

Vettai - Thaiya Thakka

வேட்டை - தம் தம் தம்தம் தம்தம்

தம் தம் தம்தம் தம்தம்
தம் தம் ஆனந்தம் தம்
தம் தம் தம்தம் தம்தம்
தம் தம் ஆரம்பம் பம்

எங்கேயும் தான் எப்போதும் தான்
நம் வாழ்வே சந்தோஷம் தான்
எங்கேயும் தான் எப்போதும் தான்
கொண்டாடு கொண்டாட்டம் தான்

ஆகாயம் பார் நம் கையில் வேகம் தரும்
பூலோகம் பார் நம் பையில் பூக்கள் தரும்

தீராத விளையாட்டுப் பிள்ள
தெருவில் வந்தாலே தேவதைங்க தொல்ல
போடாத வம்பு சண்ட இல்ல
அட ஆனாலும் நாங்க நல்ல புள்ள

தம் தம் தம்தம் தம்தம்
தம் தம் ஆனந்தம் தம்
தம் தம் தம்தம் தம்தம்
தம் தம் ஆரம்பம் பம் ( இசை )

ஏலேலோ யோ யோ ஏலேலோ யோ யோ
ஏலேலோ ஏலேலோ ஏலே...லோ...


பட்டாம்பூச்சி தேடி வந்தா
தட்டாம தோள் மேல ஏத்திக்கடா

பூப் பூலத் தான் பொண்ணு வந்தா
ஓன் நெஞ்ச நூலாக மாத்திக்கடா

அழகான பொண்ணுக்கு அப்பன் வந்தா
அடிக்காம ஓன் தம்ம மறச்சுக்கடா
ஹய்யோ அவ தம்பி வந்தா
அவனத் தான் மச்சானா மாத்திக்கடா

தீராத விளையாட்டுப் பிள்ள
தெருவில் வந்தாலே தேவதைங்க தொல்ல
போடாத வம்பு சண்ட இல்ல
அட ஆனாலும் நாங்க நல்ல புள்ள


பொண்ணு ஒண்ணு பாத்துப் புட்டா
பாக்காம பாஸ் மார்க்க நாம் போடுவோம்

அதே பொண்ணு பார்க்கா விட்டா
வேறென்ன டாஸ்மாக்கில் நாம் ஓடுவோம்

ஃப்ரெஷ் ஆக ஒரு ஃப்ரெண்டு மாட்டிக்கிட்டா
பில் கட்டும் பில்கேட்ஸா நாம் மாத்துவோம்
ஹய்யோ அவன் வருத்தப்பட்டா
அப்போதே ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணுவோம்

தீராத விளையாட்டுப் பிள்ள
தெருவில் வந்தாலே தேவதைங்க தொல்ல
போடாத வம்பு சண்ட இல்ல
அட ஆனாலும் நாங்க நல்ல புள்ள

தம் தம் தம்தம் தம்தம்
தம் தம் ஆனந்தம் தம்
தம் தம் தம்தம் தம்தம்
தம் தம் ஆரம்பம் பம்

Vettai - Dham Dham

வேட்டை - டம்ம டம்ம டம்மா டம்மா

டம்ம டம்ம டம்மா டம்மா
டும்ம டும்ம டும்மா டும்மா
மாட்டிகிட்டா எம்மா எம்மா எம்மா
பொண்ணு அங்க சும்மா சும்மா
பையன் இங்க சும்மா சும்மா
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு எம்மா
ஊரு கண்ணு ஒறவு கண்ணு சுத்தி போடணும்
ஏழு எட்டு மாசத்துல பெத்து போடணும்

என்னென்னமோ சத்தத்துல
நாலு கண்ணும் வெக்கத்துல
இன்னிக்கது மொத்தத்துல
மூழ்கி விடும் முத்தத்துல

டம்ம டம்ம டம்மா டம்மா
டும்ம டும்ம டும்மா டும்மா
மாட்டிகிட்டா எம்மா எம்மா எம்மா
பொண்ணு அங்க சும்மா சும்மா
பையன் இங்க சும்மா சும்மா
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு எம்மா...


சந்திரன் வந்து சூரியன் வந்து
வாழ்துப் பாட்டு பாடணுங்க
நட்சத்திரப் பூப் பறிச்சு
அட்சதையா தூவுங்க
சந்தனம் எங்க குங்குமம் எங்க
மாத்தி மாத்தி பூசணுங்க
பள்ளியற போகும் முன்னே
பாடம் சொல்லி அனுப்புங்க

சேத்து வெச்ச கனவ எல்லாம்
மிச்சம் இன்றி பேசுங்க
மீச குத்தி காயம் வந்து
முத்த மருந்து பூசுங்க

அடி ஆத்தி ஆத்தி இவ அசத்தப் போறா
ஒரு மால மாத்தி ஒன்ன ஒசத்த போறா...


வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றானென்றது
பூரண பொற் குடம் வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்ட கனா கண்டேன்
தோழி நான்...

மந்திரம் இல்ல தந்திரம் இல்ல
மாறி மாறி பாக்குதுங்க
ரெண்டு கண்ணு தாக்கி தாக்கி
துண்டு துண்டா ஆக்குது
வெயிலும் இல்ல மழையும் இல்ல
வான வில்லும் பூக்குதுங்க
நெஞ்சுக்குள்ள நெரந்தரமா
வண்ணம் அள்ளி பூசுது ஹே...
பம்பரமா ஒரு கொலுசு
ரெக்க கட்டி ஆடுது
பக்கத்துல ஒரு மனசு
சுத்தி சுத்தி ஓடுது

ஓன் காதல் சொல்ல ஒரு வார்த்த வேணா
இந்த பார்வ போதும் அத மாத்த வேணா...

என்னென்னமோ சத்தத்துல
நாலு கண்ணும் வெக்கத்துல
இன்னிக்கது மொத்தத்துல
மூழ்கி விடும் முத்தத்துல
என்னென்னமோ சத்தத்துல
நாலு கண்ணும் வெக்கத்துல
இன்னிக்கது மொத்தத்துல
மூழ்கி விடும் முத்தத்துல

Vettai - Damma Damma

வேட்டை - கட்டிப்பிடி என்னை

கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி
விட்டு புடி என்ன தொடு பிடி
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி

நிறம் மாரும் பூ நீயடி
உன்ன பரிகாமல் தொடுத்தேனடி
அன்னையாத தீ நீயடி
உன்னை அண்ணைகாமல் அண்ணைதேனடி

கன்னோரமா கன்னோரமா கும்மாளம்மா
நெச்சொரமா நெச்சொரமா வந்தாளம்மா (2)

கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி
னான் எப்பொதும் குதாத ரொஜ செடி
விட்டுப்பிடி என்ன தொட்டுப்பிடி
னான் விட்டாலும் தொட்டாடும் முல்லை கொடி

யே கொஞ்சி பேசடி குட்டி மான், கொண்ணு போடடி செல்லமா
கைய்யும் ஓடல, காலும் ஓடல, எல்லாம் உன்னால
யே சீறி பாயட சிங்கமா, வெட்டி போடடா தங்கமா
என்ன வேணுமோ கேட்டு வாங்கிகோ, ரெண்டு கண்ணால

அடி ஆவாரம் பூவுக்கு, ஆளில்லா தீவுக்கு
ஒரேஞ்சு மழை மேகம் நான் தானடி
அடி பொக்காத ஓருக்கு, பொல்லாத காட்டுக்கு
ரெண்டாக கைகோர்த்து போவொம்-அடி

அட என்னமோ பன்னுற, என்னமோ சொல்லுற
கத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே

கன்னோரமா கன்னோரமா கும்மாளம்மா
நெச்சொரமா நெச்சொரமா வந்தாளம்மா (2)


இந்த முத்தம் தான் போதுமா, இன்னும் ஒண்ணுதான் வேணுமா
இந்த கன்னமா, அந்த கன்னம வேறு என்னாம்மா?

என்ன கேட்கதான் வேணுமா, உதடு கேடுத்தான் தீண்டுமா
மொதமாக்க நி கட்டிகொல்லட
நான் உன் கன்னம்மா

அடி மாமான்னு நீ சொல்ல, யேம்மானு நான் சொல்ல
ஆமான்னு உல்லோரம் கள்ளூறுதே

அடி அழக்காக்க நீ துள்ள, பழக்காத சிறு புள்ள
இது என்ன புது போதை தள்ளாடுதே..

அட என்னமோ பன்னுற, என்னமோ சொல்லுற
கத்தாடி போல் நெஞ்சு கூத்தாடுதே

கட்டிப்பிடி என்னை கட்டிப்பிடி
நீ எப்போதும் குத்தாத ரோஜ செடி
விட்டு புடி என்ன தொடு பிடி
இது வில்லேந்தி விலையாடும் வேட்டையடி

நிறம் மாரும் பூ நீயடி
உன்ன பரிகாமல் தொடுத்தேனடி
அன்னையாத தீ நீயடி
உன்னை அண்ணைகாமல் அண்ணைதேனடி

Vettai - Kattipidi Enna

வேட்டை - பப்ப பப்பா பப்பபாண்

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா

பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்

ஹே கோடி இடை பாத்து நா ஒடஞ்சுடேன் நேத்து
முத்தம் கித்தம் தந்து என்ன ஓட்ட வையேண்டி
வாழையடி வாழை என வாழ வை நாளை
மொத்தமாக மூட்டை கட்டி தூக்கி போயேண்டா
உன்ன அப்படியே உப்புமூட்டை துக்கிகிறேண்டி
அடி அஞ்சாறு ஆசை மட்டும் தீதுகிறேண்டி
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நீ ஒன்னன்னா சொல்லிதந்தா கத்துகுறேண்டா

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..

ஹே மஞ்ச மோகம் பாத்து நா செவந்துடேன் நேத்து
மைனாவே பச்சை கொடி காட்டு எனக்கு
ஹே விடுகதை வேணம் நீ விடும் கதை வேணாம்
என்ன வேணும் கண்ணா பாத்து சொல்லு எனக்கு
உன் பூ போட்ட பாவாடை போதும் எனக்கு
அதில் வெள்ளி விழா பன்னநாட்ட ஆசை இருக்கு
ஒத்துக்குறேன் ஒத்துக்குறேன்
நா உன்னோட பாப்பாவ பெத்துகுரேண்டா..

ஹே பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
பத்திகிச்சு பம்பரம் டோய்
பப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்
என்ன செஞ்ச மந்திரம் டோய்
அடி ராசாத்தி ரோசாப்பூ என்ன சொல்ல
என் ராத்தூக்கம் தூக்கிகிட்டு போறபுள்ள
நா தில்லானா பாடுறேன் திமிராக ஆடுறேன்
என்னோட கை கோர்க்க வாடி
உன் பொல்லாத மீசையில் குத்தாம குத்துனா
செத்தானான் போவேன் போடா..

Vettai - Pappa Pappa Pappapan

வந்தே மாதரம் பாடல் வரிகள்

அங்கும் அங்கும் இங்கும் இங்கும் சுற்றி சுற்றி திரிந்தேன்
சின்ன சின்ன பறவைப்போல் திசை எங்கும் பறந்தேன்
வெய்யிலிலும் மழையிலும் விட்டு விட்டு அலைந்தேன்
முகவரி எது என்று முகம் துளைதேன்
மனம் பித்தாய் போனதே.. உன்னை கண்கள் தேடுதே..
தொட கைகள் நீளுதே.. இதயம் இதயம் துடிக்கின்றதே..
எங்கும் உன்போல் பாசம் இல்லை ஆதலால் உன் மடி தேடினேன்
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..

வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..

வண்ண வண்ண கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களை கொடுத்தாய்
அந்த பக்கம் இந்த பக்கம் கடல்களை கொடுத்தாய்
நந்தவனம் நட்டுவைக்க நதி கொடுத்தாய்
உந்தன் மார்போடு அணைத்தாய்.. மார்போடு அணைத்தாய்
என்னை ஆளாக்கி வளர்த்தாய்.. ஆளாக்கி வளர்த்தாய்..
சுக வாழ்வொன்று கொடுத்தாய் பச்சை வயல்களை நீ பரிசளிதை
பொங்கும் இன்பம் எங்கும் தந்தாய் கண்களும் நன்றியால் பொங்குதே..

வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின் அலை பாயுமே..
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுமே..
தாய் அவள் போல் ஒரு ஜீவனில்லை, அவள் காலடி போல் சொர்க்கம் வேறு இல்லை..
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை, பாரதம் எங்களின் சுவாசமே..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..
தாய் மண்ணே வணக்கம்..!!

வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம்.. வந்தே..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம் என்போம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..
வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..



Vande Mataram Padal Varigal

ரோஜா - ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம்

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

கட்டிக்கொண்ட ஆணும் பொண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம்
கட்டில் ஒண்ணு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம்
சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆச ரொம்ப இருக்கு

சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு

எட்டுமேல எட்டு வச்சு கட்டில் வரை நெருங்க

முத்து மணி கொலுசுங்க முத்தம் வச்சி சிணுங்க

உள்ளே பூ பூக்குது அடி உச்சி ஏன் வேர்க்குது

ஆச பாய் போட்டது அட அச்சம் தாள் போட்டது

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

சொந்தம் கொண்ட புருசன் சுண்டுவிரல் புடிக்க

சுண்டுவிரல் தொட்டதும் அந்த இடம் சிலிர்க்க

காமதேவன் மண்டபத்தில் கச்சேறியும் நடக்க

கண்ணிமகள் வளையலும் பின்னணிகள் இசைக்க

முத்தம் பந்தாடுது உயிர் மொத்தம் திண்டாடுது

சித்தம் சூடேருது இந்த ஜென்மம் ஈடேருது

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

கட்டிக்கொண்ட ஆணும் பொண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம்
கட்டில் ஒண்ணு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம்
சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்



Roja - Rukkumani Rukkumani

Followers