ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம்
எதிர்க்கும் எதையும் வீழ்த்தும் அதன் நடனம்
துணியும் வரைக்கும் வராது தருணம்
துணிந்து எதிர்த்தால் தூளாகும் சலனம்
ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம்……
தேங்கிடாதே திரும்பி நடக்காதே
தேய்ந்த போதும் திமிரை இழக்காதே
தேங்கிடாதே ஓய்ந்திடாதே ஓங்கி இருக்காதே
ஒதுங்கும்போது ஒன்றை மறக்காதே
விதைத்தவனுக்கோ விழி இமை இறங்கும்
புதைந்த பிறகு விதைகளாய் உறங்கும்
ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம்…
விழிகள் இரண்டும் நீரில் நனைந்திருக்கும்
விழித்த மனமோ தீயை சுமந்திருக்கும்
விழிகள் இரண்டும்… ஏய்…
கடலின் அலைகள் கரையில் தவழ்ந்திருக்கும்
சீறி எழுந்தால் உலகை அது குடிக்கும்
மேக கூட்டம் மழையை சுமந்திருக்கும்
மழையின் உள்ளே இடியும் ஒளிந்திருக்கும்
விழிகள் இரண்டும் நீரில் நனைந்திருக்கும்…
ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம்…
எரித்து எதையும் அழிக்கும் அதன் நடனம்
சிறிது என நீ தொடாதே கவனம்
சீறி எழுந்தால் வீழ்ந்தாலே அவலம்
ஜனனம் ஜனனம் புயலின் புது ஜனனம்…
எதிர்க்கும் எதையும் வீழ்த்தும் அதன் நடனம்
Goli Soda - Jananam Jananam Puyalin Puthu Jananam