Pages

Search This Blog

Monday, August 13, 2018

காளி - நூறாய் யுகம் நூறாய்

நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமை போலே
துணையாய் இருப்பேன்
இடை உனக்கீடாய்

எதை நான் கொடுப்பேன்
ஏதும் உனக்கென்றால்
உயிரால் தடுப்பேன்

நீ கடவுளின் பரிசென கரங்களில் வர
தவமென்ன புரிந்தேன் உனையிங்கு பெற
வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர
உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற

நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமை போலே
துணையாய் இருப்பேன்

பள்ளம் சேரும் வெள்ளம் போலே
உன்னை நிறைத்திடுவேன் தோழி
செல்லம் கொஞ்சும் உந்தன் திமிரை
கட்டி அணைத்திடுவேன்

உள்ளதாலும் உடலின் மீதும்
உன்னை சுமந்திடுவேன் தோழா
உலகம் அழியும் போதும் நானோ
உன்னை நினைத்திடுவேன்

இதயத்தின் மைய பகுதியில்
இறக்கை விரித்து அமர்ந்தாள்
உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும்
ஒருத்தி வடிவில் கொடுத்தாய்

உந்தன் மடியில் நிரந்தரமாக
எனக்கிடம் கொடுத்தாய் தோழி
தெய்வம் வந்து நின்றாள் கூட
திரும்பிட மறுப்பேன்

உனக்கு மட்டும் தானே எந்தன்
இருதயம் துடிக்கும் தோழா
உறங்கும் போதும் எந்த உதடோ
உந்த பெயர் அழைக்கும்

உனக்குள்ளே என்னை புதைப்பதால்
திரும்ப திரும்ப பிறப்பேன்
வழித்துணை நீ இருப்பதால்
இறுதி வரைக்கும் நடப்பேன்

நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமை போலே
துணையாய் இருப்பேன்
இடை உனக்கீடாய்
எதை நான் கொடுப்பேன்
ஏதும் உனக்கென்றால்
உயிரால் தடுப்பேன்


நீ கடவுளின் பரிசென கரங்களில் வர
தவமென்ன புரிந்தேன் உனையிங்கு பெற
வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர
உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற

நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமை போலே
துணையாய் இருப்பேன்



Kaali - Noorai Yugam Noorai

தியா - கொஞ்சலி கொஞ்சலி

அழகுத்தி செஞ்சு வச்ச
ஆலங்கட்டி ஆட்டம்
கண்ணு
அதனை பாத பொண்ணு

வா புள்ள என் கை கோத்து
நீ இனி என் மூச்சு காத்து
உமக்கு காத்து கேடந்தவ
மனங்கு காத்த
இப்ப

கொஞ்சலி கொஞ்சலி ராவெல்லாம் நீ
என் ஜோலி

கொஞ்சலி கொஞ்சலி மஞ்சத்தில் நான்
உன் ஜோலி

நான் தீண்டும் கனவு நீ

அழகுத்தி செஞ்சு வச்ச
ஆலங்கட்டி ஆட்டம்
கண்ணு
அதனை தீத தின்னு

தூரிகை அதன் தூறலாய்
உந்தன் காதலோ வீழ்கிறதே
மாறினேன் நிறம் மாறினேன்
எந்தன் நாணமோ நீள்கிறதே

 காட்டில் வண்ணம் கூட்டும்
மலரே
என் விண்ணில் ஏறி கண்ணில் பாயும்
புலரே
என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீ

கொஞ்சலி கொஞ்சலி ராவெல்லாம் நீ
என் ஜோலி
கொஞ்சலி கொஞ்சலி மஞ்சத்தில் நான்
உன் ஜோலி
கொஞ்சலி கொஞ்சலி ராவெல்லாம் நீ
என் ஜோலி



Diya - Konjali Konjali

தியா - ஆழலிலோ ஆழலிலோ

ஆழலிலோ ஆழலிலோ
நீ பாட மறந்திட கேட்டால் இவள்
கண்ணே என்ன முத்தே என்ன
நீ கொஞ்சாத உன் செல்ல துகள் இவள்

ஆழலிலோ ஆழலிலோ
நீ பாட மறந்திட கேட்டால் இவள்
சொல்லாமலே சொல்லாமலே
அம்மா என்றுதான் உன்னை அழைப்பவள்

நீ வீசிய புன்னகை
பின்ன வருதோ
கேள்வி ஒன்றை நெஞ்சில் ஏந்தி
உன்னை பார்க்குதோ

காதல் அதை சொல்லவே
உயிர் வேண்டாம் என்னவே
காத்திருந்த பாத்திருந்தே
காதலை சொல்லுதோ

உன் கண்ணில் பட
உன் கைகள் தொட
முத்தங்கள் இட பார்கின்றதோ

இங்கேது வழி
இங்கேது மொழி
இல்லாத வலி
முள்ளாகுதோ
மௌனம் ஒன்று சொல்லாகுதோ

உன் போல் அவள் ஆவதே
உன்னை உணர
போடவில்லை என்றுணர்ந்து
உன் காற்றாகிறாள்

நீ ஒயின்ன சைகையில்
உன் தூக்கம் அவளே
உந்தன் கனவில் தன்னை தேடி
பாதங்கள் தெரிகிறாள்

வண்ணங்கள் இல்ல உன் சின்ன நிலா
தன்னோட உள்ள வா என்றதோ
தீ நின்ற அகல் உன் வாழ்வின் நகல்
உன்னுள்ளேயே தானாய் விதைக்குதோ
மீண்டும் உன்னை உதைக்கிதோ



Diya - Aalaliloo Aalaliloo

தியா - யாரோ யாரோ உன்னை விதைத்தது யாரோ

யாரோ யாரோ
உன்னை விதைத்தது யாரோ
யாரோ யாரோ
உன்னை சிதைத்தது யாரோ

யாரோ யாரோ
உன்னை எழுதியது யாரோ
யாரோ யாரோ
உன்னை அளித்து யாரோ
தீயே தீயே
உன்னை அணைத்தது யாரோ
பூவே பூவே
உன்னை நசுக்கியது யாரோ

தோன்றும் உன்னை கொன்றாதாரடி
கருவே
நீல் துயரும்
பிறவி துயரம்
எனவே உறவே
கலைந்தாயடி

பாழ் உலகம்
சுழலும் நரகம்
எனவே அழகே கரைந்தபடி
தாயின் தீயில் தீய்ந்து தேய்ந்திடு
கருவே

நீ உறங்கு
உயிரே உறங்கு
இதுவே கடைசி தாலாட்டிது
தாய் விழியில்
வழியும் துளியில்
கறைவாய் கடைசி நீராட்டேனா
புள்ளி உன்னில் கொல்லி
வைக்கிறோம் கருவே



Diya -Yaaro Yaaro

தசாவதாரம் - உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு

உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு (யாரு )
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது
நாடு (நாடு )
உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது
நாடு
உலக நாயகனே
உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்
உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது
நாடு
உலக நாயகனே
உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்

நீ பெரும் கலைஞன்
நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கலைஞன்
நீ பெரும் கலைஞன்
நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த
ரகசிய கவிஞன்
ஓர் உயிர் கொண்டு
உலகத்தில் இங்கு
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில்
ஆயிரம் பிறைகள் கண்டாய்
சோதனை உன்னை
சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சொர்வுரவில்லை
ஐந்து முதல் நீ
ஆடி வந்தாலும்
oxygen குறையவில்லை
சொன்னால் கேள்
ஆஸ்கார் தூரம் இல்லை

உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு (யாரு )
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது
நாடு (நாடு )
உலமேங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு



Dasavathaaram - Ulaga Nayagane

தசாவதாரம் - பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்ணிலே நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
இசை பூமியை ஆளட்டும்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
காற்றைத் திறக்கும் சாவிதான் காற்று
காதை திறக்கும் சாவிதான் பாட்டு
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்...
இசை பூமியை ஆளட்டும்... 

காற்றைத் திறக்கும் சாவிதான் காற்று
காதை திறக்கும் சாவிதான் பாட்டு
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்...
இசை பூமியை ஆளட்டும்... 


நீ என்பதை பொல்லாத நான் என்பதை
ஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான்
யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது
அதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்
கடவுளும் கந்தசாமியும்... பேசிக் கொள்ளும் மொழி பாடல்தான்...
மண்ணில் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்ந்திடும் சுவடுகள் எங்கே மிஞ்சும்
எண்ணிப்பாரடா மானுடா... என்னோடு நீ பாடடா.... 
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ

பூ பூக்குதே அதன் வாழ்வு 7 நாட்களே
ஆனாலும் தேன் தந்துதான் போகுதே...

நம் வாழ்க்கையை வாழ்ந்தாலே யார் தந்தது
என் நெஞ்சம் நீ வாழவே வாழுதே...

வீழ்வது யாராயினும்.... வாழ்வது நாடாகட்டும்....

காலம் உன் உதடுகள் மூடும் போதும்
காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்
நீ பாடினால் நல்லிசை...
உன் மௌனமும் மெல்லிசை...

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
Come everybody rock with me

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ராக் ஈஸ் ராக் இட்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
கம் ஆன் கம் ஆன் பேபி கம் ஆன்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
யூ மூவ் இட் மூவ் இட்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
யூ பேபி ப்ரின்ஸ் இட் ப்ரிங்

ஹோ ஹோ சனம் ஹோ ஹோ சனம் ஹோ ஹோ
ராக் இட் ராக் இட்



Dasavathaaram - Oh...Ho...Sanam

தசாவதாரம் - முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
என்ன செய்ய நானோ தோல் பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான்

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா


நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீ அறியா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண சுவாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கை தீர்ப்பாய்
உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது
அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது
அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
வாராது போவாயோ வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே

ஜெய்..முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா


மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனை கொன்றாய்
ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்
இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே
மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா


உசுரோடு இருக்கான் நான் பெற்ற பிள்ளே
ஏனோ இன்னும் தகவல் வரலே..
வானத்தில் இருந்து வந்து உதிப்பான்
சொன்னால் கேளுங்க அசடுகளே
வாடா மன்மதா… அழகா வாடா
உடனே வாடா …. வாடா…..

கோவிந்தா கோபாலா…

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
முகுந்தா முகுந்தா

கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்…
ஆ…ஆ…ம்ம்..ம்ம்….



Dasavathaaram - Mukundha Mukundha

Followers