Pages

Search This Blog

Friday, April 6, 2018

மெல்லத்திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…

மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளையா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ..

கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான் ராவானா வேகுதுதான்
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…



Mella Thirandhathu Kadhavu - Kuzhaloodum Kannanukku

மெல்லத்திறந்தது கதவு - தேடும் கண் பார்வை தவிக்க

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா

கனிவாய் மலரே உயிர் வாடும் போது
ஊடலென்ன பாவம் அல்லவா

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே

பிரிந்தோம் இணைவோம்
இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ
தேடும் கண் பார்வை தவிக்க
துடிக்க



Mella Thirandhathu Kadhavu - Thedum Kan Paarvai

மெல்லத்திறந்தது கதவு - வா வெண்ணிலா உன்னைத்தானே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும்…திருமுகம் காணும்
வரம் தர வேண்டும்…எனக்கது போதும்
எனைச்சேர…ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆ
எனைச்சேர எதிர்பார்த்து முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும்…உடையென நானும்
இணை பிரியாமல்…துணை வர வேண்டும்
உனக்காக…ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே



Mella Thirandhathu Kadhavu -Vaa Vennila Unnai Thane Vaanam

அடுத்தாத்து ஆல்பர்ட் - இதயமே நாளும் நாளும் காதல்

இதயமே நாளும் நாளும் காதல் பேச வா
உதயமே நீயும் கூட வாழ்த்துப்பாட வா
காதல் மனமே வாழ்க தினமே…அன்பின் ஊறவே
இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா

வானம்பாடி போல நாங்கள் கானம்பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல காற்றில் ஆடிப்பாடினோம்
சாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்
மனதிலே உறுதியாய் உறுதியே கொள்கையாய்
வாழ்ந்து காட்டுவோம்…அன்பின் ஊறவே
இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா

வானில் தாவி நீந்துவோம் தீயை கையில் ஏந்துவோம்
காற்று வீசும் நாள்வரை ஜோடியாக வாழுவோம்
நீரும் கூட பாடியே மாலை போடுதே
பூமி தேவி வாழ்த்தியே கீதம் பாடுதே
தடுக்கவே முடியுமா பிரிக்கவே முடியுமா
சேர்ந்து வாழுவோம்…அன்பின் ஊறவே
இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா
உதயமே நீயும் கூட வாழ்த்துப்பாட வா
காதல் மனமே வாழ்க தினமே…அன்பின் ஊறவே
இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா



Aduthathu Albert -  Idhayame Naalum Naalum

இன்று நீ நாளை நான் - பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்



Indru Nee Nalai Naan - Pon Vaanam Panneer Thoovuthu 

Tuesday, January 23, 2018

கொஞ்சும் சலங்கை (1962) - சிங்கார வேலனே தேவா

பெண்  :    ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)

பெண்  :    ஆ...ஆ.. ஆ..ஆ (இசை)

ஆண்   :    சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய் 
                 உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு 
                 ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே சாந்தா 

பெண்  :    என் இசை.. உங்கள் நாதஸ்வரத்துக்கு முன்னால்...  

ஆண்   :    தேனோடு கலந்த தெள்ளமுது கோல நிலவோடு 
                 சேர்ந்த குளிர் தென்றல் இந்த சிங்காரவேலன்
                 சன்னதியிலே நமது சங்கீத அருவிகள் 
                 ஒன்று கலக்கட்டும்.
                 பாடு… பாடு சாந்தா...பாடு..   ஏன் தயக்கம்..ம்ம்  

                  இசை                   பல்லவி

பெண்  :    சிங்கார வேலனே தேவா (இசை)
                 அருள் சிங்கார வேலனே தே...வா (இசை)
                 அருள் சீராடும் மார்போடு வா...வா..
                 சிங்கார வேலனே தே...வா (இசை)
                 சிங்கார வேலனே தே...வா (இசை)

            (இசை)                         சரணம் - 1

பெண்  :    செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ (இசை)
                திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா (இசை)
                முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா (இசை)
                அருள் சிங்கார வேலனே தே...வா.. (இசை)

             (இசை)                         சரணம் - 2

பெண்  :    செந்தமிழ் தேவனே சீலா (இசை)
                 செந்தமிழ் தேவனே சீ...லா (இசை)
                விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா (இசை)
                அருள் சிங்கார வேலனே தே...வா
    
                ஸ...க...ம...ப...நி 
                சிங்கார வேலனே தேவா (இசை)
                நித்த நித பம...கம கரி ஸநி...
                ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி 
                சிங்கார வேலனே தேவா (இசை)
   
                ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ...
                மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி 
                மமப கக மம பப நிநி ஸஸ கரிநி (இசை)
    
                பா நித பம கரி ஸநி ஸகக ஸகக 
                ஸக மப கரி ஸநி ஸகஸா (இசை)
    
                நிநிப மமப நிப நிபஸ பநி பஸ 
                நித பம கரி ஸகஸா (இசை)
    
                கம பநிஸா நிஸ கரி ஸரிநி 
                ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
    
                கரிநி கரிக நிரி கரி நிக ரிநி (இசை)
    
                நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா (இசை)
           
                நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... (இசை)
     
                ஸநிஸ மக மப கம பநி ஸரி...
                ஆ...ஆ...ஆ...(இசை)
    
                ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி (இசை)
    
                பநி பஸ பநி பநி மபக 
                பநிப நிஸ கஸா (இசை)
    
                பநிப நிஸ ரிஸா...(இசை)

                மக பம  (இசை)
    
                ஸரிநி...(இசை)

                நிஸபா... (இசை)

                ஸரிஸநி...(இசை)
          
                ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...(இசை)

                ஸரிஸநி...(இசை)     
    
                ஸநிதப(இசை)

                ரிகமப(இசை)

                நிதபம(இசை)

                ததநித(இசை)
    
                ஸநிஸநி(இசை)

                கரிநித பமபா(இசை)
                பமபதநி..
                சிங்கார வேலனே தேவா
                அருள் சீராடும் மார்போடு வா...வா
                சிங்கார வேலனே தேவா...



Konjum Salangai - Singara Velane Deva

பாகுபாலி 2 - வந்தாய் அய்யா வந்தாய் அய்யா

மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே     
தர்மம் தோற்க்காதே………………     
ஆளும் காவலனே     
மேற்கே ஏற்காதே…………… வீழும் சூரியனே     
தர்மம் தோற்க்காதே ஆளும் காவலனே…     
கசிந்திடும் கண்ணீரை திரும்பிடச்செய்யய்யா     
மறந்திடும் நெஞ்சத்தில் மழையெனப் பெய்யய்யா     
ஆழ் மனதினில் சூடும் இருளை நீளும்     
துயரை பாடும் விதியை நீக்கும் தீயே நீயய்யா………     
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா     
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா     
     
வந்தாய் அய்யா வந்தாய் அய்யா     
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா     
     
நீ வீற்றிடும் தோரனையாலே     
பாறைகளும் அரியாசனமாம்     
உன் பேரை சம்மில் தாமே      
செதுக்கிடும் கல்வெட்டாய்     
காற்றோடு உன் குரல் கேட்டால்     
பொட்டல் காடும் அரசபையாய்     
உன் வேர்வை ஒரு துளி பட்டால்     
ஒளிருது நெல் பட்டாய்     
உன் சொல்லே சட்டம் அய்யா     
உன் பார்வை சாசனமய்யா     
என் சிந்தை நீயே எந்தை நீயே     
சேயும் நீயே எங்கள் ஆயுள்      
நீ ஆயுள் நீக்கொல்லய்யா

வந்தாய் அய்யா வந்தாய் அய்யா     
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா



Baahubali 2 - Vandhaai Ayya

Followers