பச்சை உடுத்திய காடு
ஈரம் உடுத்தியக்கூடு
நீலம் உடுத்திய நாhனும்
பச்சை உடுத்திய காடு
ஈரம் உடுத்தியக்கூடு
காதல் கொண்டேன் பெண்ணே
அடி காதல் கொண்டேன் பெண்ணே
ஆயிரம் ஓசை காற்றில் உன்னால் கேட்டேன் நானே
ஆயிரம் ஆசை என்னில் உன்னால் கண்டேன் நானே…… (பச்சை)
மாளிகை ஒன்றில் வாழ்ந்தேனே
சிறு குடிலாய் இன்று தோன்றுதடா
மின்னும் வைரக்கற்களெல்லாம்
முன்னால் குப்பை ஆனதடா
நிலவில் முளைத்த தாவரமே
நீ கீழே இறங்கி வந்தாயே
எந்தன் காட்டில் வேர்விடவே
காதல் வாசம் தந்தாயே
கோடிக்கோடி வாசம் இங்கே
மூச்சில் உன்னாலே கண்டேன்
உன் வெண்மேனி நான் ஆள
என் கண்ணில் நீ வாழ (பச்சை)
இலைகள் அனைந்த பூஞ்சிலையே
மனம் இலையுதிர்காலம் கேட்குதடி
இரவின் இருளில் உடல்கள் இங்கே
இரகசியம் திருடப்பார்க்குதடி
மார்பில் உந்தன் சுவாசத்தால்
என் இதயம் பற்றிக்கொண்டதடா
முத்தம் கிளப்பும் வெப்பத்திலே
என் வெட்கம் வற்றிப்போனதடா
பெண்ணில் உள்ள நாணம் எல்லாம்
இன்று என்னோடுக்கண்டேன்
ஆணில் உள்ள ஈரம் எல்லாம்
இன்று என்னுள்ளே கொண்டேன்
நம் காதல் தீ உச்சத்தில்
வேர்க்கொள்ளும் அச்சத்தில் (பச்சை)
Vanamagan - Pachchai Uduthiya Kaadu