Pages

Search This Blog

Thursday, April 27, 2017

காவியத் தலைவன் - ஏ சண்டி குதுர வாயேண்டி

ஏ சண்டி குதுர வாயேண்டி எதுர
மதுர குதுர எதுர வந்தா
மோகனா மோகனா நானும் உன் மாமனா
மாறவா பீமனா
வாயேன் கிட்ட கிட்ட வாய தச்சி விட்ட
ஏ சண்டி குதுர வாயேண்டி எதுர
மதுர குதுர எதுர வந்தா
மோகனா மோகனா நானும் உன் மாமனா
மாறவா பீமனா
வாயேன் கிட்ட கிட்ட வாய தச்சி விட்ட
அ ஆ இ அம்மாயி ஆழாக்கு நாக்கு
உ ஊ எ உம்முன்னு மொரைக்காதே ஏ பாத்து
ஏ சண்டி குதுர வாயேண்டி எதுர
மதுர குதுர எதுர வந்தா

ஏ யானைக்குட்டி பூனைக்குட்டி ஆட்டுக்குட்டி ஆந்தைக்குட்டி
மான்குட்டி உன்னை நானும் மல்லுக்கட்டி தூக்கப்போறேன்
கன்னுக்குட்டி பொன்னுக்குட்டி வாயக்கட்டி வைக்கப்போறேன்
முயலே முயலே முழிக்கும் முயலே
எதிரே இருக்கு அழகு முதல
அ ஆ இ அம்மாயி ஆழாக்கு நாக்கு
உ ஊ எ உம்முன்னு மொரைக்காதே ஏ பாத்து
மோகனா  மோகனா  நானும் உன்  மாமனா
மாறவா  பீமனா

நாணமே மௌனமா காவியம் பேசுமா ப்ரேமையே கோபமா
பேச்சு காச்சு மூச்சு மூக்கறுந்து போச்சு
மன்றலே தென்றலே கோவமா அன்றிலே சுத்துதே திங்களே
நாடகத்தின் உள்ளே நாங்க வச்ச முள்ளே
குயிலே குயிலே வெள்ளக்காரன் விட்ட ரயிலே
தத்தக்கா விட்டக்கா ஒத்திக்கா ஆ போக்கா
அத்திக்கா ஆன கிறுக்கா எட்டிக்கா ஆ மூக்கா
ஏ சண்டி குதுர வாயேண்டி எதுர
மதுர குதுர எதுர வந்தா
மோகனா  மோகனா  நானும் உன்  மாமனா
மாறவா  பீமனா
அடியே குதுர வெடி அஞ்சரைனா சீனவெடி

வண்ண வண்ண வானவெடி குட்டுவெடி பொட்டுவெடி
அத்தனை வெடிகளுமே அஞ்சிற மிஞ்சிரவெடி
உன்னுடைய பேச்சுவெடி உள்ளபடி உள்ளதடி
அண்ணன்ணன் நே நே அணிலன்னே கதையன்னே
புருஞ்சுதன்னே முயலன்னே தெரிஞ்சது அண்ணே பெண்மானே
தேனே திருந்துனா போதுன்னே
ஆனைக்குட்டி பூனைக்குட்டி ஆட்டுக்குட்டி கன்னுக்குட்டி
அணில்குட்டி ஆந்தைகுட்டி நரிக்குட்டி புலிக்குட்டி
கரடிக்குட்டி குதிரைக்குட்டி குயில்குட்டி மயில்குட்டி
கோழிக்குட்டி எலிக்குட்டி மான்குட்டி மஞ்சக்குட்டி
இந்தக்குட்டி எந்தகுட்டி வாயாடும் கத்துக்குட்டி கத்துக்குட்டி
செம்மீனின் பட்டுக்குட்டி சுட்டிக்குட்டி
என்னோட செல்லக்குட்டி செல்லக்குட்டி வெல்லக்கட்டி வெல்லக்கட்டி
முத்தம் குட்ரீ



Kaaviya Thalaivan - Sandi Kuthirai

காவியத் தலைவன் - சொல்லிவிடு சொல்லிவிடு

சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு
சென்றுவிடு சென்றுவிடு சென்றுவிடு இந்த யுத்தம் போதும் சென்றுவிடு
இன்னும் உயிர்கள் வேண்டும் என்றால் என்னை முதலில் நீயே கொன்றுவிடு
கண்ணா என்னை முதலில் கொன்றுவிடு

ஏன் அம்பை எந்த வைத்தாய்
ஏன் குருதியில் நீந்த வைத்தாய்
ஏன் உலகத்தை ஜெயிக்க வைத்தாய்
ஏன் உள்ளுக்குள் தோற்க்கடித்தாய்
உலகத்தை வெல்ல வைத்தாய் உள்ளுக்குள்ளே தோற்க்கடித்தாய்
காண்டீபன் கேட்கிறேன் கண்ணா காண்டீபன் கேட்கிறேன்
சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஆ… காலச்சக்கரம் உன் கையில் அதில் சுற்றியதேனோ நான்
விதியும் சதியும் உன் கண்ணில் அதில் சிக்கியதேனோ நான்
கர்ணனை கொன்ற பாவம் கண்ணனுக்கு போகுமென்றால்
கண்ணனுக்கே பாவம் தந்த பாவம் எங்கு போகும் ஐயோ
சொல்லிவிடு சொல்லிவிடு சொல்லிவிடு இறுதி தீர்ப்பை நீ சொல்லிவிடு
நின்றுவிடு நின்றுவிடு நின்றுவிடு இப்போரில் இவ்விடம் நின்றுவிடு

ஓ… உலகமே யுத்தம் எதற்கு
ஓ… உயிர்களே ரத்தம் எதற்கு
ஓ… இறைவனே துயரம் எதற்கு
ஓ… இதயமே வன்மம் எதற்கு

கண்ணா தேரை நிறுத்து
எல்லாம் வீழ்த்தி எவருடன் வாழ தேரை நிறுத்து
போதும் இந்த குருதிக்குளியல் போரை நிறுத்து
நாளை உலகம் நலம் பேரும் என்று போரை நிறுத்து போரை நிறுத்து



Kaaviya Thalaivan - Sollividu Sollividu

காவியத் தலைவன் - வந்தனம் வந்தனம்

வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்
வந்தனம் வந்தனம் வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்
குந்தனும் குந்தனும் குந்தனும் குந்தனும்
இடம் பிடிக்க முந்தணும் முந்தணும்

யாதவனாம் அந்த மாதவனும்
அவன் மச்சுனனாம் அந்த அர்ச்சுனனும்
யாத்திரை வருகையிலே தீர்த்த யாத்திரை வருகையிலே
நாடு கடந்து காடு கடந்து மதுரைக்கு வாராக
தென் மதுரைக்கு வாராக
அங்கு நடப்பது அல்லி ராஜ்ஜியம்
அத்தனை ஆண்களும் சுத்த பூஜ்ஜியம்
அல்லியோ புது ரோசா பார்த்தான் அர்ஜுன மகராசா
அல்லி மலருல கள்ளு வடியுது
அர்ஜுனன் முகத்துல ஜொள்ளு வடியுது
ஆரம்பமாகுது நாடக காதலு
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்குற மோதலு

அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
முகத்தழகி ஆமா முகத்தழகி மருதாணி பூசிய நகத்தழகி
கோவில் தூண் போல தொடையழகி
கொம்பேறி மூக்கன் போல சடையழகி
அவ நடக்குற நடைய பாத்து
தென்றல் காத்து அத பாத்து உடல் வேர்த்து
உடன் தோத்து அல்லி வருகிறாளே
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் அழகி அவள் பேரழகி

பிரியசகியே பிரியசகியே மழைநாளா இது மழைநாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
மோகன நாடகம் நடிப்பதென்ன
பிரியசகியே பிரியசகியே மழைநாளா இது மழைநாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
நல்ல சகுனம் இது நல்ல சகுனம் ஒரு நாயகன் வரக்கூடும்
உங்க வாய் வெளுக்க இரு விழி சிவக்க
காதல் நோய் தனை தரக்கூடும்
யாரடி அவன் யாரடி வீராதி வீரனோ கூறடி
சூராதி சூரனோ கூறடி
இந்த அல்லியை ஜாதி மல்லியை இன்பவல்லியை உயிர்கொல்லியை
வெல்லத் தகுந்தவனோ ஏழு வண்ணம் மிகுந்தவனோ
யாரடி யாரடி

அவையிளிருக்கும் அத்தனை பேருக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம்
என் வணக்கத்திலே தான் தமிழ் மணக்கும்
பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்கள்
நடுவினில் நான் பிறந்தேன்
அர்ஜுனன் என் பேரு
இரத்தினபுரி தான் என் ஊரு
கண்ணா கண்ணா
ஏன் அழைத்தாய் என்னை ஏன் அழைத்தாய்
அர்ஜுனனனே என் ஆருயிர் தோழா
மதுரையை ஆள்கிற அல்லி
என் மனதை எடுத்தாலே கள்ளி
என் உள்ளத்தை ஒட்டிய பல்லி
அவளை ஒடுக்கனும் படுக்கையில் புள்ளி
இந்த சமையத்தில் நீ உதவனும் கண்ணா
எங்கள சேத்து நீ வைக்கணும் ஒண்ணா
நான் பாமாவுக்குத்தாண்டா மாமா அதை நீ மறக்காதே ஆமா
உன்னை விட்டால் எனக்கு யாரு உதவி செய்வார் கூறு
நான் மார்க்கங்கள் சொல்வேன் கேளு
மணமாலையை தாங்கும் உன் தோளு

நான் நன்னதுவியில்லை என்றிருக்க
என் மணிக்கழுத்தில் தாலி கட்டலாமா கட்டலாமா
என் மேல குத்தமில்ல உன்ன கண்ட முதலா என் நெஞ்சு சுத்தமல்ல
என் மேல குத்தமில்ல உன்ன கண்ட முதலா என் நெஞ்சு சுத்தமல்ல
நீ போட்டது எத்தனை வேடமடா
குந்தி புத்திரனாய் வந்த மூடமடா
வீரன் என்றால் நீ வில்லெடு
இந்த பூவையின் மேலே போர் தொடு

ஆ… ஆ…
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே
நாம் தாயால் பிறந்தோம் பிறந்தோம்
தமிழால் வளர்ந்தோம் வளர்ந்தோம்
தாயும் தமிழும் பெண்தானே இரண்டும் இரண்டு கண்தானே
தாயும் தமிழும் பெண்தானே இரண்டும் இரண்டு கண்தானே
பரங்கியர்க்கு பாரத தாய் தான் அடிமையாவதா
அவள் கைவிலங்காலும் கால் விலங்காலும் நாளும் நோவதா
விடுதலை வேள்வியில் கொடுதலை
வெள்ளையன் செய்வானோ சுடுதலை
மக்களுக்கில்லை சூடு இது மாபெரும் மானக்கேடு
எங்கே போகும் நாடு இது நாமிருக்கும் தாய் வீடு
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே




Kaaviya Thalaivan - Alli Arjuna

காவியத் தலைவன் - ஏவினை நேர்விழி மாதரை

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை – நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை – அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை – யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது – மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் – குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி – லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு – சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு – பெருமாளே.




Kaaviya Thalaivan - Thiruppugazh

காவியத் தலைவன் - வாங்க மக்கா வாங்க எங்க நாடகம்

ஓ.. செந்தமிழால இசையை கூட்டி
பல பல பலவென கதை சொல்லுவோம்
சந்திரனை சாட்சி வச்சி ஜகதலப்ரதாபன் கதை சொல்லுவோம்
மதுரை ஸ்ரீ பால ஷன்முகனந்தா நாடக சபா

வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க

வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க

பச்சை மஞ்ச செவப்பு வெள்ளை ஊதா
கருநீல கண்ணனோடு மீரா
பச்சை மஞ்ச செவப்பு வெள்ளை ஊதா
கருநீல கண்ணனோடு மீரா
உங்க கண்ணுக்குள்ள வண்ண வண்ண மாயம் காட்டுவோம்
நாங்க வானவில்ல உங்க நெஞ்சுக்குள்ள காட்டுவோம்
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க ஆட்டம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க பாட்டை கேக்க வாங்க

திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
நாங்க தாம் கினத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
நாங்க தாம் கினத்தோம் ததிங்கினத்தோம் சொல்லி
நீங்க பாக்காத உலகத்த காட்டுவோம்
நாங்க பகல் கனவை நனவாக மாற்றுவோம்
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க ஆட்டம் பாக்க வாங்க – சும்மா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க பாட்டை கேக்க வாங்க – யம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க நீங்க வண்டி கட்டி வாங்க – யக்கா வாங்க
வாங்க மக்கா வாங்க நீங்க வறிஞ்சி கட்டி வாங்க – அய்யா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க – சும்மா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க – யம்மா வாங்க
வாங்க மக்கா வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க



Kaaviya Thalaivan - Vaanga Makka

காவியத் தலைவன் - ஹேய்… ஏய் மிஸ்டர் மைனர்

ஹேய்… ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
 ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
 ஹாஹேய்… ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற

ஆசைகள் உன்னோட நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது ஆடை ஒட்டி பார்க்குது
பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது வாய் பேச வாய் தாயேன்
இமைகளை திறக்குதே கனவுகள்
இதழ்களை நனைகுதே இரவுகள்
மலர்களை உடைக்குதே பனித்துகள்
நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்
ஹாஹேய்… ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற
ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற

என்னமோ என்னோடு கிச்சு கிச்சு மூட்டி போகுது கன்னம் பிச்சு போடுது
கன்னமோ தன்னோட முத்த பேச்சை கேக்குது தா உன் இதழ் தாயேன்
முதல் முறை பரவுதே பரவசம்
தொடங்கணும் மலர்வனம் இவள் வசம்
இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம்
கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது
ஓ… என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
ஹோ… ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற



Kaaviya Thalaivan - Aye Mr. Minor

காவியத் தலைவன் - யாருமில்லா தனியரங்கில்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்...

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான்
மட்டும் இருப்போம் !
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான்
என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு
ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் என்னும் படிவழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்

யாருமில்லா தனியரங்கில்...

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஓ...என்ன சொல்வேன்
இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்

யாருமில்லா தனியரங்கில் !….

பேச மொழி தேவையில்லை
பார்த்துக் கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா ?
மணிக்குயில் நானுமே !

சிற்பம் போல செய்து என்னை
சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா – சொல்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

ஓ...என்ன சொல்வேன்
இதயத்திடம்
உன்னை தனிமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்....



Kaaviya Thalaivan -  Yaarumilla

Followers