Pages

Search This Blog

Thursday, April 27, 2017

சண்டிவீரன் - அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல

பஞ்சி நீ, பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சி நீ, அஞ்சுல அடங்கி வரும் நாலு  நான்
பந்த நீ, பந்தல தாங்குற காலு நான்
பந்து நீ, பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்
ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன
காத்தாகி  மெல்ல தூத்துனு தூத்துன
காதல மீட்டுன கடவுள காட்டுன

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல

கோணலா மாணலா இருந்த மனம் நேருல

காலு தான் போகுதே காதலென்னும் ஊருல
நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்  இன்னும் ஏன் தேடல
கண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான்
காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்
காதல மீட்டுன கடவுள காட்டுன

அலுங்குறேன் குலுங்குறேன்
ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன்
ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற



Chandi Veeran - Alunguraen Kulunguraen

Wednesday, April 26, 2017

திருவிளையாடல் ஆரம்பம் - கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ

பல்லவி
=======
ஆ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர்வந்து எந்தன் உயிர்தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

சரணம்-1
========
ஆ: காதல் வந்து கெடுத்தபின் கவிதைகள் படிக்கிறேன்
பெ: தோழிகளைத் தவிர்க்கிறேன் உன்னைத்தேடி வருகிறேன்
ஆ: தாய் தந்தை இருந்துமேன் தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்
பெ: எந்தன் வீட்டை சொந்தமென்று நேற்றுவரை நினைத்தவள்
உன்வீட்டில் குடிவர நினைக்கிறேன்
ஆ: உன்னைக் காதலித்த கணமே உனக்குள் வந்தேன்
பெ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

சரணம்-2
========
ஆ: கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்
பெ: கனவுகள் இங்கு இல்லை கண்விழித்து நினைக்கிறேன்
ஆ: பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட
பெ: அன்பே நானோ இறக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட
ஆ: உண்மைக் காதல் சாவது இல்லையடி
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

பெ: நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
ஆ: உன் உயிர்வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா



Thiruvilayadal Aarambam - Kannukul Yaetho

திருவிளையாடல் ஆரம்பம் - என்னமா கண்ணு சௌக்கியமா

என்னமா கண்ணு சௌக்கியமா
ஆமமா கண்ணு சௌக்கியந்தான்....
பாக்கத்தான் சின்னப் பையன் நானுங்க
உங்க பூட்டுக்கு சின்ன சாவி நானுங்க
நாட்டுக்கு நல்ல பையன் நானப்பா
எனது பூட்டுக்குக்கு கள்ளச்சாவி நீயப்பா (என்)

கொல்லைப் பணம் என்னிடத்தில் கொட்டிக்கெடக்கு
அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு என்ன இருக்கு
வாரித்தரும் வள்ளலுக்கு வாரிசிருக்கு
உங்க வாரிசுக்கு பிள்ள தரும் யோகம் எனக்கு
சென்டிமெண்ட காட்டி ஓ ஹோ ..............
போடாதப்பா போட்டி ஓ ஹோ ..............
வெற்றி கொடி நாட்டி ஆ.... நாளை தர்றேன் பேட்டி ஒ....
என்ன வெல்ல முடியாதே ஏ படியாதே
யானை காதில் உள்ளபோயி வெல்லும் எறும்பு ஹோய் (என்)

வெள்ளிப்பணம் சத்தம் போட்டால் சொர்க்கம் திறக்கும்
வெட்டிப்பய ஒன்னக்கண்டா என்ன திறக்கும்
உங்கள் வசம் உள்ள துட்டில் சொர்க்கம் திறக்கும்
எங்கள் வசம் உள்ள புத்தி சொர்க்கம் படைக்கும்
கோணல் உள்ள புத்தி ஒஹோ......
கண்ணைத் தாக்கும் கத்தி ஒஹோ ........
உன்னை வெல்லும் யுத்தி ஆ..... காணும் எந்தன் சக்தி ஒ .......
கள்ளப் புத்தி செல்லாதே வெல்லாதே
உன்னைவென்று பெண்ணை வென்று
மண்ணை வெல்லுவேன் (என்)

என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு
என்னமா கண்ணு சௌக்கியமா
ஆமமா கண்ணு சௌக்கியந்தான்.



Thiruvilayadal Aarambam - Ennama Kannu Sowkiyama

அரங்கேற்ற வேளை - ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண் : தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண் : இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண் : நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ


பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்

பெண் : அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன

ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட

ஆண் : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ



Arangetra Velai - Aagaya Vennilaave

அரங்கேற்ற வேளை - குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன்
தொட்டா சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும் பட்டா தெறிச்சிவிடும் டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன் ஹோ ஹோ

தாய்பாலும் கெட்டுபோச்சு என்ன பண்ணும் கொழந்த
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா
வாய்க்காலில் தண்ணி இல்ல தண்ணியிலே மனுஷன்
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா
சுட்டுபுட்ட ஹீரோ நீ தான் தட்டுகெட்ட ஜீரோ தான்
வெட்டுகுத்து நீயும் போட்டா
கட்சிக்குள்ள கோட்டா தான்
வீறாப்பா மெரட்டி உருட்டும்
ஊரெல்லாம் திருட்டு பயக
கெட்டாலும் சுட்டாலும் எல்லோரும் ராஜாங்கதான் டோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன்
தொட்டா சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும் பட்டா தெறிச்சிவிடும் டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன் ஹோ

நெல்லு விளையும் நிலம் வீடாகிபோச்சு
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா ஹா
ஊரில் ஜனம் இருந்தும் காடாகி போச்சு
ஹும் ஹா...ஹும் ஹா...ஹும் ஹா ஹா
கெட்ட வேலையான கூட துட்டு வந்த தப்பே இல்ல
இஷ்டப்படி விட்ட போதும் அப்பன் போல புள்ளயில்ல
குளிரெல்லாம் விலகிபோச்சு எல்லாமே பழகிபோச்சு
வெள்ளைக்கும் கொள்ளைக்கும் அல்லாடும்
சொள்ளைகளே ஹே ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன்
தொட்டா சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும் பட்டா தெறிச்சிவிடும் டோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன்
கன்னி வெடி வெச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வெச்சிருக்கேன் ஹோ



Arangetra Velai - Gundu Onnu Vachirukken

ரெட் - தாய் மடியே உன்னை தேடுகிறேன்

தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் காயங்களில்
என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்

விண்ணை இடிக்கும் தோள்கள்
மண்ணை அளக்கும் கால்கள்
அள்ளி கொடுத்த கைகள் அசைவிழந்ததென்ன
கனல்கள் தின்னும் கண்கள்
கனிந்து நிற்கும் இதழ்கள்
உதவி செய்யும் பார்வை
உயிர் குறைந்ததென்ன
பாரத போர்கள் முடிந்த பின்னாலும்
கொடுமைகள் இங்கே குறையவில்லை
ஏசுகள் என்றோ மாண்ட பின்னாலும்
சிலுவைகள் இன்னும் மறிக்கவில்லை
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்

படை நடத்தும் வீரன்
பசித்தவர்கள் தோழன்
பகைவருக்கும் நண்பன் படும் துயரம் என்ன
தாய் பாலாய் உண்ட ரத்தம்
தரை விழுந்ததென்ன
இவன் பேருக்கேற்ற வண்ணம் நிலம் சிவந்ததென்ன
தீமைகள் என்றும் ஆயுதம் ஏந்தி தேர்களில் ஏறி வருவதென்ன
தர்மங்கள் என்றும் பல்லக்கில் ஏறி தாமதமாக வருவதென்ன

தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாரகையும் உருக பாடுகிறேன்
பத்து திங்கள் என்னை சுமந்தாயே
ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தா தாயே
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு
நடு தெருவில் கிடக்கிறது பார்த்தாயோ
உதிரம் வெளியேறும் காயங்களில்
என் உயிரும் ஒழுகும் முன்னே வா தாயே
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கின்றேன்



Red - Thai Madiyae

ரெட் - ரோஜா காடு சுடிதார் போட்டு

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா
ரோஜா காடு சுடிதார் போட்டு
Ho baby Ho baby Ho baby ho…

அழகு பெண்ணழகு ஆயிரம் தான் இருக்குதடி
ஆனா என் மனசு உன் மடியில் விழுந்ததடி
ஓ.. பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி
அதுக்கும் மேல ஒரு தாயழகும் உள்ளதடி
அவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலி
திருப்பரங்குன்றத்து கோயிலிலே
மேல மாசி வீதி வர மேல சத்தம் கேட்கும்
மூணு மோடி போடும் வேளையிலே
வீட்டுக்குள்ளே பாய் போடுவேன்
பிள்ளை பெத்து வெளியேறுவேன்

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா

அவள மனம் முடிச்சி அரசர் அடியில் குடியிருப்பேன்
வேர்த்தா அழகர் மலை காத்த கொஞ்சம் திருப்பி வெப்பேன் .
மதுரை மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன்
மேட்டினிக்கு டைடானிக் இங்கிலீஷ் படம் பாக்க வெப்பேன்
செம்பவள விரல் விட்டு நகம் விழுந்தாலும்
அத ஒரு முத்தா வெச்சிருப்பேன்
பட்டு வண்ண கூந்தல் விட்டு முடி விழுந்தாலும்
பரம்பரை சொத்தா வெச்சிருபேன்
மடியில் சீராட்டுவேன் விடிந்தும் வாலாட்டுவேன்

ரோஜா காடு சுடிதார் போட்டு
மதுரை வீதியில் வந்தா
அட மனம் குதிக்குது பந்தா
கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
தீயாய் இருந்தேனடா திரியாய் வந்தாளடா
கலக்கும் காட்டறாரு நான் கரையே அவள் தானடா
ரோஜா காடு சுடிதார் போட்டு



Red - Roja Kaadu

Followers