Pages

Search This Blog

Wednesday, April 26, 2017

ரெட் - டில் டில் டில் இத்தாலி கட்டில்

டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை

டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா
டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே
காஷ்மீரின் ஆப்பிள் காபூலின் திராட்சை ரூசிப்பேன் ரூசிப்பேன்
பெல்ஜியம் கிலாஸ்ஸில் ஜெர்மனி வைனை ரூசிப்பேன் ரூசிப்பேன்
அடி பெண்களில் நான் தொட்டது அடி நீதானே நீதானே
டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா

துருக்கி கம்பலத்தில் நான் இந்திய ஓட்டெலுக்கு
உன்னை நடக்க வைத்திருப்பேன்
சௌதி பேரிச்சையில் ஆஸ்ட்ரேலிய தேன் ஊற்றி
உனை சுவைக்க வைத்திருப்பேன்
கிளியே நமக்கொரு மாளிகையில் கிரேக்க நாடு மார்பல்கள்
ஆப்ரிக்காவின் தங்கத்தில் அழகிய கைப்பிடிகள்
ஜோர்டன் முஸ்லிம் தனியறையில் தாய்லாந்து நாட்டு தலையனைகள்
பாத்ரூம் போக நினைத்தாலும் டென்னிஸ் காலணிகள்
இனியெல்லாம் முதல் தரம் இந்த இன்பம் நிரந்தரம்
அட பெண்களில் யார் முதல் தரம் அது நான்தானே நான்தானே
டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே

சீன கிண்ணத்தில் சேலத்து மாம்பழங்கள்
நீ புசிக்க நான் தருவேன்
இலங்கை தேயிலையில் நான் டென்மார்க் பாலூற்றி
புது தேநீர் நான் தருவேன்
மைசூர் சந்தன தைலத்தில் மாலை பொழுதில் நீராடி
பாரிஸ் பர்ஃப்யூம் பூசிக்கொண்டு மெக்சிகன் இசை கேட்போம்
இராக் நாட்டு கோப்பையிலே பிரெசில் நாடு ஜூஸ் பருகி
ரோமன் விளக்கு வெளிச்சத்தில் கவிதை தமிழ் படிப்போம்
இனியெல்லாம் முதல் தரம் இந்த இன்பம் நிரந்தரம்
அட பெண்களில் யார் முதல் தரம் அது நான்தானே நான்தானே

டில் டில் டில் இத்தாலி கட்டில்
தை தை தை இங்கிலாந்து மெத்தை
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நான் பெண்ணே
காஷ்மீரின் ஆப்பிள் காபூலின் திராட்சை ருசிப்பாய் ருசிப்பாய்
பெல்ஜியம் கிலாஸ்ஸில் ஜெர்மனி வைனை ருசிப்பாய் ருசிப்பாய்
அட பெண்களில் நீ தொட்டது நான்தானே நான்தானே



Red - Dil Dil Italy Kattil

ரெட் - கண்ணை கசக்கும் சூரியனோ ரெட்

கண்ணை கசக்கும் சூரியனோ ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
காணும் மண்ணில் சரி பாதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உடம்பில் ஓடும் செங்குருதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உழைக்கும் மக்கள் உள்ளங்கை ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
அட வறுமையின் நிறமா சிவப்பு?
அதை மாற்றும் நிறமே சிவப்பு!
பிள்ளை தமிழ் இனமே எழு! எழு! எழு!
அறிவை ஆண்டவனாய் தொழு! தொழு! தொழு!
நீலும் ஆகாயம் தொடு! தொடு! தொடு!
நிலவை பூமியிலே நடு! நடு! நடு!

கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே
காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே
கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்
சரியா? சரியா? ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா!
முறையா? ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா!
குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலையொன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே
குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலையொன்றும் கேட்காதே
படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே
கண்ணை கசக்கும் சூரியனோ ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
காணும் மண்ணில் சரி பாதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உடம்பில் ஓடும் செங்குருதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உழைக்கும் மக்கள் உள்ளங்கை ரெட்! ரெட்! ரெட்! ரெட்!

என் தமிழ் நாட்டின் மக்கள் தொகையோ ஆறு கோடிகள்
இந்திய நாட்டின் மக்கள் தொகையோ நூறு கோடிகள்
மனிதனை மனிதன் சாப்பிடும் முன்னே தடுத்து நிறுத்துங்கள்
உங்கள் அரிசியில் உங்கள் பெயருண்டு உழைத்தே உண்ணுங்கள்
குழந்தாய்! குழந்தாய்! இது போட்டி உலகம் போட்டி போட்டு முந்தி விடு
கொழுந்தே! இது நாடு அல்ல புலிகள் வாழும் காடு
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே

கண்ணை கசக்கும் சூரியனோ ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
காணும் மண்ணில் சரி பாதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உடம்பில் ஓடும் செங்குருதி ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
உழைக்கும் மக்கள் உள்ளங்கை ரெட்! ரெட்! ரெட்! ரெட்!
நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு
அந்த நிறங்களில் சிவப்பே சிறப்பு
அட வறுமையின் நிறமா சிவப்பு?
அதை மாற்றும் நிறமே சிவப்பு!
பிள்ளை தமிழ் இனமே எழு! எழு! எழு!
அறிவை ஆண்டவனாய் தொழு! தொழு! தொழு!
நீலும் ஆகாயம் தொடு! தொடு! தொடு!
நிலவை பூமியிலே நடு! நடு! நடு!



Red - Kannai Kasakkum Suriyano

ரெட்- ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா…
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் திட்டு திட்டா
நான் காணாங்குளத்து மீனே
நான் காணாங்குளத்து மீனே
உன்ன கடிக்கப் போறேன் நானே
நான் சமைஞ்சதும் சாமி வந்து
உன் காதில் சொல்லுச்சு தானே
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி

எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு
வேணாம் இனி வாய்பேச்சு
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
பற்களே முத்தாய் மாறலாம்
கிச்சு கிச்சு பண்ணிக்கலாம் பிச்சு பிச்சு தின்னுக்கலாம்
பழுத்தாச்சு நெஞ்சம்பழம் பழுத்தாச்சு
அணில் கிட்ட குடுத்தாச்சு
அணில் இப்ப துள்ளி குதிக்கலாம் அப்பப்பா பல்லும் பதிக்கலாம்
பசியையும் தூண்டிவிட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு
இலைகளை மூடி ஓடுறியே
பசி வந்தால் கலங்குவே நீ பாத்திரத்த முழுங்குவே
நீ சமைஞ்சதும் சாமி வந்து
என் காதில் சொல்லுச்சு மானே
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி

தடுக்காதே மூடு வந்தா கெடுக்காதே மஞ்சப்பூவும் மறைக்காதே
தாகம் தான் சும்மா அடங்குமா
தண்ணிக்குள் பந்து உறங்குமா
கொஞ்சம் கொஞ்சம் விட்டு கொடு
குங்குமத்த தொட்டு கொடு
நொருக்காதே பொன்னாங்கண்ணி பொறுக்காதே
புடலங்காய முருக்காதே
மொத்தத்தில் என்ன துவைக்கிற
முத்தத்தில் மச்சம் கரைக்கிற
காதலின் சேட்டையடி கட்டில் மேல் வேட்டையாடி
காயமும் இங்கே இன்பமடி
கட்டிலுக்கு கெட்ட பையன் நீ ரெட்ட சுழி உள்ள பையன்
நீ சமைஞ்சதும் சாமி வந்து
என் காதில் சொல்லுச்சு மானே

ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா…
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா…
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் திட்டு திட்டா
நான் காணாங்குளத்து மீனே
நான் காணாங்குளத்து மீனே
உன்ன கடிக்கப் போறேன் நானே
நான் சமைஞ்சதும் சாமி வந்து
உன் காதில் சொல்லுச்சு தானே



Red - Olikuchi Udambukari

ரெட் - நவம்பர் மாதம் நாலாம் தேதி

நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து மெத்தை மேலே வந்து குதிப்பாள்
உன் மார்பில் பாய்ந்து கண் மூடி சாய்ந்து
கண்ணாளா தன் மேனியை உன் மீசையில் தேய்ப்பாள்
கண் ஜாடை செய்தாள் கை ரெண்டும் சேர்த்தாள்
ஐயய்யோ என் ஆசையை சொல்லாமலே தீர்ப்பாள்
நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்

ஹோ.. தினம் விசேஷமே தினம் விசேஷமே
அவள் முத்தமிட்ட எச்சிலை முத்தத்தாலே துடைத்தால்
ரத்தத்துக்குள் சந்தோஷமே
பேரின்ப வாரம் கொண்டாடும் நேரம்
கண்ணா நாம் பாலாற்றிலே தேன் ஊற்றுவோம் வா வா
ஓ. தினம் விசேஷமே தினம் விசேஷமே
ஹோ… இதயத்தில் விட்டு கொல்வாயா அடி பெண்ணே பெண்ணே
என் உயிரை வெட்டி தின்பாயா என் கண்ணே கண்ணே
பாம்பை போல் பின்னி கொள்வாயா அடி பெண்ணே பெண்ணே
பள்ளியறை கலகம் செய்வாயா என் கண்ணே கண்ணே
என் கூந்தல் பாயில் நீ வந்து தூங்கு
கண்ணா உன் முன்கோபத்தை என் மெத்தையில் காட்டு
நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து மெத்தை மேலே வந்து குதிப்பாள்

ஓ… இன்ப கொண்டாட்டமோ தினம் கோலாட்டமோ
என் உச்சந்தலை முத்தத்தில் உள்ளங்காலும் தித்திக்கும்
உற்சவத்தின் தேரோட்டமா
உன் ஆடை போக நான் ஆடை ஆக
உன் அங்கம் ஒவ்வொன்றையும் நான் மூடுவேன் வா வா
ஓ… இன்ப கொண்டாட்டமோ தினம் கோலாட்டமோ
ஊரெல்லாம் நம்மை பார்த்தாலும் உன் உதடை விட்டு
என் உதடை பிரிக்க மாட்டேனே என் கண்ணா கண்ணா
பூகம்பம் புரட்டி விட்டாலும் என் வாழ்நாள் முழுதும்
மடி விட்டு இறங்க மாட்டேனே என் மன்னா மன்னா
தேனுண்ட வாயும் தித்தித்த கையும்
நில் என்று சொன்னாலுமே நில்லாதடி வா வா

நவம்பர் மாதம் நாலாம் தேதி காதலி கையிளிருப்பாள்
மெக்சிகோவில் இருந்து மதுரைக்கு பறந்து மெத்தை மேலே வந்து குதிப்பாள்
உன் மார்பில் பாய்ந்து கண் மூடி சாய்ந்து
கண்ணாளா தன் மேனியை உன் மீசையில் தேய்ப்பாள்
கண் ஜாடை செய்தாள் கை ரெண்டும் சேர்த்தாள்
ஐயய்யோ என் ஆசையை சொல்லாமலே தீர்ப்பாள்



Red - November Madham

காதல் ஓவியம் - குயிலே குயிலே உந்தன் கீதங்கள்

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

ஆ ஆ ஆ வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான் உன் கடையே
வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான் உன் கடையே

விழிகள் இருந்தும் உன்னை காணாமல் சுகம் ஏது
அழகே மலரே வருவாய்யா

ஆ ஆ ஆ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா

சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா
நான் கண்ட கனவும் மறைந்ததம்மா
சலங்கை இசையை நான் கேட்கின்ற காலம் ஏது

நினைவில் உனை நான் மறப்பேனா

ஆ ஆ ஆ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ

உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ

குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ



Kaadhal Oviyam - Kuyilae Kuyilae

காதல் ஓவியம் - சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை

நம்தம்த நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
நம்தம்த நம்தம் நம்தம்த நம்தம்
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ...

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றிப் பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா வா ஆஆஆஆஆஆஅ...

(சங்கீத)

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதைத் தாங்க முடியுமோ
கனவினில் உந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தம் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னல் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம் (2)
சிந்தும் சந்தன் உந்தன் சொந்தம்
தத்திசெல்லை முத்துச் சிற்பம் கண்ணுக்குள்லே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன
ராஜ தீபமே...

(ஸ்வரங்கள்)



Kadhal Oviyam - Sangeetha Jathimullai

தங்க பதக்கம் - சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா??
துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமே கலங்கி நின்னா??
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

நானாட வில்லையம்மா சதையாடுது
அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி



Thanga Pathakkam - Sothanai Mel Sothanai

Followers