Pages

Search This Blog

Wednesday, April 26, 2017

தங்க பதக்கம் - நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாழுதேவனோ
தங்கமானா மன்னனாம்
எங்கள் வீடு கோகுலம்
என் மகன் தான் கண்ணனாம்
தந்தை வாழுதேவனோ
தங்கமானா மன்னனாம்
(நல்லதொரு..)

அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் தந்த்து
அன்னை என்னும் கடல் தந்தது
தந்தை என்னும் நிழல் தந்த்து
பிள்ளை செல்வம் என்னும் வண்ணம் கண்ணன் பிறந்தான்
நன்றி என்னும் குணம் கொண்டது
நன்மை செய்யும் மனம் கொண்டது
எங்கள் இல்லம் பேரை கண்ணன் வளர்ப்பான்
(நல்லதொரு..)

வெள்ளம் போல ஓடுவான்
வெண்மணல் மேல் ஆடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்
கானம் கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்

மாயம் செய்யும் மகன் வந்தது
ஆயர்பாடி பயம் கொண்டது
அந்த பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்
இந்த பிள்ளை நலம் கொள்ளவும்
என்னைப் பார்த்து எனை வெல்லவும்
கண்ணில் வைத்து நெஞ்சில் வைத்து
நான் வளர்த்தேன்
(நல்லதொரு…)

கோலம் கொண்ட பாலனே
கோவில் கொண்ட தெய்வமாம்
தாயில் பிள்ளை பாசமே
தட்டில் வைத்த தீபமாம்

பாசம் என்று எதை சொல்வது
பக்தி என்று எதை சொல்வது
அன்னை தந்தை காட்டும் நல்ல சொந்தம் அல்லவா?
பிள்ளை என்னும் துணை வந்தது
உள்ளம் என்றும் இடம் கொண்டது
இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா?
(நல்லதொரு..)



Thanga Pathakkam - Nalladhoru Kudumbam

கருப்புசாமி குத்தகைகாரர் - உப்புகல்லு தண்ணீருக்கு தண்ணீருக்கு ஏக்கபட்டது

உப்புகல்லு தண்ணீருக்கு
தண்ணீருக்கு ஏக்கபட்டது 
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன்
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன்
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ..
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லயே...

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது 
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது

ஏதுமில்லை வண்ணம் மென்று நானும் வாடினேன்
ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்..
தாயும்மில்லை என்று உள்ளம் என்று நேற்று ஏங்கினேன்
நீ தேடிவந்து நெய்த அன்பால் நெஞ்ஜை தாக்கினாய்..
கத்தியின்றி ரத்தம்மின்றி காயபட்டவள் 
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிரேன் மிச்சமின்றி மீதமின்றீ சேதபட்டவள்
உன் நிழல்குடுத்த தைரியத்தால் உண்மை அறிகிரேன்

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது
ஓ மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது

மீசை வைத்த அன்னை போல உன்னை காண்கிரேன்
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே...
பாளடைந்த வீடு போல அன்று தோன்றினேன்
உன் பார்வை பட்ட காரணத்தால் கோயிலாய் மாறுதே
கட்டில்லுண்டு மெத்தை உண்டு ஆன போதிலும் 
உன் பாசம் கண்டு தூங்க வில்லை எனது விழிகளே
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆனபோதிலும்
கண் ஆழம் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே...

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது 
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது
மொத்த சொல்லு புத்திகுள்ளா மாட்டிகிட்டது
நீ தப்பிசெல்ல கூடாதுனு கேட்டுகிட்டது
தேதிதாள போல வீணே நாளும் கிழியிரேன்
நான் தேர்வுதாழ கண்ணீரால ஏனோ எழுதுரேன்
இது கனவா....ஆ. இல்லை நிஜமா...ஆ..
தற்செயலா தாய் செயலா
நானும் இங்கு நானும் இல்லயே..

உப்புகல்லு தண்ணீருக்கு ஏக்கபட்டது 
ஏன் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கபட்டது...



Karuppusamy Kuththagaithaarar - Uppu Kallu Thanneerukku

சத்யா - வளையோசை கலகலகலவெனக்

வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

(வளையோசை கலகலகலவென)

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

(வளையோசை கலகலகலவென)

லாலலாலலாலா லாலா
லாலலாலலாலா லாலா ஹே
லாலலாலலாலா லாலலாலலாலா

உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேச்சில்தான்

(வளையோசை கலகலகலவென)



Sathya - Valaiosai Kala kala kalavena

அவதாரம் - தென்றல் வந்து தீண்டும் போது

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை



Avatharam - Thendral Vanthu Theendumbothu

Tuesday, April 25, 2017

வெற்றிவேல் - உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல     
ஓ உசுர பார்த்து வானம் கூட     
குறுகுமே மெல்ல (உன்ன)
     
சாமி போல வந்தவனே     
கேட்கும்முன் நீ தந்தவனே      
நான் வணங்கும் நல்லவனே     
நல்ல உள்ளம் கொண்டவனே     
ஏன் ஒட்டுமொத்த     
ஜென்மத்துக்கு சாமி நீ தானே (உன்ன)
     
உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ     
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ     
இல்லை இனி ஏதும் என்று வாடிரபா நின்ற போதிலே     
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே     
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்     
உன் உறவென்பது யுக யுகங்களை      
கடந்தது தானே (உன்ன)
     
உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே     
கன்னி வரம் கேட்கிறேன்     
நானும் அரங்கேறவே     
உன்னருகில் வாழுவதொன்று     
போதும் இந்த மண்ணிலே     
வேறு ஒன்றும் தேவை இல்லை     
யாவும் உந்தன் அன்பிலே     
எனை ஆளவே வந்த மகராசனே     
நான் உனக்காகவே பல பிறவிகள்     
துணை வருவேனே  (உன்ன)



Vetrivel - Onnapola

வெற்றிவேல் - அதுவா இதுவா அவ என்னத்தான்

அதுவா இதுவா அவ என்னத்தான் சொல்லுவா     
தவியா தவிச்சேன்     
அத எப்பத்தான் சொல்லுவா      (அதுவா)
     
மனசெல்லாம் தூரலா நெனப்பெல்லாம் சாரலா     
பயமும் இருக்கு சோகமும் இருக்கு     
அடடா எனக்கு நிக்காம எங்கெங்கோ     
நான் போகுறேன் சொக்கமா சொக்கித்தான்     
நான் நிக்கிறேன்     
நிக்காம எங்கெங்கோ     
நான் போகுறேன் சொக்கமா சொக்கித்தான்     
நான் நிக்கிறேன்     
அதுவா இதுவா அவ என்னத்தான் சொல்லுவா     
தவியா தவிச்சேன் அத எப்பத்தான் சொல்லுவா     
மனசெல்லாம் தூரலா நெனப்பெல்லாம் சாரலா     
பயமும் இருக்கு சொகமும் இருக்கு      
அடடா எனக்கு நிக்காமா     
எங்கெங்கோ நான் போகுறேன்     
சொக்காம சொக்கித்தான் நான் நிக்குறேன்     
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…



Vetrivel - Athuva Ithuva Ava Ennatha

வெற்றிவேல் - அடியே உன்ன பார்த்திட பார்த்திட

அடியே… உன்ன பார்த்திட பார்த்திட     
நான் தொலைஞ்சேனே     
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேனே     
பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே     
அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே     
உசுரே உன் ஓர பார்வை     
சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…

அடியே… உன்ன பார்த்திட பார்த்திட     
நான் தொலைஞ்சேனே     
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேன...

எதுக்கு என்னை நீ பொரியேற ஊதுரா     
சுருக்கு கயிற விழியால மாத்துர     
முன் அழகில் நீ தான் ஒரு பேரா ஜாட காட்டுறா     
ஒத்த நொடிக்கூட ஒரு ஒதுங்காம தீய மூட்டுற     
எங்கோ ஏதோ நீயாக உன் நெனப்புல பேய்யாக     
பிடிச்சி பிடிச்சி நெஞ்சில் ஆணி அடிச்சேன்

அடியே… உன்ன பார்த்திட பார்த்திட     
நான் தொலைஞ்சேனே     
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேனே....
     
உன்ன நான் நெனச்சு திமிராகி போகுறேன்     
விளக்கு திரி நான் விடிவெள்ளி ஆகுறேன்     
     
எத்தனையோ வார்த்த தெரிஞ்சாலும்     
வாய மூடுறேன் ஒத்த பனை ஓல     
அத போல நான் ஆடுறேன்     
     
சித்ததுல நோயாக மொத்தத்துல தாயாக     
கிடைச்ச கிடைச்ச என்ன என்டி கலைச்ச

அடியே… உன்ன பார்த்திட பார்த்திட     
நான் தொலைஞ்சேனே     
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேன...
பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே     
அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே     
உசுரே உன் ஓர பார்வை     
சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே….



Vetrivel - Adiye Unna

Followers