Pages

Search This Blog

Friday, January 6, 2017

மூன்றாம் பிறை - நரி கதை

ம்ம் முன்பு ஒரு காலத்துல முருங்க மல காட்டுக்குள்ள
முன்பு ஒரு காலத்துல முருங்க மல காட்டுக்குள்ள
தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது
அது காடு விட்டு நாடு தேடி ஓடி வந்தது
என்ன பன்னிச்சு

ஓடி வந்திச்சி


ம்ம் ஓடி வந்த குள்ள நரி

ஹையையோ ஹையையோ 

கால் தவரி வீழ்ந்ததடி ஓடி வந்த குள்ள நரி கால் தவரி வீழ்ந்ததடி
நீல நிற சாயம் வெச்ச தொட்டி ஒன்றிலே
அது நிறம் மாறி போனதடி சின்ன பொம்பலே

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

நரி கலர் மாறி போச்சு பிறகு காடு தேடி போச்சு நரி

காடு மாறி போச்சு

ஐயோ அப்றம்

கலர் தேடி போச்சு

கெட்டுது போ கதையே மாத்திபுட்டே
நரி கலர் மாறி காட்டுக்குள்ளே போச்சா
புதுசா ஒரு மிருகம் வந்திருக்குதஎ
அப்படின்னு பாத்து பயந்து போச்சு

ஐயையோ


ஹஹஹ நான் ஆண்டவன் அனுபிய புருஷன்
ஹஹஹ ஹஹஹ உங்களை ஆள வந்திருக்கும் அரசன்
மிருங்கங்களெல்லாம் பயந்தது
அங்கு நரியின் ராஜியம் நடந்தது
ஒரு நாள் மேகம் இடித்தது மின்னல் வெடித்தது காற்று அடித்தது
காடு துடித்தது நிலம் அசைந்தது மழை பொழிந்தது ஆ


காட்டு விலங்குகள் கலங்கின கொஞ்சம் பயந்தன
உடல் நடிங்கின ஆவி ஒடிங்கின நீல நரியின் வாசல் வந்து
ஒலம் விட்டு அழுதன

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஏ ஏ நீ ஏன் அழுகுற

நீ ஏன் அழுத

நான் புலி சிங்கம் முயில் குட்டி அது மாதிரி அழுதேன் நீ ஏன் அழுகுற

அப்போ செரி ம்ம் சொல்லு

நரியும் வெளியில் வந்தது மழையில் கொஞ்சம் நனைந்தது
நீல சாயம் கரஞ்சது நரியின் வேஷம் கலஞ்சது

ஹஹஹ ஹஹஹ

நீல சாயம் வெளுத்து போச்சு

டும் டும் டும் டும்

ராஜா வேஷம் கலஞ்சு போச்சு

டும் டும் டும் டும்

நீல சாயம் என்ன ஆச்சு

ம்ம் ம்ம் நீல சாயம் வெளுத்து போச்சு

நீல சாயம் வெளுத்து போச்சு

டும் டும் டும் டும்

ராஜா வேஷம் கலஞ்சு போச்சு

டும் டும் டும் டும்

நீல சாயம் வெளுத்து போச்சு

டும் டும் டும் டும்

ராஜா வேஷம் கலஞ்சு போச்சு

டும் டும் டும் டும்

காட்ட விட்டே ஓடி போச்சு

பெ&ஆ டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்

Moondram Pirai - Narikathai

மூன்றாம் பிறை - கண்ணே கலை மானே

கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன
கண்டேன் உனை நானே [௨]
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ராரி றாரோ ஒ ராரி ரோ 
ராரி றாரோ ஒ ராரி ரோ

கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன
கண்டேன் உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
பேதை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளி பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலை மானே கன்னி மயில்லென்ன
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ராரி றாரோ ஒ ராரி ரோ 
ராரி றாரோ ஒ ராரி ரோ

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கனமணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீ தான் என்றும் என் சந்நிதி

கண்ணே கலை மானே
கன்னி மயிலென்ன
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்

ராரி றாரோ ஒ ராரி ரோ 
ராரி றாரோ ஒ ராரி ரோ
ராரி றாரோ ஒ ராரி ரோ 
ராரி றாரோ ஒ ராரி ரோ

Moondram Pirai - Kanne Kalai Maane

மூன்றாம் பிறை - பூங்காற்று புதிரானது

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்

பூவானில் பொன்மோகம் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி

என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ

பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது

Moondram Pirai - Poongatre

மூன்றாம் பிறை - பொன்மேனி உருகுதே என் ஆசை

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா


இளமை இது எங்கும் வயது இரு விழியும் தூங்காது
இனிமை சுகம் வாங்கும் மனது இனியும் இது தாங்காது
இளமேனி வாடுதே தனலாகவே இளங்காற்று வீசுதே அனலாகவே
பதில் இல்லையோ தர நானனனன
பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா


அருவி என ஆசை எழுந்து அனைக்கும் சுகம் பார்க்காதோ
உருகும் மனம் உன்னை நினந்து உணர்வுகளை சேர்க்காதோ
உனக்காக ஏங்குதே ஒரு பூவுடல் உறவாடும் இன்பமோ திருபார்கடல்
பதில் இல்லையோ தர நானனனன
பொன்மேனி உருகுதே என் ஆசை ஆ பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே தர நானனானா

Moondram Pirai - Ponmeni Uruguthey

Thursday, January 5, 2017

படிக்காதவன் (1985) - ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம்

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிருச்சு
கண்மணி என் கண்மணி! (2)

பச்சை குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சுபுட்டு பாம்பாகக் கொத்துதடி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

ஏது பந்தபாசம்? எல்லாம் வெளி வேஷம்!
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்!
சிந்தினேன்.. ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ?
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ?
என் வீட்டு கன்னுக்குட்ட, என்னோட மல்லுக்கட்டி,
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி!
தீப்பட்ட காயத்துல தேள் வந்து கொட்டுதடி கண்மணி..... கண்மணி!


(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)


நேத்து இவன் ஏணி இன்று இவன் ஞானி!
ஆளைக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி!
சொந்தமே ஒரு வானவில் அந்த வண்ணம் கொஞ்ச நேரம்!
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்!
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி..... கண்மணி!

(ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்)

Padikkadavan (1985) - Oorai Therinchikitten

கேப்டன் மகள் - எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)

கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே அதுவா தெறித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் இரண்டு மிச்சம் உள்ளதே
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தை பாசிமணிகள்
தடவுகின்றதே அதுவா தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும் முன்னே புன்னகை செய்வாய்
அதுவா அதுவா அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால் உதடு கடிப்பாய்
அதுவா அதுவா அதுவா
அதை அறியாமல் விட மாட்டென்
அது வரை உன்னை தொட மாட்டேன்

(எந்த பெண்ணிலும்)

Captain Magal - Endha Pennilum

ராஜா சின்ன ரோஜா - சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் - கண்ணா
உங்க பேரை ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்பை ஏத்துங்க
கெட்டப்பை மாத்துங்க
செட்டப்பை மாத்தாதீங்க

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் - கண்ணே
எந்தன் பேரை ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
மேக்கப்பை ஏத்தலாம்
கெட்டப்பை மாத்தலாம்
செட்டப்பு மாறாதம்மா

(சூப்பர் ஸ்டாரு)

உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா
அதுக்கு வைத்தியம் உண்டா
போட்டல் அவிழ்க்க துடிக்குது அய்யா
இதுக்கு வைத்தியம் உண்டா
கைவசம் வைத்தியம் மெத்த யிருக்கு
காரியம் மீறினால் மெத்தை இருக்கு
கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு
கட்டலும் ரெண்டுக்கு சொல்லியிருக்கு
எங்கெங்கு சுகமென்று இலக்கணமிருக்கு

(சூப்பர் ஸ்டாரு)


நெத்தியில் புரளும் ஒத்தை முடி விலக்கி
முத்தங்கள் தர ஒரு ஆசை
கண்மணி உனது கால் கொலுசெடுத்து
கைகளில் கட்டிக்கொள்ள ஆசை

என்னமோ மாறுது புத்தி உனக்கு
என் குங்குமம் எங்கயோ ஒட்டியிருக்கு
ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தமிருக்கு
நான் அள்ளவும் கிள்ளவும் சொந்தமிருக்கு
என்றாலும் அதுக்கொரு இடம்பொருள் இருக்கு

(சூப்பர் ஸ்டாரு)

Raja Chinna Roja - Super Staru

Followers