Pages

Search This Blog

Wednesday, January 4, 2017

சகலகலா வல்லவன் (1982) - கட்ட வண்டி கட்ட வண்டி

(Female Version)
கட்ட வண்டி கட்ட வண்டி
கடையானி கழண்ட வண்டி

கட்ட வண்டி கட்ட வண்
கடையானி கழண்ட வண்டி

ஆலாப் பரந்த வண்டி
ஆடி ஆடி அலுத்த வண்டி

ஆலாப் பரந்த வண்டி
ஆடி ஆடி அலுத்தவண்டி

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
இப்போ மாட்டிக் கிட்டு ராமரே ராமா

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
மாட்டிக் கிட்டு ராமரே ராமா

கட்ட வண்டி கட்ட வண்டி
கடையானி கழண்ட வண்டி

ஆலாப் பரந்த வண்டி
ஆடி ஆடி அலுத்த வண்டி

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
மாட்டிக் கிட்டு ராமரே ராமா

முறிஞ்சு போச்சு கொம்பு
நம்மை முட்டிட ஏது தெம்பு

முறிஞ்சு போச்சு கொம்பு
நம்மை முட்டிட ஏது தெம்பு

குட்டுப்பட்டா கட்டுப்பட்டா
மட்டுப்படும்

மச்சானே உன் அச்சாணியே
எங்கே வச்ச சொல்லு

சொல்லாட்டி நீ இப்படியே
சந்தியிலே நில்லு

நல்ல வண்டி அச்சுடஞ்சு
நின்ன வண்டி

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
இப்போ மாட்டிக்கிட்டு ராமரே ராமா

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
மாட்டிக்கிட்டு ராமரே ராமா

கட்ட வண்டி கட்ட வண்டி
கடையாணி கழண்ட வண்டி
ஆலாப் பரந்த வண்டி
ஆடி ஆடி அலுத்த வண்டி

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
மாட்டிக் கிட்டு ராமரே ராமா

ஏற புடிச்சி உழுவான்
இவன் நீரை பாச்சி விடுவான்

ஏற புடிச்சி உழுவான்
இவன் நீரை பாச்சி விடுவான்

மத்த நேரம் மாடு கன்னு
மேச்சிடுவான்

ஏட்டெடுத்து படிக்க சொன்னா
நாட்டுப்புர ஆளு

ஏ பி சி டி தெரியுமானு
இவன் கிட்ட நீ கேளு

கத்திக் கிட்டு பொட்டலத்தான்
கண்ட வண்டி

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
இப்போ மாட்டிக்கிட்டு ராமரே ராமா

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
மாட்டிக்கிட்டு ராமரே ராமா

குடுமி நுடிஞ்ச மாமா
கொஞ்சம் போவை சுத்தலாமா

குடுமி நுடிஞ்ச மாமா
கொஞ்சம் போவை சுத்தலாமா

பூவும் வச்சி பொட்டும் வச்சா
பொம்பளைதான்

சேலை ஒன்னு வாங்கி தாரேன்
இடுப்புலதான் கட்டு

உன்கிட்டதான் இல்லையின்னா
நான் கொடுப்பேன் துட்டு

வீரமெல்லாம் சூரமெல்லாம்
விட்ட வண்டி

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
இப்போ மாட்டிக்கிட்டு ராமரே ராமா

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
மாட்டிக்கிட்டு ராமரே ராமா

கட்ட வண்டி கட்ட வண்டி
கடையாணி கழண்ட வண்டி

ஆலாப் பரந்த வண்டி
ஆடி ஆடி அலுத்தவண்டி

ஆலாப் பரந்த வண்டி
ஆடி ஆடி அலுத்தவண்டி

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
மாட்டிக்கிட்டு ராமரே ராமா

ஓட்ட வண்டி ஓட்டுர மாமா
மாட்டிக்கிட்டு ராமரே ராமா

Sakalakala Vallavan (1982) - Katta vandi Katta vandi

சகலகலா வல்லவன் (1982) - நேத்து ராத்திரி எம்மா

ம் ஆ ஹோ
ம் ம் ஆ ம்
ஆ ம் ஹா

நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடி

நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா

ஆவோஜி ஆ அனார்கலி
அச்சா அச்சா பச்சக்கிளி

ஆவோஜி ஆ அனார்கலி
அச்சா அச்சா பச்சக்கிளி

அம்மாடி ஆத்தாடி உன்னால தான்
நேத்து ராத்திரி எம்மா
தூக்கம் போச்சுடி யம்மா

ஆ நேத்து ராத்திரி
எம்மா

தூக்கம் போச்சுடி
ஹ் யம்மா

அச்சாரத்தை போடு
கச்சேரிய கேளு

சின்ன உடல் சிலுக்கு
சில்லுன்னு தான் இருக்கு

சந்தனத்தில் பண்ணி வச்ச
தேரு

அச்சாரத்தை போடு
கச்சேரிய கேளு

சின்ன உடல் சிலுக்கு
சில்லுன்னு தான் இருக்கு

சந்தனத்தில் பண்ணி
வச்ச தேரு

கண்டேனடி காஷ்மீர் ரோஜா
வந்தேனடி காபுல் ராஜா

என்பேரு தான் அப்துல் காஜா
என்கிட்ட தான் அன்பே ஆஜா

அஞ்சு விரல் பட்டவுடன்
அஞ்சுகத்தை தொட்டவுடன்

ஆனந்தம் வாரே வா .

நேத்து ராத்திரி
எம்மா

தூக்கம் போச்சுது
யம்மா

அனார்கலி நான் தானய்யா
அன்பே சலீம் நீதானய்யா .

அம்மாடி ஆத்தாடி உன்னாலதான்
நேத்து ராத்திரி
எம்மா

தூக்கம் போச்சுது
யம்மா

என்னோடு வா தூபா
ஏராளம் தான் ரூபா

ஒட்டகங்கள் இருக்கு
பெட்டகங்கள் இருக்கு

உன்ன நானும் வச்சிருப்பேன்
அன்பா

என்னோடு வா தூபா
ஏராளம் தான் ரூபா

ஒட்டகங்கள் இருக்கு
பெட்டகங்கள் இருக்கு

உன்ன நானும் வச்சிருப்பேன்
அன்பா.

உன் மேல தான் ஆசப் பட்டேன்
உன்னக் கண்டு நாலும் விட்டேன்

குபேரனுன் கையைத் தொட்டேன்
குசேலனின் கையை விட்டேன்

அந்த புரம் வந்தவுடன்
அந்தரங்கம் கண்டவுடன்
ஆசைகள் அப்பப்பா.

நேத்து ராத்திரி
எம்மா

தூக்கம் போச்சுடி
யம்மா

அட நேத்து ராத்திரி .
எம்மா
தூக்கம் போச்சுடி
யம்மா

ஆவோஜி ஆ அனார்கலி
அச்சா அச்சா பச்சக்கிளி

ஆவோஜி ஆ அனார்கலி
அச்சா அச்சா பச்சக்கிளி

அம்மாடி ஆத்தாடி உன்னால தான்

நேத்து ராத்திரி
எம்மா

தூக்கம் போச்சுடி
யம்மா

ஹோய் நேத்து ராத்திரி
எம்மா

தூக்கம் போச்சுடி
ஹ் யம்மா

Sakalakala Vallavan (1982) - Nethu Rathiri

சகலகலா வல்லவன் (1982) - நிலா காயுது நேரம் நல்ல நேரம்

நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்

தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

தென்னங் கீற்றும் பூங் காத்தும்
என்ன பண்ணுதோ

உன்னப் போல தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ

தென்னங் கீற்றும் பூங் காத்தும்
என்ன பண்ணுதோ

உன்னப் போல தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ

வெட்கம் பிடுங்குது பொறுத்துக்கையா
அது விலகி போனதும் எடுத்துக்கையா

கட்டில் போட்டதும்
தெரிஞ்சிக்கணும்

கொல்லை பக்கம் ஒதுங்கிட
புரிஞ்சக்கணும்

அம்மாடி அதுக்கென்ன அவசரமோ

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

தண்ணீர் கேட்கும் ஏ
கண்ணே தாகம் தனிஞ்சதா

அத்தான் தேவை நான் தந்தேன்
ஆசை குறஞ்சுதா

கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு

இன்று கொடுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்
அன்பே நீ அதிசய சுரங்கமடி

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

தூக்கம் வல்ல மாமா
காக்க வைக்கலாமா

ஆக்கிவச்ச சோத்த
ஆறப் போடலாமா

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

Sakalakala Vallavan (1982) - Nila Kayuthu

சகலகலா வல்லவன் (1982) - இளமை இதோ இதோ

ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன் 
ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏது் கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)


இந்தியிலும் பாடுவேன்
வெற்றி நடை போடுவேன்
ஏக்துஜே கே லீயே
ஏன்டி நீ பார்த்தியே
எனக்காக ஏக்கம் என்னம்மா
களத்தூரின் கன்னம்மா
உனக்காக வாழும் மாமன் தான்
கல்யாண ராமன் தான்
நாள் தோறும் தான் ஆள் மாறுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)


கம்பெடுத்து ஆடுவேன்
கத்திச்சண்டை போடுவேன்
குத்துவதில் சூரன் நான்
குஸ்திகளில் வீரன் நான்

எனை யாரும் ஏய்த்தால் ஆகாது
அதுதானே கூடாது
எனை வெல்ல யாரும் கிடையாது
எதிர்கின்ற ஆளேது
யார் காதிலும் பூச்சுற்றுவேன்
நான் தான் சகலகலா வல்லவன்

(இளமை இதோ இதோ)

Sakalakala Vallavan (1982) - Ilamai Itho

தாய் மூகாம்பிகை - ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

சிவசக்த்யாயுத்தோயதிபவதி....
சத்தப்ரபவிதும்
ம்ம்ம்................!

நசே தேவம் தேவோ நகலு
குஷல ஹஸ்பந்திதுமபீ!
.....ஆ.!

அதஸ்தாம்...ஆராத்யாம்....
ஹரிஹர விரிஞ்சாதிவிரவீ!

ப்ரணம்தும் ஸ்தோத்தும்வ
கதம் அகிர்த புண்யக ப்ரபவதீ!
ஆ.....!

ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

குழு: ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

ஜனனீ ஜனனீ! ஜனனீ ஜனனீ!

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடைவார் குழலும் இடை வாகனமும்!

குழு : சடைவார் குழலும் இடை வாகனமும்!

கொண்ட நாயயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே!

குழு : நின்ற நாயகியே இட பாகத்திலே!

ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

குழு : ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

குழூ : சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே! மலை மா மகளே!

குழு : தொழும் பூங்கழலே! மலை மா மகளே!

அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

குழு : அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

அலை மா மகள் நீ! கலை மா மகள் நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பீகையே!

குழு : லிங்க ரூபிணியே மூகாம்பீகையே!

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே!

குழு : லிங்க ரூபிணியே மூகாம்பிகையே!

பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்!

குழு : பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்!

சக்தி பீடமும் நீ........!
ஆஆஆ.......................ஆ!

சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
குழு : சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
குழு : சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!


குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 

ஜனனீ ஜனனீ! ஜனனீ ஜனனீ!

குழு : ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ! 
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!

Thai Moogambikai - Janani Janani

ஆயிரத்தில் ஒருவன் - தாய் தின்ற மண்ணே இது

தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
தாய் தின்ற மண்ணே இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
நெல்லாடிய நிலம் எங்கே சொல்லாடிய அவை எங்கே
வில்லாடிய களம் எங்கே கல்லாடிய சிலை எங்கே
தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே

கயல் விளையாடும் வயல்வெளி தேடி
காய்ந்து கழிந்தன் கண்கள்
காவிரி மலரின் கடி மனம் தேடி கருகி முடிந்தது நாசி
சிலை வடிமேவும் உளி ஒலி தேடி திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்
புலிக்கொடி பொற்த்த சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொறிப்பதுவோ
காற்றை குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பது… ஓ…
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ மன்னன் ஆளுவதோ… ஓ… (தாய்)

நொறுங்கும் உடல்கள் பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ
களங்கலும் அதிர களிருகள் பிளிர
சோழம் அழைத்து போவாயோ
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அது வரை அது வரை… ஓ…
தமிழன் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாடே அழாதே
நூற்றாண்டுகளும் துரவை தாங்கி
உரையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடு அழுவும் யாழே அழாதே (நெல்லாடிய)

தாய் தின்ற மண்ணே…. இது பிள்ளையின் கதறல்……
ஒரு பேரரசன் புலம்பல்…

Aayirathil Oruvan - Thaai Thindra Mannae

ஆயிரத்தில் ஒருவன் - பெம்மானே பேருலகின் பெருமானே

பெம்மானே பேருலகின் பெருமானே 
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ 
வெய்யோனே மெய்யுருகி வீழ்கின்றோம் 
வெந்தழிந்து மாய்கின்றோம் விதி இதானோ 
புலம் பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம் 
அழுதழுது உயிர் கிழிந்தோம் அருள்கோனே (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீர் இல்லை 
கொங்கையிலும் பால் இல்லை கொன்றையோனே 
மூப்பானோம் உருவழிந்து முடமானோம் 
மூச்சுவிடும் பிணமானோம் முக்களோயே 
ஊண்டெய்தோம் ஊணுருவி உயிர் ஓய்ந்தோம் 
ஓரிழையில் வாழ்கின்றோம் உதய்கோனே 

நீராகி ஐம்புலனும் வேராகி 
பொன்னுலகம் சேறாகிப்போக மாட்டோம் 
எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை 
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம் 
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும் 
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம் 
ஓம்……… ஓம்……… ஓம்……… 

பொன்னார் மேனியனே வெம்புலி தோல் உடுத்தவனே 
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ 
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சு உண்டவனே 
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ 
பெம்மானே பேருலகின் பெருமானே 
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ……

Aayirathil Oruvan - Pemmane

Followers