Pages

Search This Blog

Monday, January 2, 2017

ஜெமினி - நாட்டுக்கட்டை நாட்டுக்கட்டை

நாட்டுக்கட்டை நாட்டுக்கட்டை நாட்டுக்கட்டை
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை

நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு

மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திருச்சு
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை நாட்டுக்கட்டை

நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

சொட்டு சொட்டு மழைய ரசிக்க
விட்டு விட்டு வெயிலடிக்கணும்

கன்னி பொண்ணு காதல் ருசிக்க
சின்ன சின்ன ஊடல் இருக்கணும்

அஞ்சோ பத்தோ முத்தம் கொடுக்கணும்
அங்கே இங்கே மீசை உறுத்தணும்

பத்து விரல் பயணம் பண்ணனும்
பல்லு படாம காது கடிக்கணும்

உன் கனிந்த மார்பில் இடுக்கில
என் கவலைகளை பொதைக்கணும்

நீ மூச்சி விடும் நெருப்பில
என் மோகங்களை எரிக்கணும்

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ

ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை
நாட்டுக்கட்டை

நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட
மாட்டிகிட்ட

செர்ரி பழம் நிறம் இருக்கு
சிக்கென்று தான் உடம்பிருக்கு

ஏராளமாய் மார்பிருக்கு
தாராளமாய் மனசிருக்கு

நெஞ்சாம் பழம் கனிஞ்சிருக்கு
நேரம் நல்ல அமைஞ்சிருக்கு

தப்பு தண்டா பண்ண சொன்னா
தண்டால் செஞ்ச உடம்பிருக்கு

உன் பழுத்த மார்பு பார்க்கையில்
என் ஒழுக்கம் என்பது மறக்குது

அந்த பொழுது சாயும் வேளையில்
நான் பொம்பளை என்பது மறக்குது

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ

ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு
கட்டை நாட்டுக்கட்டை

நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட
மாட்டிகிட்ட

சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு
மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திருச்சு

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ
தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ

Gemini - Naattu Katta

ஜெமினி - பெண்ணொருத்தி பெண்ணொருத்தி

ஓ...ஓ...ஓ...ஓ...

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்

கண்களிலே பெளத்தம் பார்த்தேன்
கன்னத்தில் சமணம் பார்த்தேன்
பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்
பற்களிலும் கருணை பார்த்தேன்
பாதங்களில் தெய்வம் பார்த்து
புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்
புயலென்று நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
மலை என்று நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை சாய்த்தாள்
நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே

பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்...

ஓ...ஓ...ஓ...ஓ...: ஓஹோ...ஓஹோ...ஓஹோ...ஓஹோ...

பகலெல்லாம் கருப்பாய் போக
இரவெல்லாம் வெள்ளை ஆக
என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ
அய்யய்யோ உலக உருண்டை
அடி வயற்றில் சுற்றுவதென்ன
அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
எரிமலையின் கொண்டை மேலே
ரோஜாவை நட்டவள் யாரோ
காதல் எனும் கணவாய் வழியே
என்தேசம் புகுந்தவள் யாரோ
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே...

பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய் 
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்

பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா

Gemini - Penn Oruthi

ஜே ஜே - காதல் மழையே காதல் மழையே

தேடி கிடைப்பதில்லை, இன்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்பதென்று மெய் தேட தொடங்கியதே

தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா

காதல் மழையே காதல் மழையே
எங்கே விழுந்தாயோ?
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா?
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதம?
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா?
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்

காதல் மழையே காதல் மழையே
எங்கே விழுந்தாயோ?
(விழுந்தாயோ? )

கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்ததிலே
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது காண்
உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்ல சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்

காதல் மழையே….

தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா

தேடல் தொடங்கியதே… மெய் தேடல் தொடங்கியதே….
தேடல் தொடங்கியதே… மெய் தேடல் தொடங்கியதே….
தேடல் தொடங்கியதே… மெய் தேடல் தொடங்கியதே….
தேடல் தொடங்கியதே… மெய் தேடல் தொடங்கியதே….

சங்கில் குதித்துவிட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது காண்
தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
உயிரே வாராய்… என் உயிரே… வாராய்…
காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல்……….

காதல் மழையே காதல் மழையே
எங்கே விழுந்தாயோ?
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா?
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதம?
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா?
வாழ்ந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
(வாராய் )

Jay Jay - Kaadhal Mazhaiye

ஜே ஜே - உன்னை நான் உன்னை நான் உன்னை

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

சொக்குபொடி கொண்ட சுடர் விழியா?
திக்கி திக்கி வந்த சிறு மொழியா?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
8 மில்லிமீட்டர் புன்னகையா?
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா?
மூடி கிடந்த ஜோடி திமிரா?
என்ன சொல்ல எப்படி சொல்ல? எதுகை மோனை கை வசம் இல்ல
உன்னை எண்ணிகொண்டு உள்ளே பற்றி கொண்டு உள்ளம் நோகுதடி
என் உசி வேகுதடி

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

மறு முறை உன்னை சந்திப்பேனா?
மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா?
மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா?
வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே
உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே
பதறும் இதயம் தோண்டி எடுத்து
சிதறு தேங்காய் போட்டு முடித்து
உடைந்த சத்தம் வந்திடும் முன்னே
எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்
என்னை காணும் போது கண்ணை பார்த்து சொல்லு
கண்ணே என் போல நீயும் காதல் கொண்டாயா?

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

Jay Jay - Unnai Naan Unnai Naan

Sunday, January 1, 2017

தெய்வம் - குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

பல்லவி
=======

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்



சரணம் 1
========


தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்
தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்

தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை
முருகப் பெம்மானை

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்

சரணம் 2
========

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிக் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

குழு: வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்

கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்

குழு: கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
கந்தனுக்கு வேல்வேல் முருகனுக்கு வேல்வேல்
வேல்முருகா வெற்றி வேல்முருகா அரோகரா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அரோகரா

குழு: வேல்முருகா வெற்றி வேல்முருகா
வேல்முருகா வெற்றி வேல்முருகா

Deivam - Kundrathile Kumaranukku Kondattam

தெய்வம் - வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

பல்லவி
=======

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி

சரணம் 1
========

சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி

நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி

சரணம் 2
========

பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பாண்டி

காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி கந்தா
என்றால் இங்கு வந்தேன் என்று கந்தா
என்றால் இங்கு வந்தேன் என்று சொல்லி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழநி மலையாண்டி

சரணம் 3
========

சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி முருகனின்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பலகோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி

பக்தர்கள் தினந்தோறும் பலர்கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர்கூடி திருப்புகழ்
பாடி வருவார்கள் கொண்டாடி திருப்புகழ்
பாடி வருவார்கள் கொண்டாடி


வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழநி மலையாண்டி பழநி மலையாண்டி பழநி மலையாண்டி

Deivam - Varuvandi Tharuvandi Malaiyandi

பக்திப் பாடல் - விநாயகனே வினைதீர்ப்பவனே

பல்லவி
=======
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே 

சரணம் - 1
=========
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
குறைகள் களைய இதுவே தருணம்
(விநாயகனே)

சரணம் - 2
=========
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய் ஆ ஆ
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினைதீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினைதீர்ப்பவனே

BhakthiBakthi Padalgal - Vinayagan Venai

Followers