Pages

Search This Blog

Saturday, December 31, 2016

பாண்டவர் பூமி - அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம்

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

காற்றும் கூட எங்களுடன்,
இரவினில் தூங்க இடம் கேட்கும்,
மழை துளி கூட என் தாயின்,
மடியினில் தவழ தினம் ஏங்கும்,

நத்தை கூட்டின் நீர் போதும்,
எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம்,
கத்தும் கடலும் கை கட்ட,
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்,

தாயின் மடியில் தினம் இருந்து,
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்,
கனவினில் காலையில் ஒளி பெயர்த்து,
சொல்லி சொல்லி சுகமாய்,
தினம் சிரிப்போம்,

ஐந்தெழுத்து புது மொழியை,
அரிய வைத்தாள் என் அன்னை,
அண்ணன் தங்கை ஐவருமே,
நேசம் கொண்டு தமிழ் மண்ணை,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்,
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்,
ஓற்றை கண்ணில் அடி பட்டால்,
பத்து கண்ணிலும் வலி கண்டோம்,

பள்ளிகூடம் தந்ததில்லை,
பாசம் என்னும் நூல் ஒன்றை,
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை,
எங்கள் கதை போலே வேரொன்றை,

கண்களும் நீர் துளி கண்டதில்லை,
அழுதிட அவைகளும் பழகவில்லை,
கருப்பா சிவப்பா தெரியவில்லை,
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை,

சேகரித்து வைப்பதற்கு,
தேவை என்று எதுவும் இல்லை,
இறைவனுக்கும் எங்களுக்கும்,
இடைவெளிகள் இருந்ததில்லை,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,

அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
அது ஒரு அழகிய நிலா காலம்,
கனவினில் தினம் தினம் உல்லா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொற்காலம்,

Pandavar Bhoomi - Avaravar Vazhkaiyil

பாண்டவர் பூமி - அழகான தடுமாற்றம்

அழகான தடுமாற்றம்,
நிலைகின்றதா?
ஆசைகள் ஒரு மாற்றம்,
அடைகின்றதா?
என்னாச்சு நீ சொல்லடி,

அழகே, நீ அழகாக,
அழகாகிறாய்,
இதயத்தை இடம் மாற்ற,
நாள் பார்கிறாய்,
நீயாக நீ இல்லைடி…

Pandavar Bhoomi - Azhagana Thadu Maatram

பாண்டவர் பூமி - ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி

ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
நாக்க நீட்டி மூக்க தொட்ட ராக்கு முத்து ராக்கு
வெள்ளி கொலுச மாட்ட நீ கெண்ட கால காட்டு
ஆத்து பூத்தி அசுக்கு நான் கால காட்ட மாட்டேன்
கெண்ட காலில் இருக்கும் முடிய கிண்டல் பண்ணி பாப்பே
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
சிலையே நான் வைகை ஆத்தில் மீனும் புடிக்க
வலையா நீ கட்டும் சேலை உருவி தாடி
அ ஆ… மீனு புடிக்கும் வலையா நான் கட்டும் சேலை தந்தா
புடிச்ச மீன போட நீ என் லவுக்க துணிய கேப்பே
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி

கிழக்கால தோப்புக்குள்ள கிளிய புடிக்க
பழுத்தாடும் உன் உதட்ட நீயும் தாடி
சீ போ கிளிய புடிக்க நானும் என் உதட்ட குடுக்க மாட்டேன்
கிளியும் கெடைக்கலேனா உதட்ட கடிச்சு திருப்பி குடுப்பே
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
மலையூத்து தேன நானும் வாங்கி வந்தேன்
தேன் ஊத்த கன்னங்குழி தாடி புள்ள
கன்னக்குழியில் தேனும் ஊத்தி ரொம்பி வழிஞ்சு போனா
நெஞ்சுக்குழியத்தானே கேப்பே ஒன்னும் குடுக்க மாட்டேன்
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
குறும்பான பொண்ணுகிட்ட மனச கேளு
கொடுக்காம போக மாட்டா நீயும் பாரு

பொண்ணோட மனச மட்டும் புடிச்சா போதும்
நீ கேக்காம கேட்டதெல்லாம் கெடைக்கும் பாரு
ஆமா உச்சந்தலையில் இருந்து மாமா உள்ளங்காலு வரைக்கும்
என்ன வேணும் கேளு எல்லாம் அள்ளி அள்ளி தாரேன்
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி
ஏ சம்பா ஏ சம்பா ஏல குறிச்சி
நீ வா சம்பா வா சம்பா எங்கள நெனச்சி

Pandavar Bhoomi - Aei Samba

பாண்டவர் பூமி - சின்ன வயசுல ஓடி புடிச்சேன்

சின்ன வயசுல ஓடி புடிச்சேன்
நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன்
சின்ன வயசுல ஓடி புடிச்சேன்
நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன்
கட்டாந்தரை எல்லாம் கண்கள் சிமிட்டுதே
பட்ட மரம் கூட பாத்து சிரிக்குதே
பழைய நெனவு திரும்புதே
பாவம் மனசு ஏங்குதே
மண்ணு மணக்குதே நெஞ்சு வரைக்கும்
கண்ணு கலங்குதே கள்ளி செடிக்கும்
கொடுக்கா புளி மரமும் கொத்து கொத்தா காய்ச்சிருக்கு
காத்து குத்தி கறி சமைச்ச நாளும் நெனைவிருக்கு
மீண்டும் இளமை திரும்புமா
உதிர்ந்த உறவு பூக்குமா

Pandavar Bhoomi - Chinna Vayasula

பாண்டவர் பூமி - கவிஞன் கவிஞன் பாரதி கேட்டான்

கவிஞன் கவிஞன் பாரதி கேட்டான் காணி நிலத்தில் ஒரு வீடு
கவிஞன் வழியில் நானும் கேட்டேன் கவிதை வாழும் சிறு வீடு
ஒரு பக்கம் நதியின் ஓசை
ஒரு பக்கம் குயிலின் பாஷை
இளம் தென்னையின் கீற்று ஜன்னலை உரசும் திருவீடு
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பிவிட
தென்றல் வந்து வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம் வரையும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறதிறதிற திறனா
தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறதிறதிறதிற திறனா

கனா கண்டு தூங்கும் வரையில் நிலா வந்து கதைகள் சொல்ல
கண்ணாடி முற்றம் ஒன்று வேண்டுமே
மின்னல் வந்து தீண்டும் போது வெட்கம் வந்து மூடிக்கொள்ள
கண் படாத ஜோடி ஒன்று வேண்டுமே
பறந்தோடும் பறவை கூட்டம் இரவோடு தங்கி செல்ல
மரகத மாடம் ஒன்று வேண்டுமே
கொலுசொலியும் சிரிப்பொலியும் எதிரொலித்து எதிரொலித்து இசை வரணும்
இந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி
வீசும் காற்றில் ஆயுள் கூடும்படி
பேசும் வார்த்தை கவிதை ஆகும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

கொடைக்கானல் மேகம் வந்து மொட்டை மாடி மேலே நின்று
குடிதண்ணீர் பொழியும் வண்ணம் வேண்டுமே
வாழ்ந்தவர்கள் கதையை சொல்லி வருங்கால கனவை எண்ணி
ஊஞ்சலாட திண்ணை ஒன்று வேண்டுமே
தலைமுறை மாறும்போது பரம்பரை தாங்கும் வண்ணம்
தங்கமணி தூண்கள் ஏழு வேண்டுமே
சிலர் நினைவாய் பெரும் கனவாய்
அரண்மனையாய் அதிசயமாய் இது வருமோ
நல்லோர் கண்கள் கண்டு போற்றும்படி
பொல்லார் மனசும் நின்று வாழ்த்தும்படி
எல்லா உறவும் வந்து வாழும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பிவிட
தென்றல் வந்து வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம் வரையும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

Pandavar Bhoomi - Kaviyan Kaviyan Bharathi

பாண்டவர் பூமி - மலர்களை படைத்த இறைவனும்

மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
மனதினில் காதலை பதியம் போட்டவன்
ஏனோ பயத்தையும் விதைத்து விட்டான்
இது நியாயமா உயிர் தாங்குமா
நீ வா பெண்ணே தடைகளை தாண்டி
பஞ்சாங்கத்தின் பழைய கணக்கை மாத்தி
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்

பெண்ணை ஒரு பூவென்று சொல்லி வைத்த பொய் இன்று
என் காதலை கொல்லுதே
தலைமுறைகள் போனாலும் வரைமுறைகள் போகாமல்
தடை போடுதே நியாயமா
காதலை கண்ணுக்குள் அடைத்து ஏனடி என்னை கொன்றாய்
புத்தனும் மண்ணுக்குள்ளே போனதை நீயும் உணர்வாய்
காதலும் உயிர் பெற்றால் பகை தோன்றுதே
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
மனதினில் காதலை பதியம் போட்டவன்
ஏனோ பயத்தையும் விதைத்து விட்டான்

காதல் ஒரு நோயென்றால் குணப்படுத்த யார் வந்தார்
விடையேதுமே இல்லையே
காதல் ஒரு தீயென்றால் சுட்ட வடு யார் கண்டார்
தடமேதுமே இல்லையே
வேடனிடம் கூண்டு கிளிகள் விருப்பத்தை சொல்லவும் இல்லை
பெண்ணே நீ ஊமையும் இல்லை இருந்தும் ஏன் பேசிடவில்லை
காதலும் உயிர் பெற்றால் பகை தோன்றுதே
மலர்களை படைத்த இறைவனும் ஏனோ
முட்களின் நடுவே மலரவிட்டான்
மனதினில் காதலை பதியம் போட்டவன்
ஏனோ பயத்தையும் விதைத்து விட்டான்
இது நியாயமா உயிர் தாங்குமா
நீ வா பெண்ணே தடைகளை தாண்டி
பஞ்சாங்கத்தின் பழைய கணக்கை மாத்தி

Pandavar Bhoomi - Malargalai Padaitha

பாண்டவர் பூமி - தாயே உன்னை இத்தனை காலம்

தாயே உன்னை இத்தனை காலம் எப்படி பிரிந்து வாழ்ந்தேனோ
கால் பட்ட இடமெல்லாம் கருவறை போல தாங்கிக்கொண்டது நீதானோ
நீரும் நிழலும் உணவும் தந்து உயிரை காத்தாய் நீ
வேண்டாம் என்று என்னை நீயும் தள்ள மாட்டாய் நீ
மரம் செடி போல் மனிதனையும் வளர்த்து காத்தவள் நீதானே

ஐவகை நிலங்களை அங்கங்கள் ஆக்கி அழுக்களை கூட சுமக்கின்றாய்
கோல வடிவில் சுமைதாங்கியாகி ஒய்வே இன்றி சுற்றுகிறாய்
உன்னை விட்டால் வாழ்வெது
உன்னை போலே உறவேது
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இருந்தாலும் இறந்தாலும்
நிலையான சொந்தம் நீதானே
உன்னை இனியும் பிரியேனே
உன்னை இனியும் பிரியேனே

Pandavar Bhoomi - Thaye Unnai

Followers