Pages

Search This Blog

Friday, December 30, 2016

தாமிரபரணி - தாலியே தேவ இல்ல

தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீதானே

அடி சிறுக்கி
நீதான் என் மனசுக்குள்ளெ
அட கிருக்கி
நீதான் என் உசுருக்குள்ளெ
உன்ன நெனச்சு
நான் நடந்தேன் என் ஊருக்குள்ளெ
என்ன உருக்கி

தாலியே தேவ இல்ல
நான் தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரி பாதி
ஆஹ் ஆஹ்…

ஆஹ் ஆஹ்…

பத்து பவுனு பொன் எடுத்து
கங்கு குள்ள காய வெச்சு
தாலி ஒன்னு செய்ய போறேன்
மானே மானே
நட்ட நடு நெத்தியிலெ
ரத்த நெர பொட்டுவெச்சு
உன் கை புடிச்சு ஊருக்குள்ளெ
போவேன் நானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
மனசுல மனசுல மயக்கம்
இது என்ன
இது என்ன
கனவுல கனவுல கொழப்பம்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான்
அட கிருக்க
நான் உனக்காக பொறந்தவடா
அட கிருக்க
நான் உனக்காக அலைஞ்சவடா
உன்ன நெனச்சு
ஆஹ் ஒஹ்..
ஆஹ் ஒஹ்..

தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
ஆஹ் ஆஹ்…

எட்டு ஊரு சந்தையில
எம்பது பேர் பாக்கையில
உன்ன கட்டி புடிச்சு கடிக்கபோறேன்
நானே நானே
ஹே குற்றவியல் நீதிமன்ற
கூண்டுகுள்ளெ நிக்கவெச்சு
கேசு ஒன்னு போட்டுருவேன்
மானே மானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
எனக்கிப்போ பிடிக்கிது உன்ன
இது என்ன
இது என்ன
நான் எத்தன தடவ சொன்னேன்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான் ஹோ..
அடி சிருக்கி
நீ தாய் மாமன் சீதனமே
உன்ன நெனச்சு
நான் முழுசாக தேயணுமே
என்ன உருக்கி
ஒஹ் ஹோ…

தாலியே தேவ இல்ல
நாந்தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

Thaamirabharani - Thaaliyae Thevaiyillai

வருஷம் 16 - பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்

கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
பந்தங்கள் யாவும் தொடர்கதைபோல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெய்கின்ற இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விலங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திலைத்திட
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்

கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

Varusham 16 - Pazhamuthir Cholai

வசூல் ராஜா M.B.B.S - சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
எவ்விடத்தில் காய்ச்சல் உண்டோ
அவ்விடத்தில் முத்தம் இட்டா
பிடிச்ச நோய் ஓடி போகும்
உச்சியிலே துடி துடிச்சா
உடம்புகுள்ளே உடுக்கடிசா
பிடிச்ச பேய் ஓடி போகும்
வாய்த்து மட்டும் நிறைச்சி கிட்டு
நான்கு புலன் பட்டினியா
கெடந்தா யாருக்கு லாபம்
லஞ்சுகொரு மஞ்சுளாவும்
டின்னருக்கு வென்னிலாவும்
இருந்த இளமைக்கு யோகம்
உலகம் இன்பதுக்கு ஏங்கி கெடக்கு
ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறி கெடக்கு
தப்புகள் இல்லயென்றால் தத்துவம் இல்லையடா
தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்
என்னுடய தேகம் இது
எங்கு எப்போ வெக்கப்படும்
என்னை ஒரு வாட்டி கேளு
அர்த்தமில்லா வார்தைகளின்
அர்த்தங்களை அறியணுமா
அதுக்கு இதுதான்டா ஸ்கூலு
வேலி கட்டி வெச்சாலும்
வெள்ளை தொல்லை பாத்துபுட்ட
கடத்த துடிக்குதடா காலு
மங்கில இருந்து
ஒரு மனுச பையன் வந்தாலும்
இன்னும் போகலயே வாலு
ஓடும் தண்ணியில பாசியில்லையே
உணர்ச்சி கொட்டி புட்டா நோயும் இல்லயே
வாழ்கை வாழ்வதெற்கே ஜெமினி எடுத்த படம்
அத நான் உனக்கு மட்டும் காட்ட போறேன்டா
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்

சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய மட்டும் தேன் போன டோய்
விடிஞ்ச பின்னே விடிஞ்ச பின்னே கானா போன டோய்

Vasool Raja MBBS - Siruchi Seena Thana

வேதம் புதிது - கண்ணுக்குள் நூறு நிலவா

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(சம்பசாம்பவி சந்ரமௌளிதகலா
வர்ண உமா பார்வதி
காளி பைபவத்தீ ஷிவற்றி நயன
காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயுவன சுபகாரி
சாம்ராஜ்ய லட்ஷ்மிப்ரதா…)

தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா

வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(பூவே…பெண் பூவே…
இதில் என்ன அதிசயம், இளமையின் அவசியம்
இது என்ன ரகசியம், இவன் மனம் புரியலயா ? )
ஆணின் தவிப்பு அடங்கி விடும்
பெணின் தவிப்பு தொடர்ந்து விடும்

உள்ளம் என்பது உள்ளவரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது

ரெண்டா ? ஏது ? ஒன்று பட்ட போது..

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை

ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்தை வருமா

கண்ணுக்குள் நூறு நிலவா, இது ஒரு கனவா

கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

Vedham Pudhithu - Kannukkul Nooru

வீரா -ஆத்துல அன்னக்கிளி

ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
என்னை ஏன் தொறத்துன மனச ஏன் வருத்துன
உனக்கு நா ஒருத்துனா எப்பவும் இருப்பனா
அடி அச்சாரம் போடாம ஆடுதடி லோலாக்கு
பூங்கலத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது
பூங்கலத்து ஏன் ஆடுது உன் பொன் உடம்பு ஏன் வாடுது
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி
ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ மஞ்ச குளி

Veera - Aathile Annakili

வீரா - மாடத்திலே கன்னி மாடத்திலே

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே 
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை

ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை

ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு (இசை)

பெண்குழு : மாமா எண்ணெய் தேய்க்கலாமா ஆண்குழு-1: ஓ...ஓ..
பெண்குழு : மாமி காத்திருக்கலாமா
ஆண்குழு-1: ஓ...ஓ..

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு சிக்கு சக்கு சிக்கு சக்கு 

***

ஆண் : டாலடிக்கிற நல்ல வைர ஆட்டி
போலிருக்கிற நீதான் ரொம்ப சுட்டி ஆ.ஹா..ஓஹோ..ஏஹே ஹேஹே..

பெண் : ஆசை வைக்கிறேள் இப்ப ரொம்ப நன்னா
மாலையிட்டதும் மாறக் கூடாதுன்னா

ஆண் : பூ நூலே சாட்சி பொம்மனாட்டி ஆட்சி
ஸ்ரீ கிருஷ்ணன் நானால்லடி

பெண் : இப்போது பார்ப்பேள் என் பேச்சை கேட்பேள்
பின்னால என்னாவேனோ..

ஆண் : ஆன போதும் இங்கு ஆத்துக்காரி
ரொம்ப கண்ட்ரோல் பண்ணா கண்ட்ரோல் ஆகாதடி

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை

ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி வாடின்னா...

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு (இசை)

இரு குழு : ம்..ஹும்..ஹுஹுஹும்..ம்..ஹும்..ஹுஹுஹும்..
ம்..ஹும்..
பெண்குழு : ஆ..ஆ..ஆ...ஆ...

***

ஆண் : அட்ஜஸ் பண்ணி கூட நீ இருப்பியோ
அடங்காத அலமு போல் இருப்பியோ ஆஹா..ஓஹோ..ஹா.ஹா.ஹா.

பெண் : சட்ட திட்டம் தான் கையில் வச்சிருப்பேளே
ஃபாளோ பண்லேனா நீங்க என்னை நச்சரிப்பேளா

ஆண் : மத்யான நேரம் பாய் போட சொன்னா
மாட்டேன்னு சொல்லுவியோ..ஹா..

பெண் : மாட்டேன்னு சொன்னா சும்மாவா விடுவேள்
மேட்னி ஷோ கூப்பிடுவேள் ஏன்னா

ஆண் : நாளை சங்கதி நாளை பார்க்கலாம்
மானே இப்போ வாடி அணைச்சிக்கலாம்

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளை

ஆண் : மாமி சின்ன மாமி மடிசார் அழகி வாடி சிவகாமி 

இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 
இரு குழு : டிங்கு டாங்கு டிங் ஆண்குழு-1: சக்கு 

ஆண் : மாடத்திலே கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு ஐயர் ஆத்துப் பொண்ணு

பெண் : கூடத்திலே நடு கூடத்திலே
ராஜா போல ஐயர் ஆத்து பிள்ளே..

Veera - Maadathileh Kanni

வீரா - வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்

ஆண் : வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

பெண் : வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண் : முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்

பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்

ஆண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்

பெண் : வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

***

பெண் : விடவே மாட்டேன் வா மாமா

ஆண் : ஆ..வரலாமா வரலாமா வரலாமா

பெண் : அது தான் கேட்டேன் தா மாமா

ஆண் : ஹா..தரலாமா தரலாமா தரலாமா

பெண் : ஓஹோ.ஹோ… விடவே மாட்டேன் வா மாமா
அதுதான் கேட்டேன் தா மாமா
நடுச்சாமம் ஆனாக்க தூக்கமில்லை

ஆண் : ஹா.ஹோஆஹா

பெண் : நடுச்சாமம் ஆனாக்க தூக்கமில்லை
அட நீயுந்தான் ஏனின்னு கேக்கவில்லை

ஆண் : ஹா.. ஊத காத்து பட்டாலே

பெண் : ஹா..கொதிக்காதா கொதிக்காதா கொதிக்காதா

ஆண் : மாமன்காரன் தொட்டாலே

பெண் : ஹும்.. குளிராதா குளிராதா குளிராதா

ஆண் : ஓ..ஓ..ஓ....ஊத காத்து பட்டாலே
மாமன்காரன் தொட்டாலே
கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல

பெண் : ஹா..ஹோ..ஹா..

ஆண் : கொதிப்பேறிச் சூடேறும் மெல்ல மெல்ல
மனம் குஷி ஏறி கூத்தாடும்
சொல்லச் சொல்ல

பெண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்

ஆண் : ஆ..ஹா….
வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ ஹா…

***

ஆண் : புதுசா சுட்ட பணியாரம்

பெண் : ஹா..எடுத்துக்கோ எடுத்துக்கோ எடுத்துக்கோ

ஆண் : கடிச்சா கொஞ்சம் பசியாறும்

பெண் : ஹ..கடிச்சுக்கோ கடிச்சுக்கோ கடிச்சுக்கோ

ஆண் : ஓ..ஓ..ஓ.. புதுசா சுட்ட பணியாரம்
கடிச்சா கொஞ்சம் பசியாறும்
சுட சுட இப்பவே தந்திடணும்

பெண் : ஹா.. ஹோ.. ஹா..

ஆண் : சுட சுட இப்பவே தந்திடணும்
கை பட பட பக்கத்தில் வந்திடணும்

பெண் : வெடலப் பொண்ண கண் வச்சு

ஆண் : ஹா.. வளைக்கட்டா வளைக்கட்டா வளைக்கட்டா

பெண் : உரசி கொஞ்சம் கை வச்சு

ஆண் : ஆஹா புடிக்கட்டா புடிக்கட்டா புடிக்கட்டா

பெண் : ஓஹோ..ஹோ.. வெடலப் பொண்ண கண் வச்சு
உரசி கொஞ்சம் கை வச்சு

பெண் : வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கைய்யா

ஆண் : ஹா..ஹோ..ஹ.ஹா..

பெண் : வலிக்காம தேனள்ளி குடிச்சுக்கைய்யா
மிச்ச விஷயத்த ஒழுங்காக முடிச்சுக்கைய்யா

ஆண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்

பெண் : வாய்யா வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ

ஆண் : ஓ..முந்திபோட்டு கொஞ்சுறபோது
பந்தி ஒண்ணு வைக்க வேணும்

பெண் : அந்தியில கொஞ்சுற கொஞ்சல்
சுந்தரிக்கு முந்திரிப் பந்தல்

ஆண் : எடம் பாத்து அடிச்சா கண்ணு…
தக்கிட ..தகதிமி தகஜுனுதோம்

ஆண் : வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்
நீயும் போட்டுக்கோ
உதட்டில் செகப்பு பத்தலயின்னா
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ....

Veera - Vaadi Vethala Paakku

Followers