Pages

Search This Blog

Friday, December 30, 2016

தில் - உன் சமையல் அறையில்

உன் சமையல் அறையில்,
நான் உப்பா சக்கரையா?

நீ படிக்கும் அறையில்,
நான் கண்களா புத்தங்களா?

உன் சமையல் அறையில்,
நான் உப்பா சக்கரையா?

நீ படிக்கும் அறையில்,
நான் கண்களா புத்தங்களா?

நீ விரல்கள் என்றால்,
நான் நகமா மோதிரமா?

ஆ, நீ இதழ்கள் என்றால்,
நான் முத்தமா புன்னகையா?

ஆ, நீ அழகு என்றால்,
நான் கவியா ஓவியனா?

உன் சமையல் அறையில்,
நான் உப்பா சக்கரையா?

நீ படிக்கும் அறையில்,
நான் கண்களா புத்தங்களா?

நான் வெட்கம் என்றால்,
நீ சிவப்பா கன்னங்களா?

நான் தீண்டல் என்றால்,
நீ விரலா ஸ்பரிசங்களா?

ஆ, நீ குழந்தை என்றால்,
நான் தொட்டிலா தாலாட்டா?

நீ தூக்கம் என்றால்,
நான் மடியா தலையணையா?

ஆ, நான் இதயம் என்றால்,
நீ உயிரா துடிதுடிப்பா?,

உன் சமையல் அறையில்,
நான் உப்பா சக்கரையா?

நீ படிக்கும் அறையில்,
நான் கண்களா புத்தங்களா?

நீ விதைகள் என்றால்,
நான் வேரா விளைநிலமா?

ஆ, நீ விருந்து என்றால்,
நான் பசியா ருசியா?

நீ கைதி என்றால்,
நான் சிறையா தண்டணையா?

நீ மொழிகள் என்றால்,
நான் தமிழா ஓசைகளா?

நீ புதுமை என்றால்,
நான் பாரதியா? பாரதிதாசனா?
நீ…

நீ தனிமை என்றால்,
நான் துணையா தூரத்திலா?

நீ துணைதான் என்றால்,
நான் பேசவா யோசிக்கவா?

நீ திரும்பி நின்றால்,
நான் நிற்கவா போய்விடவா?

நீ போகிறாய் என்றால்,
நான் அழைக்கவா அழுதிடவா?

நீ காதல் என்றால்,
நான் சரியா தவறா?

உன் வலதுகையில் பத்து விரல், (பத்து விரல்)
என் இடதுகையில் பத்து விரல், (பத்து விரல்)
தூரத்து மேகம்,
தூரல்கள் சிந்த,
தீர்த்த மழையில்,
தீ குளிப்போம்…

Dhill - Un Samayal Arayil

தூள் - அறுவா மீசை கொடுவா பார்வை

அறுவா மீசை கொடுவா பார்வை
ஆறுமுகந்தான் கைய வச்சா தூள்
கடவா பல்லு கங்கப்பல்லு 
அடுத்த பல்லு சிங்கப்பல்லு தூள்
ஏய் போடா வெண்ணை போட்டி இன்னா
சொல்லியடிப்பேன் தூள்
ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை
வாடா நைனா தூள் தூள் தூள்
(கொடுவா..)

கண்டைக்காய் வெண்டைக்காய் பொண்ணுங்க நடுவே
சூரக்காய் உடைச்சு ஜெயிச்சாக்கா தூள்
குண்டக்கா மண்டக்கா பேச்சுக்கு எதிரே
கண்டிப்பா கோட்டையை புடிச்சாக்கா தூள்
கட்டபொம்மன் பேரண்டா தொட்டதெல்லாம் தூள்
காட்டு தேக்கு தேகம்டா கெட்டப் எல்லாம் தூள்
ஏய் அட்ரா சக்கை அட்ரா சக்கை
வாடா நைனா தூள் தூள் தூள்
தூள் தூள்..
(கொடுவா..)

மானுக்கு கெம்புடா யானைக்கு தந்தம்டா
மக்களின் பெருமை அன்புடா தூள்
சிங்கம்னா சீறும்டா சிறுத்தையின்னா பாயும்டா
என்னோட பலமெல்லாம் வீரம்டா தூள்
சூரக்கோட்டை கோனியிலே குடையிருந்தா தூள்
தாகம் வந்தா கேணியிலே தண்ணி இருந்தா தூள்
காலம் உன்னை ஏணியிலே ஏத்தி வைக்கும் தூள்
(கொடுவா..)

Dhool - Aruvaa Meesai

தூள் - மதுரை வீரன் தானே

மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே…
என் பேராண்டி மதுரை வீரன் தானே

ஏ….சிங்கம் போலே!
ஏ…சிங்கம் போலே நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு
ஏ சியான் சியான் சிலுக்கு இவனை
புத்தூருக்கு அனுப்பு

ஏ புலியைப் போல
ஏ புலியைப் போல துணிஞ்சவண்டா எனங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல 
பிச்சு வீசப் போறாண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல 
பிச்சு வீசப் போறாண்டி
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ இந்தா ஏ இந்தா
ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!

ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா!
அ அ அ அ..
ஏ சூறாவளி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
ஏ சூறாவளி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
ஏ சூறாவாளி காத்தை போல சுழன்று வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்களெல்லாம்
மிரண்டு போறாண்டி
ஏ…தில்லா டாங்கு டாங்கு ..
சும்மா திருப்பி போட்டு வாங்கு!
ஏ கோவில் பட்டி முறுக்கு
சும்மா குனிய வச்சி முறுக்குடா டேய்..

ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்களை பனைமரமா பிடுங்கி
இப்போ வீசப் போறாண்டி
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..
ஏ கும்தலக்கடி கும்மா
அடி விட்டான் பாரு யம்மா..

Dhool - Madurai Veeran

தூள் - ஆசை ஆசை இப்பொழுது பேராசை

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது

மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது
மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

தலை முதல் கால்வரை இப்பொழுது நீ?
தவறுகள் செய்வது எப்பொழுது

ஓ?..இடைவெளி குறைந்தது இப்பொழுது உன்?
இதழ்களை துவைப்பது எப்பொழுது

அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை
ஆடுதான் மேய்வது எப்பொழுது

திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ?
எனக்குள் தொலைவது எப்பொழுது

ஆசை ?.ஆசை?ஆசை?.ஆசை? ஆசை?..
ஆசை?ஆசை?.ஆசை..

பூல்வெளி ஆகினேன் இப்பொழுது நீ?
பனித்துளி ஆவது எப்பொழுது

ஓ..கொட்டும் மழை நான் இப்பொழுது உன்?
குடிநீராவது எப்பொழுது

கிணற்றில் சூரியன் இப்பொழுது உன்?
கிழக்கில் உதிப்பது எப்பொழுது

புடவை கருவில் இப்பொழுது நீ?புதிதாய் பிறப்பது எப்பொழுது

ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் இப்பொழுது

கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது
காயம் தீரும் காலம் எப்பொழுது
மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது

மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதிப்பாய் நீ?எப்பொழுது

Dhool - Aasai Aasai

ஜெயம் கொண்டான் - நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே மலருகின்றதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக

தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்
என்னில் என் கால்களில்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சும்
கொஞ்ச தங்கும் நெஞ்சே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

Jayamkondaan - Naan Varaindhu Vaitha

ஜி - திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ

திருட்டு திருட்டு ..... 
திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ 
திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா 

திருட்டு திருட்டு ..... 
திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ 
திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா 

ஹோய் கிறுக்கு கிறுக்கு ....
கிறுக்கு சிரிக்கி கிட்ட நெருங்கட்டா 
என் உதட்டினாலே சாவி போட்டு உள்ளே திருடட்டா 

திருட்டு ராஸ்கல்..
திருட்டு ராஸ்கல்..
திருட்டு ராஸ்கல்..
ஏய் திருட்டு ராஸ்கல்..

திருட்டு திருட்டு ..... 
திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ 
திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா 

வடை வச்சு சுண்டி இழுக்கிறே 
கலர் கலரா சரக்கு அடிக்கிறே 
கை பட்டு குடுக்க மறுக்குற 
ஏண்டி ஏண்டி 

தப்பான பார்வை பாக்குற 
துப்பரஞ்சி தடயம் எடுக்கிற 
அப்பாவாக துடிக்கிற ...... 
எண்டா எண்டா 

நீ தேக்குமர கட்டையா 
நான் பூட்டுகிற சட்டையா 
என் ரத்தத்தில தீய மூட்டி 
போட்டுக்கிற அட்டையா 

ஏணி போட்டு என் மனசை எட்டி பார்க்க வேண்டாம்டா 
சீனி போட்ட இடியாப்பா .......சிக்கல் எனக்கு நீ தான்டி

திருட்டு ராஸ்கல்..
திருட்டு ராஸ்கல்..
ஏய் திருட்டு ராஸ்கல்..


திருட்டு திருட்டு ..... 
திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா நீ 
திருடும் பொருளே திருட சொல்லுது திருடி போயேன் டா 


திருகாணி கலந்து ஓடவும் 
தலைகாணி கேலி செய்யவும் 
தனியா -நீ நினைச்சி சிர்ரிகவும் ...... 
வரவா வரவா 

ஒ 
கண்ணால உளவு பார்க்கவும் 
கையாள அளவு பார்க்கவும் 
செலவெல்லாம் வரவு பார்க்கவும் 
வாடா வாடா 

நீ காரைகுடி பங்களா 
நான் கட்டிக்கிறேன் சிங்குளா 
உண் ஜாக்கெட்டு ஜன்னலுக்கு 
மேரி பூவேன் பூக்களா 
கட்டம் போட்ட பாவடை 
வட்டம் போடுது உன்னால 
கல்ல போட்ட குளம் போல 
கலங்கி போனேன் உன்னால 

திருட்டு ராஸ்கல்..
திருட்டு ராஸ்கல்..
ஏய் திருட்டு ராஸ்கல்.

Ji - Thiruttu Rascal

ஜி - டிங்க் டாங்க் கோவில் மணி

டிங்க் டாங்க் கோவில் மணி… கோவில் மணி நான் கேட்டேன்

உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

நீ கேட்டது ஆசையின் எதிரொலி ………

ஆ… நீ தந்தது காதலில் உயிர் வலி

டிங்க் டாங்க் கோவில் மணி… கோவில் மணி நான் கேட்டேன்

உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

சொல்லாத காதல் சொல்லும் ….சொல்லாகி வந்தேன்
நீ பேச …என நீ பேச

சொல் ஏது… இனி நான் பேச..

கனவுகளே கனவுகளே பகல் இரவு நிகழ்கிறதே..

ஆ……இதயத்திலே உன் நினைவு இரவு பகல் ஆள்கிறதே

சற்று முன்பு நிலவரம் எந்தன் நெஞ்சில் ..கலவரம்… கலவரம்

ஆ… டிங்க் டாங்க் கோவில் மணி… கோவில் மணி நான் கேட்டேன்

உன் பெயர் என் பெயரில் சேர்ந்து போல் ஒலி கேட்டேன்

புல் தூங்கும்.. பூவும் தூங்கும்…புது காற்றும் தூங்கும்
தூங்காதே நாம் கண்கள் தான்…

ஏங்காதே இது காதல் தான்..

பிடித்த நிலா பிடிக்கவில்லை பிடிக்கிறது உன் முகம் தான்….

இனிக்கும் இசை இனிக்கவில்லை இனிக்கிறது உன் பெயர் தான்…

எழுதி வைத்த சித்திரம் என் நெஞ்சில் பத்திரம்… பத்திரம்

ஆ…டிங்க் டாங்க் கோவில் மணி… கோவில் மணி நான் கேட்டேன்

உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்

நீ கேட்டது ஆசையின் எதிரொலி ………

ஆ… நீ தந்தது காதலில் உயிர் வலி

Ji - Ding Dong

Followers