Pages

Search This Blog

Friday, December 30, 2016

வேலைக்காரன் - வா வா வா கண்ணா வா

வா வா வா கண்ணா வா
வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா

உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்
தொடத் தொட தொடர்கதை தான் தனிமையில்
உனக்கொரு சிறுகதை நான்
தொடத் தொட தொடர்கதை தான்
உருகி உருகி இதைப் படித்திட
வா வா வா வா கண்ணா வா
வா வா வா

வானில் காணும் வானவில்லின் வண்ணம் ஏழு வண்ணமோ
தோகை உந்தன் தேகம் சூட மேகமாலை பின்னுமோ

காணும் இந்த பூக்கள் மேலே காயம் என்ன காயமோ
காற்சலங்கையோடு வண்டு பாடிச் சென்ற மாயமோ

நூறு நூறு தீபமாய் வானில் அங்கு கார்த்திகை
வாழும் காதல் சின்னமாய் ஆகும் எங்கள் யாத்திரை

நாலு கண்கள் பாதை போட
நாகரீகம் தொடர்ந்தது

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா

எனக்கொரு சிறுகதை நீ இனிமையில்
தொடத் தொட தொடர்கதை நீ தனிமையில்
எனக்கொரு சிறுகதை நீ
தொடத் தொட தொடர்கதை நீ
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா

ஆசையோடு பேச வேண்டும் ஆயுள் இங்கு கொஞ்சமே
ஆவலாக வந்த பின்னும் தஞ்சம் இந்த நெஞ்சமே

ஆசை கொண்ட தேகம் ரெண்டு நீதி மன்றம் போகுமே
பேசத் தேவை இல்லை என்றே அங்கு தீர்ப்பு ஆகுமே

ராக வீணை போலவே நானும் வந்து போகவோ
தேகம் வீணை ஆகவே தேவ கீதம் பாடவோ

நானும் நீயும் காதல் கைதி
எண்ண எண்ண இனிக்குது

வா வா வா அன்பே வா
தா தா தா அமுதம் தா

காளிதாசன் காண வேண்டும் காவியங்கள் சொல்லுவான்
கம்ப நாடன் உன்னை கண்டு சீதை என்று துள்ளுவான்

ஜாஜஹானை பார்த்ததில்லை நானும் உன்னை பார்க்கிறேன்
தாகம் கொண்ட தேகம் ஒன்று பாடும் பாடல் கேட்கிறேன்

தாஜ்மஹாலின் காதிலே ராம காதை கூறலாம்
மாறும் இந்த பூமியில் மதங்கள் ஒன்று சேரலாம்

பாதி நீயும் பாதி நானும்
ஜோதியாக இணைந்திட

வா வா வா வா கண்ணா வா
தா தா தா தா கவிதை தா

எனக்கொரு சிறுகதை நீ

இனிமையில்

தொடத் தொட தொடர்கதை நீ

தனிமையில்

எனக்கொரு சிறுகதை நீ…ஆ…
தொடத் தொட தொடர்கதை நீ…ஆ…
உருகி உருகி உனைப் படித்திட
வா வா வா அன்பே வா
வா வா வா

Velaikaran - Va Va Va Kanna

வென்னிலா கபடி குழு - லேச பறக்குது மனசு மனசு

காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருனம் தருனம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

சுண்டெலி வளையில நெல்லப் போல
அந்த உன் நெனப்ப எனக்குள்ள சேர்க்கிற
அள்ளிப் பூ கொளத்துல
கல்ல போல் அந்த
கண் விழி தாக்கிட
சுத்தி சுத்தி நின்ன

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேச நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல

தத்தி தத்தி போகும்
காய்ச புல்ல போலே
பொத்தி வெச்சி தானே
மனசு இருந்ததே
திருவிழா கூடத்தில்
தோலையுர சுகமா

தொண்ட குழி தாண்டி
வார்த்தை வர வில்ல
என்னனெவோ பேச
உதடு நெனச்சது
பார்வையை பார்த்ததும்
இதமா பதறுது

ராதிரி பகல தான்
நெஞ்சில ராட்டினம் சுத்துதடி

பூடின வீடில தான்
புதுச பட்டாம் பூசி பறக்குதட

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

லேச பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல

பூவா விறியுர உலகம் உலகம்
தரிசா கெடந்தது இது வரை

ஒத்த மரம் போல
செத்து கெடந்தனே
உன்ன பார்த்த பின்ன
உசுரு பொழச்சது

சொந்தமா கெடப்பியா
சாமிய கேட்பேன்

ரெட்ட ஜடை போட்டு
துள்ளி திரிஞ்சேனே
உன்ன பார்த்த பின்னே
வெட்கம் புரிஞ்சதே

உனக்கு தான்
உனக்கு தான்
பூமியில் பொறந்தேன்

காவடி சுமப்பது போல்
மனசு காதல சுமக்கதுடா

கனவுல நீ வருவ
அதனால் கண்ணு தூங்குதடி

கருசாங்குருவிக்கு மயக்கம் மயக்கம்
கனவுல தெனமோ மெதக்கும் மெதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை
இடிக்கும் இடிக்கும்

Vennila Kabadi Kuzhu - Lesa parakkathu

வெற்றி விழா - தத்தோம் தளாங்கு தத்தோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…
தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
இரவில் உன்னோடு நர்த்தனம் தான்
இடையில் உண்டாகும் சத்தம்
உறவில் முன்னூறு கீர்த்தனம் தான்
இதழில் கொண்டாடும் முத்தம்

சுதந்திரம் தினம் தினம் தான்
நிரம்தரம் சுகம் சுக ம்தான்
நலம் பெறும் மனம் மனம் தான்
வலம் வரும் நகர்வலம் தான்

இணையத்தான் இணையத்தான்
அணையத்தான் அணையத்தான்

ஒரு அத்தான் ஒரு அத்தான்
உருகத்தான் உருகத்தான்

திசை எட்டும் இசை எட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்…
தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…
தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
கழுவும் தண்ணீரில் நழுவிடுமே
வலையில் சிக்காத மீன்கள்
தடைகள் இல்லாமல் தாவிடுமே
தடைகள் கொண்டாடும் மான்கள்

சிறையினில் பறவைகள்தான்
சிறகினை விரித்திடத்தான்
பிறந்தது துணிச்சலுந்தான்
பறந்திடும் இருப்பிடம்தான்

இதயத்தில் துணிவைத்தான்
குடி வைக்கும் குடி வைக்கும்

எதிரிக்கும் உதிரிக்கும்
வெடி வைக்கும் வெடி வைக்கும்

திசை எட்டும் கொடி கட்டும் தாளங்கள் முழங்கட்டும் ஹோய்…
தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்
மிருதங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் தகதோம்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்
கனியை தாங்கும் கொடியாய் தாங்கும் தகதோம்….

தழுவட்டும் தழுவட்டும்
இளவட்டம் இளவட்டம்
பரவட்டும் பரவட்டும்
இசை வெள்ளம் பரவட்டும்
இமயத்தின் முடிமட்டும் இளமைதான் கொடி காட்டும் ஹோய்…

தத்தோம் தளாங்கு தத்தோம்
தொட்டும் தொடாமல் தொட்டோம்

தத்தோம் தளாங்கு தத்தோம்
பட்டும் படாமல் பட்டோம்

Vetri Vizha - Thathom Talangu

வெற்றி விழா - பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

தீர்த்த கரை ஓரத்திலே

தேன்சிட்டுகள் உள்ளதிலே

கல்யாண வைபோகம்தான்

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோக பண் பாடுதே
மேலை காற்றோடு கை சேத்து நாணல்
காதல் கொண்டாடுதே

ஆலம் விழுதோடு கிளி கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈர சிறகோடு இசை பாடி திரியும்
நேரம் இதுவல்லவா

ஏதேதோ எண்ணம் தோன்ற ஏகாந்தம் இங்கே

நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே

வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்

ஆசைகள் ஈடேர கூடும்

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரிதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

நீல வான் கூட நிறம் மாறி போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

ஓயாமல் உன்னை கொஞ்சும்
ஊதாபூ வண்ணம்

ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாபூ கன்னம்

வாடை தீண்டாத வாழை தோட்டம்

ஆனந்த எல்லைகள் காட்டும்

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

தீர்த்த கரை ஓரத்திலே

தேன்சிட்டுகள் உள்ளதிலே

கல்யாண வைபோகம்தான்
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

Vetri Vizha - Poongatru Un Peru Solla

வேட்டையாடு விளையாடு - வென்னிலவே வெள்ளி வெள்ளி நிலவே

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே….

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிகொண்டு வந்தாய்..

உலகத்தின் கடைசி நால்
இன்று தான்…என்பதுபோல்
பேசி பேசி தீர்த்தபின்னும்
ஏதோ ஒன்று குறையுதே…

உள்ளே ஒரு சின்னசிறு
மரகத மாற்றம் வந்து
குறுகுறு மின்னல் என்ன
குறுக்கே ஓடுதே…

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்
வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்..

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே…

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர்
நடக்கிறார் நடக்கிறார்
அஹ் ..மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது மழை
நனைகிறார் நனைகிறார்

யாரோ யாரோ யாரோ அவள்
ஹே..யாரோ யாரோ யாரோ அவன்
ஒரு கோடும் கோடும் வெட்டிகொள்ள
இரு தண்டவாளம் ஒட்டி செல்ல…

வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்
வென்னிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திர பட்டாளம் குட்டிகொண்டு வந்தாய்..

இன்னும் கொஞ்சும் நிலவனும்
இந்த நொடி இந்த நொடி
எத்தனையோ காலம் தள்ளி

Vettaiyaadu Vilaiyaadu - Vennilave Velli Velli

விருமாண்டி - உன்னை விட இந்த உலகத்தில்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

வாக்கபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாருமில்லை எவளுமில்லை

உன்னை விட…..

என்னை விட……..

அல்லி கொடிய காத்து அசைக்குது
அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது

நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து ஜோடி சேருது
சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
கானாக்களா வந்து கொல்லுது
இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா….

உன்னை விட…
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கையில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி
போத்திக்கிற நமக்கு அது மூடு பனி

உன்னை விட……

உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே

(என்ன கேட்குற சாமிய?

நூறு ஜென்மம் உன் கூட

போதுமா?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை எவளுமில்லை
வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

என்னை விட …

உன்னை விட …

Virumaandi - Unnavida Oru

வின்னர் - எந்தன் உயிர் தோழியே

எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்
ஒரு கண்ணோ என் விழியை கீரியதே
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே
ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட

எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்
உன் நெற்றி சுழியில் சிக்கி, உன் கன்ன குழியில் விக்கி நின்றேன்
உன் நிலா கண்ணில் மூழ்கி, உன் காதல் பிரிவில் தங்கி
மூச்சிழந்தேன் அன்பே
உன் கூந்தல் அதை கொண்டு, உன் கொஞ்சும் மொழி கண்டு
நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ
செவ்விதழில் நுரை அள்ளி ஒரு பாதம் வரை கிள்ளி
உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ
எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்
நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்
ஒரு கண்ணோ என் விழியை கீரியதே
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே
ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட

Winner - Endhan Uyir Thozhiyae

Followers