Pages

Search This Blog

Thursday, December 29, 2016

தேவர் மகன் - வானம் தொட்டு போனா

ஆண் :
வானம் தொட்டு போனா.... மானமுள்ள சாமி...ஓஓ.
வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி
தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊருசனந்தான் தத்தளிச்சி வாடுதையா ஏழை இனந்தான்
போற்றி பாடடி பொண்ணே....

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் :
தேவர் காலடி மண்ணே….

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

***

ஆ&பெ குழு : ஓ ஓ ஓ ஓ......ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ ஆ ஆ ஆ... ஓ...ஓ...ஓ...ஓ ஓ ஓ ஓ......ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ ஆ ஆ ஆ... ஓ...ஓ...ஓ...

ஆண் : வெட்டறுவா தாங்கி…ஓ... வீசுகிற ஊரில்... ஓஓ
வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில்
வெள்ளக் கொடி தூக்கி வந்தவணும் நீயே…
நல்லவழி நீதான் சொல்லி என்ன லாபம் சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம்
கலங்காதே ராசா காலம் வரட்டும் நள்ளிரவு போனாப் பின்னே வெள்ளி முளைக்கும
போற்றி பாடடி பொண்ணே....

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் : தேவர் காலடி மண்ணே….

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் : தெக்கு திசை ஆண்ட மன்னர் இனந்தாம்…முக்குலத்தை சேர்ந்த தேவர் மகன்தான் ஓய்
போற்றி பாடடி பொண்ணே....

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் : தேவர் காலடி மண்ணே….

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

Devar Magan - Vanam Thottu

தேவர் மகன் - ஓ போற்றிப் பாடடி பொண்ணே

ஆண்-1 : ஓ போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்...
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்...

போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....

***

ஆண்குழு : என்ன சொல்ல மண்ணு வளம்....
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
மத்தவங்க கண்ணு படும்
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
என்ன சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்
நம்முயிர்க்கு மேல மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழ தெரியாதே
பெரிசல்லாம் சொன்னாங்க
சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க

பெண்குழு : போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்...
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்...
போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....

***

ஆண்குழு : முன்னோருக்கு முன்னோரெல்லாம்.....
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
இன்னாருன்னு கண்டு கொள்ள
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல
முக்குலத்தோர் கல்யானந்தான்
முத்து முத்து கம்பலந்தான்
எக்குலமும் வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு எக்காளம்தான்
அழகான சரிஜோடி ஆணைமேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்

பெண்குழு : போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்...
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்...
போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....

Devar Magan - Potripadadi

தேவர் மகன் - அட புதியது பிறந்தது பழையது

ஆண் : அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
ஒண்ணாசி பாரு இதுவரை ரெண்டான ஊரு
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா...

ஆண் &
பெண்குழு-1 : அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே

ஆண் : ஏய்..

***

ஆண் : கூடாம நம்மத்தான் கூறு கட்டி சிலர்
கோளாறு செஞ்சாங்க வேலி கட்டி
ஆத்தாடி அண்ணந்தான் தோளுதட்டி
அதை சாய்ச்சாரு மண்ணுல வாளில் வெட்டி
உள்ளத் துணிவு உள்ளவரு ஊருக்குதவும் நம்மவரு
பாத்தியத்தார் கொட்டுத்தான்

பெண்குழு-1 : கொட்டுத்தான் கொட்டுத்தான்

ஆண் : ஓசையெல்லாம் எட்டட்டும்

பெண்குழு : திக்கெட்டும் எட்டட்டும்

ஆண் : அடி அம்மாடி எல்லோரும் ஆட்டம் போடும் நாள்தானோ

ஆண் : அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
ஒண்ணாசி பாரு இதுவரை ரெண்டான ஊரு
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா...

ஆண் &
பெண்குழு : அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே

ஆண் : ஹஹ் ஹஹே....

பெண்குழு-1: அற்புதமா பெண்குழு-2: அதிசயமா

பெண்குழு-1: பூத்திருக்கு பெண்குழு-2: முத்து நகை

பெண்குழு-1: ரத்தினமா பெண்குழு-2: கெடைச்சிருக்கு

பெண்குழு-1: நிச்சயமா பெண்குழு-2: நம் பெருமை

பெண்குழு-1: காத்திருக்கும் பெண்குழு-2: பத்திரமா

பெண்குழு-1: சக்தியவ பெண்குழு-2: துணையிருப்பா

***

ஆண் : மூவேந்தர் பேர் இட்ட சீமையடி
நம்ம முப்பாட்டன் ஏர் விட்ட பூமியடி
வெள்ளாடு சிங்கத்தை சாடுமடி
இந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்சியடி
மண்ணின் பெருமை காத்திடணும்
அண்ணன் மொழியை கேட்டிடணும்

ஆண் : ஓர் இனத்து மக்கள் தான்

ஆண்குழு-1 &
பெண்குழு-1 : நாமெல்லாம் கண்ணம்மா

ஆண் : ஓர் வயித்து பிள்ளைதான்

ஆண்குழு-1 &
பெண்குழு-1 : எல்லோரும் பொன்னம்மா

ஆண் : அடி அம்மாடி தெம்மாங்கு பாட்டு பாடும் நாள்தானோ

ஆண் : அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
ஒண்ணாசி பாரு இதுவரை ரெண்டான ஊரு ஹைய்...
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா...

ஆண் &
ஆண்குழு-1 &
பெண்குழு-1: அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிந்தது வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே....ஏய்..

Devar Magan - Ada Puthiyathu

தர்மபத்தினி - நான் தேடும் செவ்வந்தி பூவிது

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழியில்லையோ
பருவ குயில் தவிக்கிறதே ஹே ஹே

சிறகிரண்டும் விரித்துவிட்டேன்
இளம் வயது தடுக்கிறதே

பொன்மானே என் யோகம்தான்

பெண்தானோ சந்தேகம்தான்

என் தேவி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

உன் விழி ஓடையில் நான் கலந்தேன்
பொன் கனி விழும் என தவம் கிடந்தேன்

பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

நான் தேடும்

செவ்வந்தி பூவிது

ஆ ஆ ஒரு நாள் பார்த்து 

அந்தியில் பூத்தது
ஆ ஆ

மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ

அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த சுகம் வருமோ

தல்லாடும் பொன் மேகம் நான்

எந்நாளும் உன் வானம் நான்

என் தேவா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்

தாலாட்டுப் பாடாமல் தூங்காது என் பிள்ளை
நான் தேடும்

செவ்வந்தி பூவிது

ஆ ஆ ஆ ஆ ஒரு நாள் பார்த்து 

அந்தியில் பூத்தது
ஆ ஆ ஆ ஆ பூவோ இது வாசம்

போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்

போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும்

செவ்வந்தி பூவிது

ஆ ஆ ஆ ஆ ஒரு நாள் பார்த்து 

அந்தியில் பூத்தது
ஆ ஆ

Dharma Pathini - Nan thedum sevvanthi poo

கீதாஞ்சலி - துள்ளி எழுந்துது பாட்டு

துள்ளி எழுந்துது பாட்டு 
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்

துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்

துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
உயிரே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம்
மனம் தானே நோகுது
மாலை முதல்... மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே

துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
அடியே ஒரு தூக்கம் போட்டு
நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது
நான் தேடிடும்... நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே இதோ அழைக்குதே

துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு

Geethanjali - Thulli yezhundhadhu paattu

கீதாஞ்சலி - ஒரு ஜீவன் அழைத்ததுv

ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் 
முள்ளை உள்ளே வைத்தாய்
என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் 
நெஞ்சில் கன்னம் வைத்தாய்
நீ இல்லை என்றால் 
என் வானில் என்றும் பகல் என்ற ஒன்றே கிடையாது
அன்பே நம் வாழ்வில் பிறிவென்பதில்லை 
ஆகாயம் ரெண்டாய் உடையாது
இன்று காதல் பிறந்தநாள் 
என் வாழ்வில் சிறந்த நாள்
மணமாலை சூடும் நாள் பார்க்கவே

ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

உன்னை நான் கண்ட நேரம் 
நெஞ்சில் மின்னல் உண்டானது
என்னை நீ கண்ட நேரம் 
எந்தன் நெஞ்சம் துண்டானது
காணாத அன்பை நான் இங்கு கண்டேன் 
காயங்கள் எல்லாம் பூவாக
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல 
கண்டேனே உன்னை தாயாக
மழை மேகம் பொழியுமா 
நிழல் தந்து விலகுமா
இனி மேலும் என்ன சந்தேகமா?

ஒரு ஜீவன் அழைத்தது 
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழவேண்டாம் 
இங்கு கண்ணீரும் விழவேண்டாம் 
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்

Geethanjali - Oru jeevan azaithathu

ஹே ராம் - நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி,
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

நான் என்ற சொல் இனி வேண்டாம்,
நீ என்பதே இனி நான் தான்,
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை,
இதுபோல் வேறேங்கும் சொர்க்கமில்லை,
உயிரே வா…

நாடகம் முடிந்த பின்னாலும்,
நடிப்பின்னும் தொடர்வது என்ன,
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே,
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே,
உயிரே வா…

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி,

நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி,

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,

அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி,

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி,

உயிரே வா…

Hey Ram - Nee Partha

Followers