Pages

Search This Blog

Thursday, December 29, 2016

இதயக்கோயில் - இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்…

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்

Idhaya Kovil - Idhayam Oru Kovil

இதயக்கோயில் - நான் பாடும் மௌன ராகம்

நான் பாடும் மௌன ராகம்…. என் காதல் ராணி இன்னும்…..

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

Idhaya Kovil - Naan Paadum Mouna Raagam

இதயக்கோயில் - வானுயர்ந்த சோலையிலே

வானுயர்ந்த சோலையிலே 
நீ நடந்த பாதையெல்லாம் 
நானிருந்து வாடுகின்றேன் 
நா வறண்டு பாடுகின்றேன்

(வானுயர்ந்த சோலையிலே)

வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாடியென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை

(வானுயர்ந்த சோலையிலே)


ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே 
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி 
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதையானதடி

(வானுயர்ந்த சோலையிலே)

Idhaya Kovil - Vaanuyarntha Solaiyile

பகல் நிலவு - பூமாலையே தோள் சேர வா

பூமாலையே தோள் சேர வா
பூமாலையே
ஏங்கும் இரு தோள்..
தோள் சேர வா
ஏங்கியது இளைய மனது,
இளைய மனது
இணையும் பொழுது,
இணையும் பொழுது, இளைய மனது
தீம்தன தீம்தன
இணையும் பொழுது
தீம்தன தீம்தன..ஆஅ..
பூஜை மணியோசை, பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே
ஏங்கும் இரு..
தோள் சேர வா
வாசம் வரும் பூ
பூமாலையே
ஏங்கும் இரு..
தோள் சேர வா
வாசம் வரும் பூ
நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
தேனினை தீண்டாத பூ இல்லையே
னனன…
நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே
என்னை உனக்கென்று கொடுத்தேன்
தேனினை தீண்டாத பூ இல்லையே
ஏங்கும் இளகாதல் மயில் மான்….
தெந்துளி பூவையில்
னனன…
பூவிழி மான் சாயல்
தேன் துளி பூவையில்
னனன…
பூவிழி மான் சாயல்
கன்னி எழுதும் வண்ணம் முழுது
வந்து தழுவும் ஜென்மம் முழுது
கன்னி எழுதும் வண்ணம் முழுது
வந்து தழுவும் ஜென்மம் முழுது
நாளும் தெரியாமல் காலம் தெரியாமல்
கலையெலாம் பழகுவோம் அனுதினம்
பூமாலையே
ஏங்கும் இரு..
தோள் சேர வா
வாசம் வரும் பூ
பூமாலையே
ஏங்கும் இரு..
தோள் சேர வா
லலல லலல.
கோடையில் வாடாத கோவில் புறா..
லலல…
காமனை காணாமல் காணும் கனா..
லலல…

கோடையில் வாடாத கோவில் புறா..
ராவில் தூங்காது எது…
காமனை காணமல் காணும் கனா..
நாளும் ஆனபோகும் எங்கோ…

விழிகளும் மூடாது
லலல…
விடிந்திட கூடாது
லலல…
விழிகளும் மூடாது
லலல…
விடிந்திட கூடாது

கன்னி இதயம் என்று உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்று உதயம்
இன்று தெரியும் இன்பம் புரியும்

காற்று சுதி மீட்ட தாளம் நதி கூட்ட
கனவுகள் இனிவரும் அனுபவம்
பூமாலையே
ஏங்கும் இரு..
தோள் சேர வா
வாசம் வரும் பூமாலையே
ஏங்கும் இரு
தோள் சேர வா
ஏங்கியது இளைய மனது,
இளைய மனது
இணையும் பொழுது,
இணையும் பொழுது, இளைய மனது
தீம்தன தீம்தன
இணையும் பொழுது
தீம்தன தீம்தன
பூஜை மணியோசை, பூவை மனதாசை
புடியதோர் உலகிலே பரந்ததே

பூமாலையே
ஏங்கும் இரு..
தோள் சேர வா
பூமாலையே
ஏங்கும் இரு தோள் சேர வா

Pagal Nilavu - Poo Maalayae

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

அம்மா கை கோர்த்து நடை பழகிய ஞாபகமே
தனியே நடை பழகி நான் தொலைந்தது ஞாபகமே
புத்தகம் நடுவே மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே
சின்ன குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்
வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

ரயிலின் பயணத்தில் மரம் நகர்ந்ததும் ஞாபகமே
சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே
காகித கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே
கட்ட பொம்மனின் கதையை கேட்ட ஞாபகம்
அட்டை கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

Unnidathil Ennai Koduthen - Eatho Oru Paatu En

Wednesday, December 28, 2016

5 ஸ்டார் - திரு திருடா திரு திருடா

ஈஸ்வரி  உன்னை  கல்யாணம்  பண்ணிக்க  ஆசை  படறேன் 
ஈஸ்வரி  உன்னை  கல்யாணம்  பண்ணிக்க  ஆசை  படறேன் 

திரு  திருடா  திரு  திருடா  தேன்சுவை   நானாட 
திரு  திருடா  திரு  திருடா   தீண்டியே  பாரடா 
கை  வாளால்  என்னை  தொட்டு 
முத்தத்தால்  வெட்டு  வெட்டு 
முந்தானை  கட்டில்  போட  வாராயா 
காலோடு  கால்கள்  எட்டு 
பேசாதே  பந்தல்  கட்டு 
காற்றோடு  கூட்டி  போக  வாராய்  வா 
வா  வந்தால்  சாவேன் 
விருடி  நீரை  போலே  வாராய்  வா 

திரு  திருடா  திரு  திருடா  திருமகன்  நானாட 
திரு  திருட  திரு  திருடா  திருடு  தேன்  பாரடா 

வா  மாயவா  இரவது  இனித்ததே 
கனவு  ஜனித்ததே 
இதயமும்  குளித்தே 
முகம்  தேடுது  முகமே 

மாயமே  கனியது  கனிந்ததே 
இனிமே  பிரிந்ததே 
மனமது  தனிந்ததே 
இளமை  தேடுதே  இதமே 

வாட்டும்  வகழகே  வயதை  குறைத்ததே  வாயா 
பூட்டும்  இதழ்களின்  பூட்டை  திறக்கவே  நீயா 
உன்  ஆசை  என்  ஆசை 
மலிந்து  போகும்  முன்னே  வாராய்  வா 

காமினி  இருவரி  குறுந்தொகை 
இணைந்த  குறு  நகை 
இதயத்தின்  நறுமுகை 
எதையும்  மானினம்  இழக்கும் 

நாமினி  இரு  இரு  மலர்களாய்  ஓர் 
கோடி  உயிர்களாய்  இருவருமே 
நிலைத்திட  எதையும்  நானினி  எதிர்ப்பேன் 

வாயமுத்ததினால்  வலிமே  ஊட்டவா  பெண்ணே 
வேரமுதத்தினால்  வேகம்  கூட்டவா  கண்ணே 
பேராசை  பேராசை 
பூவுக்குள்  பூகம்பமே  வாராய்  வா 
கண்ணோடு  உன்னை  கண்டால்  கண்ணீரும்  தேனாய்  மாறும் 
விண்ணோடு  போவதுட்க்குள்  வாராய்  வா 
தூரத்தில்  உன்னை  கண்டால் 
ஈரத்தில்  பெண்மை  வாழும் 
துயரம்  போதுமடா  வாராய்  வா 

வந்தால்  வாழ்வேன் 
தூங்காதே  பேதை  கொஞ்சம்  வாழ்வேனே

Five Star - Thiru Thiruda

5 ஸ்டார் - எங்கிருந்து வந்தாயடா

டும் டுமக்கு டும் 
அய்யா மாரே 

எங்கிருந்து வந்தாயடா 
என்னை பாடு படுத்த -நீ 
என்னை பாடு படுத்த
எங்கு கொண்டு சென்றாயட 
என்னை தேடி எடுக்க நான்
என்னை தேடி எடுக்க

இன்பம் துன்பம் துன்பம் இன்பம்
இன்பம் என்று நீ சுகம் ரெண்டும் கொடுக்க 
சுகம் ரெண்டும் குடுக்க 

நீ ...
எங்கிருந்து வந்தாயடா
என்னை பாடு படுத்த

வானவில்லாய் ஆணும் வண்ண மேடாய் பெண்ணும்
இருந்தால் இன்னும் வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும் கட்டை விரலாய் நானும் 
எழுதும் எதுவும் கவிதையாக மாறும் 
விடாமலே உன்னை தொடர்ந்திடும் என்னை
ஒரே ஒரு முறை மனதினில் நினை ... ம்ம்ம் 

என்னை என்ன செய்தாயடா 
எங்கிருந்து வந்தாயடா
என்னை பாடு படுத்த


அவ ஆளை பாத்தியாடி 
ஒல்லி குச்சி 
பாவம் பால் வடியும் முகம் 

வாசல் வாழயோடு வார்த்தயாடலாச்சு 
இனியும் பேச புதிய கதைகள் ஏது 
ஒருவர் வாழும் உலகில்
மௌனம் தானே பேச்சு 
மொழிகள் எதற்கு இருவர் இணையும் போது
விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள் 
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள் ... ம்ம்ம்

என்னை என்ன செய்தாயடா 

இன்பம் துன்பம் துன்பம் இன்பம்
இன்பம் என்று நீ சுகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் குடுக்க
நீ ...

எங்கிருந்து வந்தாயட
என்னை பாடு படுத்த

Five Star - Engirindhu Vandhayada

Followers