Pages

Search This Blog

Friday, November 25, 2016

சத்யம் - செல்லமே செல்லமே கொஞ்ச

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் உறைந்திடுவேனே
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கொஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

(இசை...)

பெண்: குரலில் உன் குரலில் மெல்லிசை சுகம் அறிவது போலே
விரலில் உன் விரலில் முன்பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வேல் அளி சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக்கனி சுகம் புரிவது போலே
கூந்தலில் எனை மீது தினந்தோறும் பரிமாறு
நீ நீச்சல் குளம்போலே நெடு நேரம் இளைப்பாறு
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் நள்ளிரவினில் இறைந்திடுவேனே

ஆண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

(இசை...)

பெண்: வே.......... நீயோ
வே.......... நானோ
வெட்கம் வெட்கம்
வே........ நீயோ
வே........ நானோ
நித்தம் நித்தம்

ஆண்: நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும்

பெண்: ஒளியில் மின்னொளியில் என் வளையலும் இடிவது போதும்
மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும்

ஆண்: போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்
பெண்: கண் தூங்கப் போனாலும் தூங்காது ஆள்வாசம்

ஆண்: சகாயமே உன் அருகினில் இளைப்பாறுவேனே
தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே

பெண்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே

ஆண்: மின்னலே மின்னலே உன்னைக் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

பெண்: ஓர் ஆயிரம் மெல் சுகங்களை கரைந்திடுவேனே
நூறு ஆயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்

Sathyam - Chellame Chellame

சத்யம் - என் அன்பே நானும் நீயின்றி

பெண்: என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

குழு: ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய
ஆத்தடி ஆசை அலை பாய
சேத்துக்கோ மீச கொடை சாய
கூத்தடி கோடை மழை பேய
ஏத்துக்கோ ஆடை உலை காய

பெண்: என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

(இசை...)

பெண்: தலை தொடும் மழையே...
செவி தொடும் இசையே...
இதழ் தொடும் சுவையே...
இனிப்பாயே....
விழி தொடும் திசையே...
விரல் தொடும் கனையே...
உடல் தொடும் உடையே...
இணைவாயே....
யாவும் நீயாய் மாறிப் போக நானும் நான் இல்லையே
மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே
தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால்

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

பெண்: என் அன்பே நானும் நீ இன்றி நானில்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை

(இசை...)

பெண்: கருநிறச் சிலையே...
அறுபது கலையே...
பரவச நிலையே...
பகல் நீயே....
இளகிய பனியே...
எழுதிய கவியே..
சுவை மிகு கனியே...
சுகம் நீயே....
கூடு பாவாய் தேகத்தோடு காதல் தினம் ஓடுதே
கூடு பாயும் தாகத்தோடு ஆசை நதி மோதுதே
தொடுவாயா என்னை தொடர்வேனே உன்னை

குழு: ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
ஆத்தடி அசந்தே போனாயா
ஆசையில் மெலிந்தே போனாயா
நாட்களில் நலிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

பெண்: ஓ... என் அன்பே நானும் நீயின்றி நானில்லை...
என் அன்பே யாவும் நீயின்றி வேறில்லை...
நான் உன்னில் உன்னில் என்பதால்..
என் தேடல் நீங்கிப் போனதே...
என்னில் நீயே என்பதால்..
என் காதல் மேலும் கூடுதே..
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...
காண வேண்டும் யாதும் நீயாகவே...
மாற வேண்டும் நானும் தாயாகவே...

Sathyam - En Anbe

சில்லுனு ஒரு காதல் - நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை

நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ.....

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது

நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா

சில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ
வா அன்பே நீயும் வந்தால்
செந்தணல் கூட பனிகட்டி போல மாறும் ஏ....ஏ....

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

Sillunu Oru Kaadhal - New York

சில்லுனு ஒரு காதல் - முன்பே வா என் அன்பே வா

முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே..

உன் முன்பே வா என் அன்பே வா..
கூட வா உயிரே வா..
உன் முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)

[பெண்]
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவுக்கு ஓர் பூ வைத்தாய்..
மண பூ வைத்து பூ வைத்து..
பூவுக்குள் தீ வைத்தாய்..
(ஒ ஓ...)

[ஆண்]
தேனி - நீ -நீ மழையில் ஆட
நாம் - நாம் -நாம் நனைந்து வாட
என் நாணத்தில் உன் ரத்தம்..
நீ ஆடைக்குள் உன் சத்தம் ............
.உயிரே........ ஒ ஓ...

[பெண்]
பொழி ஒரு சில நாளில் தனி
யாண்ட ஆண் தரையில் நீந்தும்

முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]
நான் நானா கேட்டேன் நானே என்னை நானே
உன் அன்பே வா என் அன்பே வா..

[பெண்]
முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்...

[இசை..]
[ஆண்]
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..
நாம் வாழும் வீட்டுக்குள்
வேர ராரும் வந்தாலே
தகுமா....?..

[பெண்]
தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா..
நான் சாயும் தோளில் மேல்
வேறுயாரும் சாய்ந்தாலே
தகுமா....?..

[ஆண்]
நீரும் செங்குள சேரும்
கலந்தது போலே
கலந்தவளா.....

[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நாங்கள் சொல்ல வேண்டும்
நீங்கள் யார்...

[பெண்]
முன்பே வா என் அன்பே வா
கூட வா உயிரே வா
உன் முன்பே வா என் அன்பே வா..
பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]
ரங்கோ ரங்கோலி......
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
ஜீல் ஜீல்...
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ ...)

Sillunu Oru Kaadhal - Munbe Vaa

மிஸ்டர் ரோமியோ - மெல்லிசையே

மெல்லிசையே
என் இதயத்தின்  மெல்லிசையே 
என் உறவுக்கு  இன்னிசையே 
என் உயிர் தொடும்  நல்லிசையே  

மெல்லிசையே  
என் இதயத்தின் மெல்லிசையே 
என் உறவுக்கு இன்னிசையே 
என் உயிர் தொடும் நல்லிசையே  

கண்ணை கொஞ்சம் திறந்தேன் 
கண்களுக்குள்  விழுந்தாய்   
எனது  விழிகளை  மூடி  கொண்டேன் 
சின்னஞ்சிறு  கண்களில்  உன்னை  சிறை  எடுத்தேன்  

கண்ணை கொஞ்சம் திறந்தேன் 
கண்களுக்குள் விழுந்தாய் 
எனது விழிகளை மூடி கொண்டேன் 
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன் 

மெல்லிசையே 
என் இதயத்தின் மெல்லிசையே 
என் உறவுக்கு இன்னிசையே 
என் உயிர் தொடும் நல்லிசையே  

எத்தனை இரவு 
உனக்காக  விழித்திருந்தேன் 
உறங்காமல்  தவித்திருந்தேன் 
விண்மீன்கள்  எறிதுரிந்தேன்   

எத்தனை நிலவை 
உனக்காக வேருதிருதேன் 
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
 உன்னை கண்டு   உயிர்  தெளிந்தேன் 

நீ  ஒரு  பாதி  என்றும்
நான்  ஒரு  பாதி 
காதல்  ஜோதி  

என்னவனே  
நிலம்  கடல்  ஆனாலும்  
அழியாது  இந்த  பந்தம்

கண்ணை  கொஞ்சம் திறந்தேன் 
கண்களுக்குள் விழுந்தாய் 
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்

கண்ணை கொஞ்சம் திறந்தேன் 
கண்களுக்குள் விழுந்தாய் 
எனது விழிகளை மூடி கொண்டேன் 
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன் 

மன்மத  விதையை  
மனதோடு  விதைத்து  யார் 
மழை  ஊற்றி  வளர்த்தது  யார் 
மலர்க்காடு  பறித்து  யார் 

காதல்  தீயை 
நெய்  கொண்டு  வளர்த்தது  யார்  
கை  கொண்டு  மறைத்து  யார்  
அதை  வந்து  அணைப்பது  யார்

ஆயிரம்  காலம் வாழும்
காதலும் வாழும் 
ஆயுள் நீளும்

பெண்ணழகே 
மண்ணும்  விண்ணும்  போனாலு ம் 
மாறாது  இந்த  சொந்தம் 

கண்ணை  கொஞ்சம் திறந்தேன் 
கண்களுக்குள் விழுந்தாய் 
எனது விழிகளை மூடி கொண்டேன் 
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்  

கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய் 
எனது விழிகளை மூடி கொண்டேன் 
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்

Mr. Romeo - Mel Isaiyae

திருடா திருடா - புத்தம் புது பூமி வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

பழமொழி கொஞ்சம் வழி விடு!
உன் அருகிலே ஓர் இடம் கொடு!
புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு!
பூமியில் சில மாறுதல் தனை வர விடு!

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சப்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலைக் கொள்ளும் வேண்டும்

பஞ்சப் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

Thiruda Thiruda - Putham Pudhu Bhoomi

புதிய முகம் - சம்போ சம்போ சம்போ

சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ

உட்சி மேகம் என்னை பார்த்ததும் கொஞ்சம் நீர் சிந்தும் அல்லவா
உப்பு காற்று என்னை தீண்டினால் சற்றே தித்திக்கும் அல்லவா

என்னை பெண் கேட்டு சீசர் வந்தான் எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான்
யாரும் இல்லாத நேரத்திலே சொல்லாமல் பிரம்மன் வந்தான்

பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா

பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா

சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ

மேடை போட்டு மெத்தை கொள்ளவே ஜாடை செய்தாலே போதுமே
எங்கள் வீடு காஷ்மீர் கம்பலி இருவர் குளிர்த்தாங்க கூடுமே

இந்த மோகத்தில் என்ன குற்றம் கடல் யோகத்தின் ஊச்ச கட்டம்

அந்த சொர்கத்தில் சேர்கட்டுமா இன்றைக்கு உன்னை மட்டும்

பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா

சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ

Pudhiya Mugam - Sambo Sambo

Followers