Pages

Search This Blog

Wednesday, November 23, 2016

ஏப்ரல் மாதத்தில் - கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்

சிக்கு புக்கு சிக்கு புக்கு
சிக்கு புக்கு சிக்கு புக்கு
சிக்கு புக்கு சிக்கு புக்கு
சிக்கு புக்கு சிக்கு புக்கு

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்
நெஞ்சோடு பூச்செடி வைக்கும்
நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பன்னிரெண்டும் நட்பிருக்கும்

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில் (இசை)

நனநனநானா.. நானனநானா...
நனநனநானா.. நானனநானா...
நனநனநனநன நனநன னா..ஹோ..

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து
இங்கே ஒன்றானோம்..ஏஹெஹே...
எல்லோர் வீடும் ஒன்றாய் மாற
ஏழு எட்டு தாய் கண்டோம் ஆஹா


தலை கோர தோழன் வந்தால்
துயரங்கள் ஓடி போகும்
முடியெல்லாம் நரைக்கும் போதும்
நட்போடு நாம் வாழ்வோம்

கல்லூரி தந்த பாடம் தான்
காலத்தால் மறந்து போகுமே
கல்லூரி நட்பு தானடா என்றும் மறக்காதே
கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்

காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்

தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்

எல்லா நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில் 


ஓ..ஓஹோ..ஓ..ஹொஹோ..ஓஹோ..
ஓ..ஓஹோ..ஓ..ஹொஹோ..ஓஹோ..ஓஹோ..

காதல் மனது புகையை போலே
மறைத்தால் தெரிந்து விடும்..ஏஹெஹே...
காதலில் தானே பூக்களும் கூட
மலைகளை உடைத்துவிடும்..ஹா..

பெண்:ஏதேதோ மாற்றம் வந்து
என்னைத்தான் துண்டு போடுதே
ஏகாந்த காற்று வந்து
என் நெஞ்சை தொட்டு போகுதே

நின்றாலும் நடக்கும் போதிலும்
நண்பர்கள் சிரிக்கும் போதிலும்
ஒட்டாமல் வாழ்கிறேன்
அடி என்னிடம் நான் இல்லை

பெண்:கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடரும்
ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்

நெஞ்சோடு பூச்செடி வைக்கும்
நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பன்னிரெண்டும் நட்பிருக்கும் ஹேஹே

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடரும்
ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்

April Maadhathil - Kanavugal Pookkum

ஏப்ரல் மாதத்தில் - மனசே மனசே மனசில் பாரம்

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே
நட்பினை எதிர்பார்க்குமே.. ஹே.. யே...யே...யே..யே..

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
மனசே மனசே யே...யே... ஒ.. ஒ..

நேற்றைக்கு கண்ட கனவுகள்
இன்றைக்கு உண்ண உணவுகள்
ஒன்றாக எல்லோரும் பரிமாறினோம்
வீட்டுக்குள் தோன்றும் சோகமும்
நட்புக்குள் மறந்து போகிறோம்
நகைச்சுவை குறும்போடு நடமாடினோம்
நட்பு என்ற வார்த்தைக்குள்
நாமும் வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள் இருக்கின்றதா
பிரிவு என்ற வார்த்தைக்குள்
நாமும் சென்று வாழத் தான்
வலிமை இருக்கின்றதா... ஹே.. யே...யே...யே..

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம் 
மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம் 

ஆறேழு ஆண்டு போனதும் 
அங்கங்கே வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில் நண்பன் முகம் தேடுவோம்
எங்கேயோ பார்த்த ஞாபகம் 
என்றே தான் சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம் நாம் காணுவோம்
சின்ன சின்ன சண்டைகள் 
சின்ன சின்ன லீலைகள்
இன்றுடன் எல்லாமே முடிகின்றதே
சொல்ல வந்த காதல்கள் 
சொல்லி விட்ட காதல்கள்
சுமைகளின் சுமையானதே.. ஹே.. யே...யே...யே..

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்
இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே
நட்பினை எதிர்பார்க்குமே

மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

மனசே மனசே யே... ஒ.. ஒ..

April Maadhathil - Manasae Manasae

ஏப்ரல் மாதத்தில் - ஏ நெஞ்சே என் நெஞ்சே

படபட படவென அடிக்குது இதயம்
தடதட தடவென துடிக்குது இமைகள் 
சலசல சலவென சுழருது விழிகள் 

அடுத்தது யாரோ அடுத்தது யாரோ 
எடுப்பது யாரோ எடுப்பது யாரோ எனதா உனதா 
என்னவே என்னவே 
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது ... 

ஏ நெஞ்சே என் நெஞ்சே 
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய் 
ஹே ஹே ஹே 
காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான்
, ம்ம் -ம்ம்-ம்ம் ஈர்க்கும் அந்த திசையில் இன்று வீழ்ந்தேன் நான், 

மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு 
சில்லென்று மனதை தொடுதே 

என் நிலவில் மாற்றம் எதிலும் தடுமாற்றம் 
பார்வை பரிமாற்றம் ஒரு ஆனந்த ஏக்கம் 
ஓ - ஓ - யிய -யிய - யிய 
கண்ணை விட்டு வெளியே 
காணும் ஒரு கனவே 
வரைந்து அழைத்தாலும் 
இனி வாராது தூக்கம் 
வெகு நேரம் பேசி பின்பு 
விடை பெற்று போகும் நேரம் 
நாள் அடிகள் நடக்கும் கால்கள் 
நடை மறந்து திரும்பும் ஏனோ 
பேசாத நேரம் தானே 
பெரிதாக தோன்றும் அன்பே 
காலங்கள் தோக்கும் இங்கே ... 

நேற்று வரும் கனவில்
நிலவு வரவில்லை 
அடம்பிடிக்கும் நிலவை 
இனி நான் என்றோ பார்ப்பேன் 

ஓ ஓ .... காதல் வரும்போது 
கனவுகளும் மாறும் 
நீ விரும்பும் நிலவை 
இனி தினம் தோரும் பார்ப்பாய் 
யார் யாரோ எழுதி சென்ற 
புரியாத கவிதை எல்லாம் 
நான் கேட்டு ரசித்தேன் இன்று 
நான் பார்த்த மரமும் இலையும் 
புது போர்வை போர்த்திக்கொண்டு 
புது பார்வை பார்த்துக்கொண்டு 
நம்மை பார்த்து சிரிகின்றதே 

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்

April Maadhathil - Yeh Nenje

ஏப்ரல் மாதத்தில் - பொய் சொல்ல இந்த மனசுக்கு

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே..
இந்தக் கனவுக்குள் பிழை இல்லையே..
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்
(பொய் சொல்ல..)

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கிக்கொள்ள..
யாரிடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல..
திட்டமிட்டே நாம் செய்த குற்றமல்ல..
போராடக் களம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே!
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே
(பொய் சொல்ல..)

உன் பிரிவை நான் என்றும் தாங்கிக் கொள்ள..
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை..
இப்படி நான் உன்முன்னே வந்து சொல்ல
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும்
மரம் சொல்லுமே
(பொய் சொல்ல..)

April Maadhathil - Poi Solla Manasukku

காக்க காக்க - தூது வருமா தூது வருமா

தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
(தூது வருமா..)

நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே
பார்த்தேனே வீட்டின் உள்ளே 
சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் 
வைத்தேனே தெற்கு மூலையிலே
பலப்பலத் தடை தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே என்னைத் தூக்கி சில்லவா
(தூது வருமா..)

கறுப்பிலே உடைகள் அணிந்தேன்
இருட்டிலே காத்துக்கிடந்தேன் யட்சன் போலே
நீயும் வந்தாய் சரசங்கள் செய்தபடியே
சவுக்கடி கொடுக்கும் யுவனே 
வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
மறுபடி வருவாய் என்று துடித்தேன்
நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா
(தூது வருமா..)

Kaakha Kaakha - Thoodhu Varuma

காக்க காக்க - உயிரின் உயிரே உயிரின் உயிரே

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்


சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான்…நான்…நான்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

இரவின் போர்வை என்னை சுழ்ந்து…
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாரயோ விரல்கள் தாரயோ

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்து வெட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…அனலின் மேலிருந்தேன்
காலைபனியாக என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட எதிரி ஆகிவிட…யுகங்கள் ஆக வேடம்
மாறிவிட…
அணைத்து கொண்டாயே…பின்பு ஏனோ சென்றாய்

உயிரின் உயிரே…உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்

Kaakha Kaakha - Uyirin Uyirae

காக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி

என்னை கொஞ்சம் மாற்றி…
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

ஒன்னே ஒன்னு சொல்லணும்…..
ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?
நாணம் மாறி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன்… நீ சொல்வாயா
யாரை நான் கேட்பேன்… நீயே சொல்வாயா

என்னை கொஞ்சம் மாற்றி…

என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

வருகிற வழிகளில் மலர்களின் கூட்டமுண்டு
ஒரு முறை கூட நின்று ரசித்ததில்லை
இன்று மட்டும் கொஞ்சம் நின்று ஒரு பூவை கிள்ளி கொண்டு
சிரிப்புடன் செல்வேனென்று நினைத்ததில்லை இல்லை

நீ கிள்ளும் பூக்களை… நான் சூடி கொள்ளவே
என் இன்றை எண்ணம் இன்றே வந்தாசே
ஆனாலும் நேரிலே… எப்போதும் போலவே
இயல்பாக பேசி போவது என்றாச்சே
என்னை கொஞ்சம் மாற்றி… என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ என்னை மெல்ல மெல்ல கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
ஒரு சொல்லால் என்னை வீழ்த்தி செல்லாதே

சிறகுகள் நீளுதே
பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே
துள்ளி துள்ளி போகுதே
புதுவித அனுபவம்
நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும்
அள்ளி அள்ளி பருகுதே

என்னை இங்கே வர செய்தாய்
என்னனவோ பேச செய்தாய்
புன்னகைகள் பூக்க செய்தாய் இன்னும் என்ன
அருகினில் அமர்ந்து என்னை
உற்று உற்று பார்க்கும் உந்தன்
துரு துரு பார்வைக்கும் தான் அர்த்தம் என்ன? என்ன?

என் பார்வை புதுசு தான்
என் பேச்சும் புதுசு தான்
உன்னாலே நானும் மாறிபோனேனே
கூட்டத்தில் என்னை தான்
உன் கண்கள் தேடனும்

என்றெல்லாம் எண்ணும் பைத்தியம் ஆனேனே

என்னை கொஞ்சம் மாற்றி…

என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே
நேற்றும் இன்றும் வேறா?
இன்று காணும் நானும் நானா?
உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே

ஒன்னே ஒன்னு சொல்லணும்
உன் முகத்தை பாத்து சொல்லணும்
தனிமை கொஞ்சம் கிடைக்க கூடாதா?
நாணம் மாறி போனதே
என் நளினம் கூடி போனதே
அது தெரிந்தால் நீயே சொல்ல கூடாதா
யாரை நான் கேட்பேன்… நீ சொல்வாயா
யாரை நான் கேட்பேன்… நீயே சொல்வாயா
நீயே சொல்வாயா நீயே சொல்வா…யா…
நீயே சொல்வாயா

Kaakha Kaakha - Ennai Konjam

Followers