Pages

Search This Blog

Wednesday, January 29, 2014

நிழல்கள் - இ்து ஒரு பொன்மாலைப் பொழுது

இ்து ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

(இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

(இது ஒரு)

Nizhalgal - Ithu Oru Pon Malai

நெஞ்சிருக்கும் வரை - ஒரு முறை பிறந்தேன்

1. ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே தோற்றேன்
2. நீயே என் இதயமடி, நீயே என் ஜீவனடி
1. 2.

உந்தன் நெற்றி மீதிலே
துளி வேர்வை வரலாகுமா
சின்னதாக நீயும்தான்
முகம் சுழித்தால் மனம் தாங்குமா
உன் கண்ணிலே துளி நீரையும்
நீ சிந்தவும் விடமாட்டேன்
உன் நிழலையும் தரை மீதிலே
நடமாடவும் விடமாட்டேன்
ஒரே உடல், ஒரே உயிர், ஒரே மனம்
நினைக்கையில் இனிக்கிறதே
2.

காற்று வீசும் மாலையில்
கடற்கரையில் நடை போடணும்
உன்மடிதான் பாய்மரம்
படகேறி திசைமாறணும்
ஒளி வீசிடும் இரு கண்கள்தான்
வழி காட்டிடும் கலங்கரையா
கரைசேரவே மனம் இல்லையே
என தோன்றினால் அது பிழையா
நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து
பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன்
நீயே என் இதயமடா
நீயே என் ஜீவனடா

Nenjirukkum Varai - Oru Murrai Pirenthen

Tuesday, January 28, 2014

நான் பேச நினைப்பதெல்லாம் - பூங்குயில் ராகமே

பூங்குயில் ராகமே.... புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்

பூங்குயில் ராகமே.... புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே

கண்மணி கண்மணி...

ஜென்மம் ஜென்மங்கள் ஒன்றாக நாம் சேரனும்
கண்ணே நான் காணும் ஆகாயம் நீயாகனும்

என்றும் ஓயாது ஓயாது உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே என் சூரியோதயம்
அன்பே நீ இல்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சில் உன் ஆலயம்
நீ என் உயிர் ஓவியம்
சொர்க்கமே வா
செல்வமே வா
ஜீவனே நீ வா வா

பூங்குயில் ராகமே...புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்

இன்று என் பாதை உன்னாலே பூப்பூத்தது
பூவே உன் கண்ணில் என் கோயில் தெரிகின்றது
உந்தன் பேர் கூட சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக நமக்காக விடிகின்றது
ஓடும் கங்கை நதி இல்லை என்றாகலாம்
வானம் நூறாகலாம் யாவும் பொய்யாகலாம்
உன்னையே தினம் எண்ணிடும்
நம் காதலே என்றும் வாழும்

பூங்குயில் ராகமே...புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி

Naan Pesa Ninaipathellam - Poonguyil Ragame (male)

நான் பேச நினைப்பதெல்லாம் - ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு
என்னைப் பாராட்ட நீ இல்லையே
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

சோலைக் குயில் தேடி என்னைப் பார்க்க வந்துவிடும்
ஒரு பாடல் கேட்டு வரும்
ஆடி வெள்ளம் தேடி வந்து ராகம் சொல்லித் தரும்
எந்தன் ராகம் தீர்த்து விடும்
நானா பாடுற பாட்டு
அந்த தென்றலும் அதைக் கேட்டு
வசந்தம் இன்று பூவில் வரும்
நாளை எந்தன் வாசல் வரும்
வசந்தம் இன்று பூவில் வரும்
நாளை எந்தன் வாசல் வரும்

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடிக் கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

சோகம் எல்லாம் போகும் ஒரு தேதி சொல்லட்டுமா ?
நல்ல சேதி சொல்லட்டுமா ?
அன்பில் இந்த மண்ணை வெல்லும் வித்தை சொல்லட்டுமா ?
வெற்றி முத்தை அள்ளட்டுமா ?
ஒத்தையடிப் பாதை இதில் தேறும் வரும் நாளை
ஒத்தையடிப் பாதை இதில் தேறும் வரும் நாளை
எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும்
எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும்

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு
என்னைப் பாராட்ட நீ இல்லையே
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

Naan Pesa Ninaipathellam - Yalean Kiliyae (duet)

நான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..
பாடவா உன் பாடலை

வாடை பூங்காற்று என்னை தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்
வாடை பூங்காற்று என்னை தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்

கடலோடு அலை போல உறவாட வேண்டும்
இலை மோதும் மலர் போல எனை மூட வேண்டும்
என் தேகம் எங்கும் உன் கானம் தாங்கும்
நீ வந்து கேளாமல் ஏங்கும் தமிழ் சங்கம்

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை

உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்

உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை
நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை
பூ மேகம் இங்கே ஆகாயம் எங்கே
நீ சென்ற வழி பார்த்து வாடும் உன் பூ இங்கே

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை

Naan Paadum Paadal - Paadavaa Un Paadalai

நான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா வெண் மேகமே

சீர் கொண்டு வா வெண் மேகமே
இது இனிய வசந்த காலம்
இலைகளில் இளமை துளிரும் கோலம்
இதுவே இனி என்றும் நிரந்தரம்

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊட்டும் முன்னே
ஆலாபனை .............
ஆலாபனை ஆராதனை
கையும் கையும் சேரும்
காதல் கல்யாணம் ஓஓஓஓ
காமன் போகும் தேரில்
காதல் ஊர்கோலம்

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும் போது இன்பங்கள் கூட
என்னென்பதோ ஓஓஓஓஓஓ
என்னென்பதோ ஏனென்பதோ
பாடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ

(சீர் கொண்டு வா வெண் மேகமே...)

Naan Paadum Paadal - Seer Kondu Vaa

மறுபடியும் - நல்லதோர் வீணை செய்தே

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

பூ மாலை ஓர் தோளில் தான்
போட நினைத்தாள் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர்
பொருளும் இல்லையே
நாள் ஒரு தோளினில்
மாலையை மாற்றிடும்
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நானும் பண்பென்பதா
இது ஞாயமா

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

ஆனந்த நீரோடையில்
ஆட நினைத்தேன் நான்
நான் பார்த்த கோதாவரி
கானல் வரியா
தாள் மனை அகன்றதும்
தலைவனை அடைந்ததும்
நான் செய்த தீர்மானம் தான்
அதற்கிந்த சன்மானம் தான்
அவமானம் தான்

நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ

Marupadiyum - Nalladhor Veenai 

Followers