Pages

Search This Blog

Tuesday, December 31, 2013

நியூ - தொட்டால் பூ மலரும்

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை
ஹோய் ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை
எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஆஆஆ…

பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை
வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்
சுவர்க்கம் தெரிவதில்லை ஓ சுவர்க்கம் தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா…

New - Thootal Poo Malarum

நியூ - காலையில் தினமும் கண் விழித்தால்

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?

இமை போல் இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?

இமை போல் இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேன் அம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமயல்ல பாரம் சுகம் தான் அம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?

இமை போல் இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா

தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மனி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி
உன்னை கொஞ்ச என்னுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
தலைவா
நீ எந்தன் தலைசன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
கனிசே பூ விழி தாலோ
பொன்மணி தாலேலோ

பொன்மணி தாலேலோ?

New - Kalayil Thinamum

சத்ரியன் - மாலையில் யாரோ மனதோடு

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

Sathriyan - Maalayil Yaro

நியூ - சக்கர இனிக்கிற சக்கர

புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா
(புத்தகம்..)

சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர
சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர
நீ அக்கர நான் இக்கர
நீ அக்கர நான் இக்கர
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர

ஹேய் ஹேய் கேள்விக்கு பதில் என்ன தெரியாது
கலங்கி நிக்கிறேன் புரியாது
நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன்
நூறு மார்க்கு இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன்
உத்தரவின்றி உள்ளே வா சக்கர இனிக்கிற சக்கர
உத்தரவின்றி உள்ளே வா எறும்புக்கு என்ன அக்கர
உத்தரவின்றி உள்ளே வா சக்கர இனிக்கிற சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர
நீ அக்கர நான் இக்கர
நீ அக்கர நான் இக்கர
என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர

கிட்ட வந்து தட்டு நீ கேட்காதைய்யா தவிலு
அது கேட்டா தட்டும் விரலு
சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி
அந்த சங்கதி என்ன யோசி
என்னது பண்ணுது சிங்காரி
இப்படி நிக்கிற ஹொய்யாரி
உன் இரு கண் வெடி பொல்லாது
உள்ளது எப்போதும் சொல்லாது
ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திடுதே
உத்தரவின்றி உள்ளே வா
பூத்திரி ஏத்தி வைத்து அதை படித்திட
உத்தரவின்றி உள்ளே வா
மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட
வா வா சக்கர இனிக்கிர சக்கர
அதில் எறும்புக்கு என்ன அக்கர

ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா
நான் பாவப்பட்ட பெண்ணா
மெத்தை மீது தாவாது
தத்தை ஒன்று வாடும்
என் வித்தை காண தேடும்

தொட்டதும் பட்டதும் பூ மலரும்
முத்திட முத்திட தேன் சிந்தும்
கற்றது உன்னிடம் கையளவு
உள்ளது என்னிடம் கடலளவு
இலக்கிய மாலை நேரம் மனம் மயங்குது
உத்தரவின்றி உள்ளே வா
சுகம் என்னும் வெல்லம் பாய
மடை திறந்தது
உத்தரவின்றி உள்ளே வா
இனி ஒரு கேள்விக்கான விடை க்டையாது வா வா
(சக்கர..)

New - Sakkarai

சங்கமம் - வராக நதிக்கரை ஓரம் ஒரே

ஓ...கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே
---
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பறந்துவந்து...ம்ம்ம்ம்ம்...விருந்து கொடு...ம்ம்ம்ம்ம்
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு
ஓஓஓ காவேரிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி
---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
---
நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நிழலுக்குள்ள...ம்ம்ம்ம்ம்...குடியிருக்கேன்...ம்ம்ம்ம்ம்
ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓஓஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு
தாப்பா தெரிச்சிடுச்சு
---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான

Sangamam - Varaha Nadhikarai

சங்கமம் - மழைத்துளி மழைத்துளி மண்ணில்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி..)

ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்
(மழைத்துளி..)

தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி..)

மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே
நீ சொந்தக்காலிலே நில்லு
தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது
முள் தைப்பது கால் அறியாது
மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
கலைக்க்கொரு தோல்வி கிடையாது கிடையாது

Sangamam - Mazhai Thulli

சங்கமம் - ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்சே வணக்கமுங்க வணக்கமுங்க

(சல்சல்)

என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் நீ இல்லை இல்லை என்ற போதும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமய்யா நிக்காது ஒரு போதும்

வணக்கம் வணக்கமுங்க ஆஹா வணக்கம் வணக்கமுங்க
வணக்கமுங்க...வணக்கமுங்க

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவெச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்

Sangamam - Allala Kanda

Followers