Pages

Search This Blog

Friday, December 27, 2013

பார்த்தாலே பரவசம் - அழகே சுகமா

அழகே  சுகமா ?
உன்  கோபங்கள்  சுகமா?
அழகே சுகமா? 

உன்  கோபங்கள் சுகமா?
அன்பே  சுகமா?
உன்  தாபங்கள்  சுகமா?
அன்பே சுகமா?
உன்  தாபங்கள் சுகமா?
தலைவா  சுகமா?  சுகமா?
உன்  தனிமை  சுகமா?  சுகமா?
வீடு வாசல்  சுகமா?  உன்  வீட்டு  தோட்டம் சுகமா?
பூக்கள்  எல்லாம்  சுகமா?  உன்  பொய்கள்  எல்லாம் சுகமா-ஆ ?

அன்பே  சுகமா ?  உன்  தாபங்கள் சுகமா-ஆ ?

சிறுமை  பட்டு  தவித்தேன்
என்  சிறகில்  ஒன்றை முறித்தேன்
ஒற்றை  சிறகில் ஊன  பறவை
எத்தனை தூரம்  பறப்பேன் ?
அன்பே உன்னை அழைத்தேன்  
உன்  அஹிம்சை  இம்சை  பொறுப்பேன் 
சீத  குளித்த  நெருப்பில்  என்னை  
குளிக்க  சொன்னால்  குளிப்பேன்
அழுத  நீரில்   கரைகள்  போய்விடும்   தெரியாதா ?
குறைகள்  உள்ளது   மனித  உறவுகள்   புரியாதா ?
இது  கண்ணீர் நடத்தும்  பேச்சு  வார்த்தை 
உடைந்த  மனங்கள்   ஒட்டாதா ?
இது கண்ணீர் நடத்தும்  பேச்சு வார்த்தை 
உடைந்த மனங்கள்  ஒட்டாதா?

அழகே சுகமா?  அன்பே சுகமா?
உன்  கோபங்கள் சுகமா?
உன்  தாபங்கள் சுகமா?
தலைவா சுகமா?  சுகமா?
உன்  தனிமை சுகமா?  சுகமா?
கன்னம்  ரெண்டு சுகமா?
அதில்  கடைசி முத்தம் சுகமா? 
உந்தன்  கட்டில்  சுகமா ?
என்  ஒற்றை  தலையணை  சுகமா -ஆ ?

Paarthale Paravasam - Azhagae Sugama

16 வயதினிலே - ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி

கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
சின்ன குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவன் பாட்டிலுண்டு
பரம்பரை கதையிலுண்டு கதையல்ல மகராசி
காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும் சாப்பிட்டு வர வா
சம்பந்தம் பண்ணா உனக்கு சம்மதம்தானா
காக்கையில்லா சீமையே ஏ...

காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாக்கு வச்சி நேரம் பாத்து வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன் நீங்க சாப்பிட்டு வாங்க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க
அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மனம் கேளுங்களே
அட ஏண்டி என்ன மஞ்சளுக்கு கேக்குறீயா
பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான்
கிட்டப்பாவின் பாட்டை கேட்டு சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா
மேடைக்கு போனா எனக்கு வீட்டுல பொண்ணு
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு
என் திறமையை காட்டட்டுமா
இரண்டு சங்கதியை போடட்டுமா

16 Vayathinile - Aattu Kutti Muttaiyittu

16 வயதினிலே - செந்தூரப்பூவே செந்தூரப்பூவே

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
நீ கொஞ்சம் சொல்லாயோ
(செந்தூரப்பூவே..)

தென்றலை தூதுவிட்டு ஒரு சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னி பருவத்தில் வந்த நினப்பே வண்ணப்பூவே
தென்றல் காற்றே என்னை தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

நீலக்கருங்குயிலே தென்னை சோலை குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
காணும் வழியெங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப்பூவே தென்றல் காற்றே
என்னைத்தேடி சுகம் வருமோ
(செந்தூரப்பூவே..)

16 Vayathinile - Senthoora Poovae

அபியும் நானும் - மூங்கில் விட்டு

மூங்கில் விட்டு
சென்ற பின்னே
அந்த பாடொடு
மூங்கிலுக்கு உறவு என்ன

பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்த பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன

காற்றை போல்
வெயில் ஒன்று
கடந்து போன பின்
கை காட்டி மரம்
கொள்ளும்
தனிமை என்ன

மாயம் போல்
கலைகின்ற
மனித வாழ்க்கையில்
சொந்தங்கள் சொல்லி செல்லும்
சேதி என்ன

பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள
படைத்தவன்
புரிகின்ற
சூழ்ச்சி என்ன

Abhiyum Naanum - Moongil Vittu

பொக்கிஷம் - உலகம் நினைவில் இல்லை

உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்

மதிய வெயில் அடித்தும்
மனதில் மழை பொழிந்த
இனிய மணித் துளியில் குளிக்கிறேன்

கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்து பூக்கும் பரவசம்
பல கோடி வீணை சேர்ந்து மீட்டும் அனுபவம்

இது காதலின் அழகிய தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகிய தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா

எனது மனக் குஹையில் புதிய ஒளிப் paravu

புவியில் மறுபடியும் பிறக்கிறேன்
இமையில் படபடப்பு
இதழின் குறுஞ்சிரிப்பு
வளர்ந்த குழந்தை என தவழ்கிறேன்

என்னை நான் ஏனோ இழக்கிறேன்
இந்த ஊனை உயிரை துறக்கிறேன்
இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்
இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்

Pokkisham - Ulagam Ninaivil Illai

பொக்கிஷம் - சிறு புன்னகை ஒருவரின்

சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

உறவைத் தொடர்ந்து வரும் உயிர்கள் பழகவரும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை இரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்கக் கேட்கப் புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
(சிறு புன்னகை..)

வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைகிறேன்
அறிவு வெளியுலகில் அடையும்
அவஸ்தைகளைப் பொழியும்
நிலவொளியில் பொசுக்கினேன்
இன்பம் யாவும் காட்டும் மனதிரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும்
நீயும் நானும் ஒருவனே
நமைப்பேச்சில் யார்க்கும் தோழன் யாரு
இறைவனே..
(சிறு புன்னகை..)

Pokkisham - Siru Punnagai

பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
(நிலா..)

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
(நிலா..)

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
 
 
Pokkisham - Nila Ne Vaanam

Followers