Pages

Search This Blog

Friday, December 27, 2013

அபியும் நானும் - மூங்கில் விட்டு

மூங்கில் விட்டு
சென்ற பின்னே
அந்த பாடொடு
மூங்கிலுக்கு உறவு என்ன

பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்த பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன

காற்றை போல்
வெயில் ஒன்று
கடந்து போன பின்
கை காட்டி மரம்
கொள்ளும்
தனிமை என்ன

மாயம் போல்
கலைகின்ற
மனித வாழ்க்கையில்
சொந்தங்கள் சொல்லி செல்லும்
சேதி என்ன

பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள
படைத்தவன்
புரிகின்ற
சூழ்ச்சி என்ன

Abhiyum Naanum - Moongil Vittu

பொக்கிஷம் - உலகம் நினைவில் இல்லை

உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்

மதிய வெயில் அடித்தும்
மனதில் மழை பொழிந்த
இனிய மணித் துளியில் குளிக்கிறேன்

கண்ணை மோதும் காற்றில் அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம்
பல கோடி பூக்கள் சேர்ந்து பூக்கும் பரவசம்
பல கோடி வீணை சேர்ந்து மீட்டும் அனுபவம்

இது காதலின் அழகிய தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகிய தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா

எனது மனக் குஹையில் புதிய ஒளிப் paravu

புவியில் மறுபடியும் பிறக்கிறேன்
இமையில் படபடப்பு
இதழின் குறுஞ்சிரிப்பு
வளர்ந்த குழந்தை என தவழ்கிறேன்

என்னை நான் ஏனோ இழக்கிறேன்
இந்த ஊனை உயிரை துறக்கிறேன்
இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்
இந்த காதல் பேயை ஆசையோடு அணைக்கிறேன்

Pokkisham - Ulagam Ninaivil Illai

பொக்கிஷம் - சிறு புன்னகை ஒருவரின்

சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

உறவைத் தொடர்ந்து வரும் உயிர்கள் பழகவரும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை இரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்கக் கேட்கப் புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
(சிறு புன்னகை..)

வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைகிறேன்
அறிவு வெளியுலகில் அடையும்
அவஸ்தைகளைப் பொழியும்
நிலவொளியில் பொசுக்கினேன்
இன்பம் யாவும் காட்டும் மனதிரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும்
நீயும் நானும் ஒருவனே
நமைப்பேச்சில் யார்க்கும் தோழன் யாரு
இறைவனே..
(சிறு புன்னகை..)

Pokkisham - Siru Punnagai

பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
(நிலா..)

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
(நிலா..)

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
 
 
Pokkisham - Nila Ne Vaanam

அபியும் நானும் - வா வா என் தேவதையே

வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா

(வா வா என் தேவதையே)

வான் மிதக்கும் கண்களுக்கு மயிலிறகால் மையிடவா
மார் உதைக்கும் கால்களுக்கு மணிக்கொலுசு நானிடவா

(வா வா என் தேவதையே)

செல்லமகள் அழுகைப் போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன்மகளின் புன்னகைப் போல்
யுகப் பூக்களுக்குப் புன்னகைக்கத் தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல
இந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலைப் போல
ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே

(வா வா என் தேவதையே)

பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வமகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகைக் கண்டேன்
சிற்றாடைக் கட்டி அவள் சிரித்த போது
என்னைப் பெற்றவள் சாயல் என்று பேசிக் கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது
இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்

(வா வா என் தேவதையே)

Abhiyum Naanum - Vaa Vaa En Devadhai

Thursday, December 26, 2013

ஜி - டிங் டொங் கோவில் மணி

டிங் டொங் கோவில் மணி நான் கேட்டேன்..
உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்..
நீ கேட்டது ஆசையில் எதிரொலி..
நீ தந்தது காதலின் உயிரொலி..
( டிங் டொங்.. )

சொல்லாத காதல் சொல்ல.. சொல்லாகி வந்தேன்...
நீ பேச ... இது நீ பேச...
சொல் ஏது இனி நான் பேச??
கனவுகளே.. கனவுகளே.. பகலிரவு நீள்கிறதே..
இதயத்திலே.. இரவு பகல் உன்னினைவு ஆள்கிறதே..
சற்று முன் நிலவரம்.. எந்தன் நெஞ்சில் கலவரம்...
( டிங் டொங்.. )

புல் தூங்கும்.. பூவும் தூங்கும்..
புது காற்றும் தூங்கும்..
தூங்காது நம் கண்கள் தான்..
தேம்பாதே... இது காதல் தான்..
சிரித்த நிலா பிடிக்கவில்லை..
பிடிக்கிறது உன் முகம் தான்..
கும்கும் இசை இனிக்கவில்லை..
இனிக்கிறது உன் பெயர் தான்..
எழுதிவைத்த சித்திரம்..
எந்தன் நெஞ்சில் பத்திரம்..
( டிங் டொங்.. )

Ji - Ding Dong

இந்தியன் - பச்சைக் கிளிகள் தோளோடு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூராணாந்தம் வாழ்வே பேராணாந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயஸரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓராணாந்தம் பந்தம் பேராணாந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

Indian - Pachai Kiligal

Followers