Pages

Search This Blog

Thursday, December 26, 2013

பூவிழி வாசலிலே - சின்ன சின்ன ரோஜா பூவே

சின்ன சின்ன ரோஜா பூவே
செல்லக் கண்ணே நீ யாரு
தப்பி வந்த சிப்பி முத்தே
உன்னைப் பெற்ற தாய் யாரு

சொல்லிக் கொள்ள வாயும் இல்லை
அள்ளிக்கொள்ள தாயும் இல்லை
ஏனோ சோதனை
இளநெஞ்சில் வேதனை

சின்ன பிஞ்சு நெஞ்சுக்குள்ளே என்ன என்ன ஆசையுண்டோ
உள்ளம் தன்னை மூடிவைத்த தெய்வம் வந்தா சொல்லும் இங்கே
ஊரும் இல்லை பேரும் இல்லை
உண்மை சொல்ல யாரும் இல்லை
நீயும் இனி நானும் ஒரு ஜீவன் தானடா
சோலைக்கிளி போலே என் தோளில் ஆடடா
இது பேசா ஓவியம்
இதில் சோகம் ஆயிரம்

(சின்ன சின்ன)

கண்ணில் உன்னைக் காணும்போது எண்ணம் எங்கோ போகுதைய்யா
என்னை விட்டுப் போன பிள்ளை இங்கே உந்தன் கோலம் கொண்டு
வந்ததென்று எண்ணுகின்றேன் வாழ்த்து சொல்லி பாடுகின்றேன்
கங்கை நீ என்றால் கரை இங்கு நானடா
வானம் நான் என்றால் விடிவெள்ளி நீயடா
என் வாழ்வில் நிம்மதி அது உந்தன் சன்னதி

(சின்ன சின்ன)

Poovizhi Vasalile - Chinna Chinna Roja Poove

மே மாதம் - என் மேல் விழுந்த

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்
(என் மேல்)

மண்ணைத் திறந்தால் நீரிருக்கும் - என்
மனதைத் திறந்தால் நீயிருப்பாய்
ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் - என்
உயிரைத் திறந்தால் நீயிருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும் - என்
வயதைத் திறந்தால் நீயிருப்பாய்
இரவைத் திறந்தால் பகல் இருக்கும் - என்
இமையைத் திறந்தால் நீயிருப்பாய்
(என் மேல்)

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ
(என் மேல்)

May Madham - En Mel Vizhunda

மண் வாசனை - பொத்திவச்ச மல்லிக மொட்டு

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே..................

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே..................

மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேத்து சொல்லி இருக்கு..

இது சாயங்காலமா மடிசாயும் காலமா

முல்ல பூசூடு மெல்ல பாய்போடு

அட வாடகாத்து சூடுயேத்துது........

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே..................

ஆத்துகுள்ள நேத்து ஒன்னனெனச்சேன்...
வெக்க நேரம் போக மஞ்ச குளிச்சேன்
கொஞ்சம் நேரம் மறஞ்சி பாக்கவா
இல்ல முதுகுதேய்க்கவா...

அது கூடாது இது தாங்காது..

சின்ன காம்புதானே பூவதாங்குது...

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்தவிட்டு

பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளனதே.....

ஆளானதே ரொம்ப நாளனதே.....

Mann Vasanai - Poththi Vachcha

Tuesday, December 24, 2013

உழைப்பாளி - அம்மா அம்மா

அம்மா அம்மா...
எந்தன் ஆருயிரே....
கண்ணின் மணியே...
தெய்வம் நீயே...
ஓ....ஓ....ஓ...ஓ..

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே-இரு
கண்ணின் மணியே
ஓ...ஓ....ஓ...ஓ...
தெய்வம் நீயே
ஓ...ஓ...ஓ...ஓ...

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே

பூவிழி ஓரம் ஓர் துளி நீரும்
நீ வடித்தால் மனம் தாங்காது
பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும்
நான் துடிப்பேன் வலி தாளாது

பத்து மாசம் சுமந்து-பட்ட
பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க-அள்ளிக்
கையில் எடுத்த

தாயும் நீயே...
தவமிருந்தாயே...

வாடுதம்மா பிள்ளையே.......
வாட்டுவதோ.. என்னை நீ..யே.!

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே

பாதைகள் மாறி ஓடிய கன்றை
தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா
கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால்
தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா

நல்ல காலம் பிறக்க-உன்னை
நானும் அறிந்தேன்
உந்தன் கண்கள் திறக்க-இங்கு
பாடல் படித்தேன்

போதும் போதும்...
பிரிந்தது போதும்....

வாடுதம்மா பிள்ளையே...
வாட்டுவதோ என்னை நீ..யே...

Uzhaippali - Amma Amma

உழைப்பாளி - உழைப்பாளி இல்லாத நாடு

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லேயா அர ஹோயா..
அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்
எங்கும் இல்லேயா அர ஹோயா.. (இசை)

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடு தான்
எங்கும் இல்லேயா அர ஹோயா..
அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான்
எங்கும் இல்லேயா அர ஹோயா..

ஆண் : அட சாமியோ சாமி அப்படி இருந்திட்டா காமி
கூலியோ கூலி எங்கள நம்பித்தான் பூமி
பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

ஆண் : அவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

ஆண் : ஹோயா...

***

ஆண் : தலை மேலே சாப்பாடு
கொண்டாரும் கப்பக்கெழங்கே

ஆண்குழு : அம்மம்மா ஹா.. அங்கம்மா ஹா..

ஆண் : சில போல ஷோக்காக
உன்னை தான் பெத்து போட்டுட்டா

ஆண்குழு : உங்கம்மா ஹா.. மங்கம்மா ஹா..

ஆண் : அட பலவூட்டு பலகாரம்
ஒண்ணான கூட்டாஞ்சோறு தான்

ஆண்குழு : சின்னையா ஹா.. பொன்னையா ஹா..

ஆண் : ஆ.. பல சாதி இது போல
ஒண்ணானா சண்டை வருமா ஹொய்

ஆண்குழு : செல்லையா ஹா.. சொல்லையா ஹா..

ஆண் : நித்தமும் பாடுபட்டு உழைக்கும்
யாவரும் ஓரினம் தான்
சத்திய வார்த்தை இதை
நமக்கு சொல்லுது மே தினம் தான்
நாமெல்லாம் வேலை நிறுத்தம்
செஞ்சா தாங்காது நாடு முழுதும்
நாம் இன்றி என்ன நடக்கும்
நம்ம கை தாண்டா ஓங்கி இருக்கும்
அட அடிச்சாலும் புடிச்சாலும்
அண்ணன் தம்பி நீயும் நானுடா ஹோய்..

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

***

ஆண் : பணக்காரன் குடி ஏற பாட்டாளி வீடு கட்டுறான்

ஆண்குழு : கல்லாலே ஹே.. மண்ணாலே ஹே..

ஆண் : ஆனாலும் அவனுக்கோர் வீடில்ல யாரு கேக்குறா

ஆண்குழு : துக்கம் தான் ஹா.. சொன்னாலே ஹா..

ஆண் : பல பேரு தான் உடுத்த நெசவாளி நூல நெய்யுறான்

ஆண்குழு : பொன்னான ஹா.. கையாலே ஹா..

ஆண் : அட ஆனாலும் அவனுடுத்த
வேட்டி இல்ல யாரு கேக்குறா ஹோய்

ஆண்குழு : துக்கம் தான் ஹா.. சொன்னாலே ஹா..

ஆண் : சம்பளம் வாங்கியதும் முழுசா
வீட்டிலே சேர்த்திடுங்க
மத்தியில் யார் பறிப்பா
பறிச்சா முட்டிய பேத்துடுங்க
அஞ்சாம தொழில செஞ்சா
நம்ம யாராச்சும் அசைப்பானா
ஒண்ணாக இருந்தாக்கா
இங்கே வாலாட்ட நெனைப்பானா
அட அடிச்சாலும் புடிச்சாலும்
அண்ணன் தம்பி நீயும் நானுடா
ஓ..ஹோ..ஹொய்

ஆண் : உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

ஆண் : அவன் உழைப்பாலே பிழைக்காத
பேரு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

ஆண் &
ஆண்குழு : அட சாமியோ சாமி அப்படி இருந்திட்டா காமி
கூலியோ கூலி எங்கள நம்பித்தான் பூமி

ஆண் : பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்
உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும்

ஆண்குழு : இல்லேயா அர ஹோயா..

ஆண் &
ஆண்குழு : அவன் உழைப்பாலே பிழைக்காத
பேரு தான் எங்கும் இல்லேயா

ஆண்குழு : அர ஹோயா..

Uzhaippali - Uzhaippali Illatha

உழைப்பாளி - முத்திரை எப்போதும் குத்திட

முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
அழைத்தேனே நானா விடுவேனா போனா அட வாயா

முத்திரை இப்போது குத்திட தப்பாது ராஜா ராஜா
என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா

சரணம் - 1

ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு
ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு

பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது
உன்னையும் விடாது இந்த வனம்
பத்தையும் வச்சாச்சு பக்கமும் வந்தாச்சு
கொத்திட நிலாவைக் கொஞ்சு தினம்

என் வழி வராது சின்ன மணி
உன்னிடம் சிக்காது வைர மணி
விளையாட்டுக் காட்டாதே


முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா

சரணம் - 2

பூந்தோகை எங்கும் அடி கண்டாலும் வாங்கும்
உனையே விரும்பும்
ஓயாத ஆசை உன்னை நான் பார்க்கும் வேளை
மனதில் அரும்பும்

ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும்
ஏழைகள் ஏறிட விட்டதில்லை
உன்னிடம் கோடான கோடி இருந்தாலும்
என் மனம் ஆசையும் பட்டதில்லை

என் உயிர் மண் மீது உள்ளவரை
என் மனமும் எந்தன் பள்ளி அரை
பிடிவாதம் கூடாதே

முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா
என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
விழமாட்டேன் நானே வளைக்காதே வீணே
அடி மானே ஒ ஒ ஒ

ஹேய் முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா

Uzhaippali - Muthirai Eppodhu

உழைப்பாளி - ஒரு மைனா மைனா குருவி

ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது 
மாயங்கள்  காட்டுது  ஹூய்  ஹூய் 
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல 
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹூய்  ஹூய் 
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள் 
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள் 
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள் 
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள் 

ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது 
மாயங்க ள்  காட்டுது  ஹோஒய்  ஹோஒய் 
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல 
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹோஒய்  ஹோஒய் 

மேல்நாட்டில் பெண்களிடம்  பார்க்காத  சங்கதியை
கீழ்நாட்டில்  பார்க்கும்  பொழுது
அதை  பாராட்டி  பாட்டு  எழுது
பாவடை  கட்டி  கொண்ட  பாலாடை  போலிருக்க
போராடும்  இந்த  மனது
இது  பொல்லாத  காளை  வயது
chinna    பூச்சரமே  ஒட்டிக்கோ  கட்டிக்கோ   என்னை  சேர்த்து
இன்னும்  தேவை  என்றால்  ஒத்துக்கோ  கத்துக்கோ  என்னை  சேர்த்து

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்


ஏதோ ஏதோ  நேரம்  வந்தால்  காதோரம்
மெல்ல  கூறி  ஏராளம்  அள்ளித்  தருவேன்
அது  போதாமல்  மீண்டும்  வருவேன்
நான்  தானே  நீச்சல்   கோலம்
நாள்தோறும்  நீ  வந்து  ஓயாமால்  நீச்சல்  பழகு
அடி  தாங்காது  உந்தன்  அழகு
அன்பு  காயமெல்லாம்  இன்றைக்கும்  என்றைக்கும்  இன்பமாகும்
அன்பின்  நேரம்  எல்லாம்  இஷ்டம்போல்  கட்டத்தான்  இந்த  தேகம் 


ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது

மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள்

 

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய்
அது நைசா நைசா தழுவி நதி போல
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்

Uzhaippali - Oru Maina

Followers